

Indian Post Office Exam Notification 2026 : இதற்கான விண்ணப்பத்தை https://indiapost.gov.in/gdsonlineengagement என்ற இணையதளம் வழியாக பெற்றுக்கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. .
எந்தெந்த பதவிக்கு காலிப் பணியிடம்
கல்வி தகுதி பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தாலே நீங்கள் இந்த வேலைவாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளலாம் . கிளை போஸ்ட் மாஸ்டர் மற்றும் உதவி கிளை போஸ்ட் மாஸ்டர் பதவிகளில் (India Post GDS Dak Sevaks 2026) தேசிய அளவில் 28,740 காலிப்பணியிடங்களுக்கு அறிவிப்பானாது வெளியிடப்பட்டுள்ளது .
தமிழ்நாட்டில் காலிப்பணியிடங்களின் விவரம்
குறிப்பாக தமிழ்நாட்டில் மட்டும் 2,009 காலிப்பணியிடங்கள் உள்ளன.மாவட்ட வாரியாக காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பை இணையதளம் வாயிலாக தெரிந்துகொண்டு விண்ணப்பிக்கலாம் என்ற அறிவிப்பு வெளியிட்டுள்ளது .
10ம் வகுப்பு தேர்ச்சி போதும்
இப்பதவிக்கு விண்ணப்பிக்க கணிதம் மற்றும் ஆங்கிலம் கொண்டு 10-ம் வகுப்பு தேர்ச்சிப் பெற்றிருதலும் , கணினி உபயோகிக்கவும், சைக்கிள் ஓட்டத் தெரிந்திருப்பது அவசியமானதாகும்.
வயது வரம்பு 49 வரை
வயது வரம்பு 18 முதல் 49 வரை இருக்கலாம் என்றும் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், ஆதிதிராவிடர், பழங்குடியினர், பொருளாதார ரீதியாக பின்தங்கியவர்கள், மாற்றுத்திறனாளிகள் அகியோர்களுக்கு அரசின் விதிமுறைகளின் அடிப்படைய்லி தளர்வு வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளது .
எவ்வளவு ஊதியம் வழங்கப்படும்
தேர்ச்சி பெற்று பதவிக்கு செல்லும் நபர்களுக்கு கிளை போஸ்ட் மாஸ்டர் பதவிக்கு ரூ.12,000 முதல் ரூ.29,380 வரையும், உதவி கிளை போஸ்ட் மாஸ்டர் பதவிக்கு ரூ.10,000 முதல் ரூ.24,470 வரையும் சம்பளம் வழங்கப்படும் என அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எவ்வாறு விண்ணப்பிப்பது
எழுத்து வழி தேர்ச்சியோ அல்லது நேரடி அணுகுமுறையே இதற்கு கிடையாது, முற்றிலும் பத்தாம் வகுப்பு தேர்ச்சி அடிப்படையிலேயே பரிசீலனை செய்யப்படுகிறது. முக்கியமாக சான்றிதழ் சரிபார்ப்பு முக்கியமானது .
மேலும் இப்பணியிடங்களுக்கு இணையதளம் வழியாக மட்டுமே விண்ணப்பிக்க இயலும். https://indiapost.gov.in/gdsonlineengagement என்ற இணையதளம் வழியாக உரிய தகவல்களை அளித்து விண்ணப்பிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.
விண்ணப்பிபதற்கான கட்டண முறை
விண்ணப்ப கட்டணமாக ரூ.100 செலுத்த வேண்டும் என்றும் , பெண்கள், எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள், திருநங்கை விண்ணப்பதார்களுக்கு கட்டணம் இலவசம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது .
விண்ணப்பிக்க கடைசி நாள்
ஜனவரி 31-ம் தேதி முதல் விண்ணப்ப பதிவு தொடங்கிய நிலையில், பிப்ரவரி 14-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்றும் கட்டணத்துடன் கூடிய விண்ணப்பத்தை பிப்ரவரி 2 முதல் பிப்ரவரி 16-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் , விண்ணப்ப திருத்தத்தை பிப்ரவரி 18 முதல் பிப்ரவரி 19 வரை மேற்கொள்ளலாம் என்றும் குறிப்பிட்டுள்ளது.
==============