AI DOCTOR : இனி கண்ணாடி பார்த்தே நோயை தெரிந்து கொள்ளலாம் : ஜியோவின் ஆரோக்ய AI க்ளீனிக்!

Jio Aarogya AI Clinic in AI Summit 2026 : மருத்துவரின் ஆலோசனையின்றி ஜியோ ஆரோக்ய AI-யை பயன்படுத்த முடியாதபடி பாதுகாப்பான முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் ஜியோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
Akash Ambani Showed Jio Aarogya AI ecosystem to PM Narendra Modi at India AI Impact Summit 2026 in Delhi
Akash Ambani Showed Jio Aarogya AI ecosystem to PM Narendra Modi at India AI Impact Summit 2026 in Delhisource: google
2 min read

Jio Aarogya AI Clinic in AI Summit 2026 : இந்தியாவின் ஏஐ இம்பாக்ட் உச்சி மாநாடு பிப். 16 ஆம் தேதி தொடங்கி பிப்.20 ஆம் தேதி வரை 5 நாட்கள் நடைபெறுகிறது.

டெல்லி பாரத் மண்டபத்தில் நடைபெற்ற இந்த மாநாட்டை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

21ஆம் தேதி வரை மாநாடு நீட்டிப்பு

இந்த மாநாட்டில் உலக நாடுகளின் ஏஐ கண்டுபிடிப்புகள் காட்சிபடுத்தப்பட்டன.

வரும் 20ஆம் தேதி வரைன் நடைபெறவிருந்த மாநாடு தற்போது 21 ஆம் தேதி(India AI Impact Summit 2026) வரையில் நீட்டிக்கப்பட்டுள்ளது.

உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்த ஜியோ AI

ஏஐ இம்பாக்ட் உச்சி மாநாட்டில் இந்திய நிறுவனங்கள் மற்றும் வெளிநாட்டு நிறுவனங்கள் தங்களின் ஏஐ கண்டுபிடிப்புகளை காட்சிபடுத்தும் வகையில் சிறப்பு கண்காட்சி அமைக்கபட்டிருந்தது.

இந்த கண்காட்சியில் ஜியோவின் ஏஐ கண்டுபிடிப்பு அனைத்து நாடுகளின் பார்வையை தன் மீது பதிய வைத்து ஏஐ இம்பாக்ட் உச்சி மாநாட்டில் கவனத்தைப் பெற்றுள்ளது.

ஜியோ ஆரோக்யா AI

இந்தியாவின் ஏஐ இம்பாக்ட் உச்சி மாநாட்டில் ஜியோ குழுமமானது ஜியோ ஆரோக்ய AI என்ற மாடலை அறிமுகப்படுத்தி அசத்தியுள்ளது.

மருத்துவப்பயனாளர்களின் ஆரம்ப சுகாதார சேவையை வேகமாகவும், எளிதாகவும், மலிவாகவும் மாற்றக்கூடிய AI மாடலாக உருவாக்கப்பட்டுள்ளது.

ஏஐ க்ளினிக்குகள் :

தொலைதூர பகுதிகளில் உள்ள மக்களுக்கும் சிறந்த சேவையை வழங்கும் வகையில் நாட்டின் ஆரம்ப சுகாதார நிலையங்கள் AI -யால் செயல்படுத்தப்பட்ட க்ளினிக்குகளாக மாற்ற வழிவகை செய்யும் என்று ஜியோ நிறுவனம் கூறுகிறது.

ஆரம்ப கட்டத்திலேயே நோயை கண்டறிதல்

இந்த AI மாடல் நோயாளியின் முழு சுகாதார மருத்துவ சோதனைகள் செய்து, அதில் ஏதேனும் நோய்க்கான உபாதைகள், அறிகுறிகள் இருந்தால் அவை கண்டறியப்பட்டு, சிறப்பு மருத்துவரையும் பரிந்துரை செய்கிறது.

இதன் மூலம் ஆரம்ப கட்டத்திலேயே நோய் கண்டறியப்பட்டு, சிகிச்சை முறை துரிதப்படுத்துகிறது. இதுதான் இந்த AI மாடலின் நோக்கம் என்றும் அந்நிறுவனம் கூறுகிறது.

என்னென்ன வசதி உள்ளது?

இந்த ஜியோ ஆரோக்ய AI மாடலில் இரண்டு நிலைகள் உள்ளது. ஒன்று, ஸ்மார்ட் மிர்ரர். மற்றொன்று டாக்டர் வாய்ஸ் AI.

பரிசோதிக்கும் முறை

முதலில் பயனாளர் இந்த AI மாடலில் வடிவமைகப்பட்டுள்ள ஸ்மார்ட் மிரர் முன்பு நிற்க வேண்டும்.

இந்த AI சாதனம் பயனாளியின் கண்கள், தோல் மற்றும் பிற காட்சி அறிகுறிகளின் அடிப்படையில் பயனாளரின் மருத்துவ தரவுகளை பகுப்பாய்வு செய்யும்.

அதன்பின்னர், பயனாளியின் ஆரம்ப சுகாதார மதிப்பீட்டை தயார் செய்து வழங்கும்.

ஜியோ ஆரோக்ய AI செயல்படும் விதம்:

AI மாடல் வழங்கும் ஆரம்ப சுகாதார பகுப்பாய்வைக் கொண்டு பயனாளிகள் தங்களுக்கு என்ன சந்தேகம் இருக்கிறது என்பதை வாய்ஸ் AI டாக்டரிடம் கேட்கலாம்.

இப்படித் தான் இந்த ஜியோ ஆரோக்ய AI மாடல் செயல்படும் என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

வாய்ஸ் டாக்டர் எந்த மொழியில் பேசும்?

வாய்ஸ் டாக்டர் எஐ பல இந்திய மொழிகளில் பேசும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

அதனால் வெவ்வேறு மாநிலங்களைச் சேர்ந்த மக்கள் தங்கள் மொழியிலேயே வாய்ஸ் டாக்டர் ஏஐ-யை பயன்படுத்திக்கொள்ளலாம்.

மருத்துவரின் ஆலோசனையின்றி NO சிகிச்சை:

மருத்துவரின் அனுமதியின்றி, ஆலோசனையின்றி எல்லோராலும் இந்த AI மாடலை பயன்படுத்த முடியாது. ஜியோ ஆரோக்யா AI பல பிரிவுகளாக பயனாளிகளை வகைப்படுத்துகிறது.

அவசர சிகிச்சைக்கு முன்னுரிமை :

அதில் அவசர சிகிச்சை தேவைப்படும் பயனாளர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது. இதனால் மருத்துவர்களுக்கும் பணிச்சுமை குறையும் என்று சொல்லப்படுகிறது.

இந்த AI மாடல் ஆரம்ப கட்ட ஆலோசனைகளை மட்டுமே வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

மருத்துவரின் ஆலோசனை முக்கியம்:

மருத்துவரின் ஆலோசனையின்றி இதை பயன்படுத்த முடியாதபடி பாதுகாப்பான முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் ஜியோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in