அமேசான் பிரைம் டே 2026 : அதிரடி ஆஃபர்கள் மற்றும் புதிய தயாரிப்புகளுடன் 10 வது ஆண்டு விற்பனைத் திருவிழா!

அமேசான் பிரைம் டே 2026 விற்பனை ஜூலை 4 முதல் ஜூலை 6 வரை நடைபெறுகிறது. ஸ்மார்ட்போன்கள், லேப்டாப்கள் மீது அதிரடி தள்ளுபடி மற்றும் பிரைம் மெம்பர்ஷிப் கட்டணக் குறைப்பு குறித்த முழு விவரம்!
Amazon Prime Day 2026: 10th Anniversary Sale Extravaganza with Massive Offers and New Products!
Amazon Prime Day 2026: 10th Anniversary Sale Extravaganza with Massive Offers and New Products!source:Ai generated
1 min read

அமேசான் பிரைம் டே சிறப்பு திருவிழா

ஆன்லைன் ஷாப்பிங் பிரியர்கள் ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருக்கும் அமேசான் நிறுவனத்தின் 'பிரைம் டே' விற்பனைத் திருவிழா, இந்த ஆண்டு தனது 10வது மைல்கல்லை எட்டுகிறது.

3 நாட்கள் அதிரடி ஆஃபர்

இந்த சிறப்பு விற்பனை திருவிழா வரும் ஜூலை 4 முதல் ஜூலை 6 வரை மூன்று நாட்களுக்கு பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது.

பிரைம் சந்தாரர்கள் உற்சாகம்

ஆண்டுதோறும் பிரைம் சந்தாதாரர்களுக்காக மட்டுமே நடத்தப்படும் இந்த பிரத்யேக நிகழ்வு, இந்த முறையும் எண்ணற்ற தள்ளுபடி சலுகைகளுடன் தொடங்கவுள்ளது.இதனால் பிரைம் சந்தாரர்கள் உற்சாகமாக உள்ளனர்.

சலுகை மழையில் பொருட்கள்

’பிரைம் டே’ மூன்று நாள் ஷாப்பிங் திருவிழாவில், ஸ்மார்ட்போன்கள், லேப்டாப்கள், ஸ்மார்ட் டிவிகள், வீட்டு உபயோக எலக்ட்ரானிக்ஸ் சாதனங்கள், ஆடம்பர ஃபேஷன் உடைகள் மற்றும் அழகு சாதனப் பொருட்கள் என ஆயிரக்கணக்கான தயாரிப்புகள் மிகக் குறைந்த விலையில் விற்பனைக்கு வரவுள்ளன.

பிரைம் மெம்பர்ஷிப் கட்டணத்தில் அதிரடி குறைப்பு

அமேசான் நிறுவனம் புதிய வாடிக்கையாளர்களைக் கவரும் நோக்கில், தனது பிரைம் சந்தா கட்டணத்தில் அதிரடி சலுகையை அறிவித்துள்ளது.

  • அதன்படி பொதுவாக ரூ.1,499 ஆக இருக்கும் வருடாந்திர பிரைம் மெம்பர்ஷிப் கட்டணம், தற்போது சலுகை விலையாக ரூ.999 ஆக குறைக்கப்பட்டுள்ளது.

  • அதேபோல் பட்ஜெட் வாடிக்கையாளர்களுக்காக 'பிரைம் லைட்' திட்டமும் ரூ.599 என்ற சிறப்பு விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

500க்கும் மேற்பட்ட புதிய தயாரிப்புகளின் அறிமுகம்

இந்த ஆண்டு விற்பனையின் சிறப்பம்சமாக, சாம்சங் (Samsung), ஒன்பிளஸ் (OnePlus) உள்ளிட்ட முன்னணி பிராண்டுகள் உட்பட 500-க்கும் மேற்பட்ட புதிய தயாரிப்புகள் இந்த தளத்தில் முதன்முறையாக அறிமுகமாக உள்ளன.

இது தவிர, குறிப்பிட்ட வங்கி கார்டுகளுக்கான கூடுதல் தள்ளுபடிகள், சுலப தவணை முறை (EMI), எக்ஸ்சேஞ்ச் ஆஃபர்கள் மற்றும் கேஷ்பேக் சலுகைகளும் வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கவுள்ளன.

தொழில்நுட்ப சாதனங்கள் முதல் அன்றாட வீட்டுத் தேவைகள் வரை அனைத்தையும் குறைந்த விலையில் வாங்க அமேசான் பிரைம் டே 2026 ஒரு சிறந்த வாய்ப்பு என்பதால் specialவாடிக்கையாளர்கள் ஜூலை 4ஆம் தேதிக்காக காத்திருக்கின்றனர்.

======

logo
Thamizh Alai
www.thamizhalai.in