எலான் மஸ்கை பின்னுக்கு தள்ளி "மூளை சிப்" தொழில்நுட்பத்தில் சீனா சாதனை!

எலான் மஸ்க்கின் 'நியூராலிங்க் நிறுவனம் இத்தகைய சோதனைகளில் ஈடுபட்டு வந்த நிலையில், அவரை முந்திக்கொண்டு சீனா இந்தச் சாதனையைப் படைத்துள்ளது.
China achieves a breakthrough in brain-chip technology, overtaking Elon Musk.
China achieves a breakthrough in brain-chip technology, overtaking Elon Musk. google
1 min read

எலான் மஸ்கை முந்தி சீனா சாதனை

தொழில்நுட்ப உலகில் அமெரிக்காவுக்கு இணையாக , உலகின் முதல் வணிகரீதியான 'மூளை சிப் தொழில்நுட்பத்தில் சீனா முந்தி வெற்றிகரமாக அறிமுகப்படுத்தியுள்ளது.

அமெரிக்க பில்லியனர்எலான் மஸ்க்கின் 'நியூராலிங்க்' நிறுவனம் இத்தகைய சோதனைகளில் ஈடுபட்டு வந்த நிலையில், அவரை முந்திக்கொண்டு சீனா இந்தச் சாதனையைப் படைத்துள்ளது.

எண்ணங்கள் மூலமாகவே தன்னிச்சையாக இயங்க முடியும்

இந்த சிப் தொழிநுட்பம் ,மனித மூளையின் சிந்திக்கும் திறனை நேரடியாகக் கணினியுடன் இணைக்கும் வகையில் இந்தச் சிறிய வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் பக்கவாதம் மற்றும் நரம்பியல் குறைபாடுகளால் பாதிக்கப்பட்ட நோயாளிகள், தங்களின் எண்ணங்கள் மூலமாகவே கணினி, கைப்பேசி மற்றும் செயற்கை உறுப்புகளைத் தன்னிச்சையாக இயக்க முடியும் என சீன விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

சிப் தொழில்நுட்பம் : சீனாவிற்கு அதிகரிக்கும் வணிக ஆதிக்கம்

சீனாவின் இந்த சிப் , தொழில்நுட்பம் மருத்துவத் துறையில் மாற்றத்தக்க புரட்சியை ஏற்படுத்தவுள்ளது .

மேலும் இந்தத் தொழில்நுட்பம், உலகளாவிய வணிகச் சந்தையில் சீனாவுக்குப் பெரும் பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஆதிக்கத்தைத் தேடித்தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

===================

logo
Thamizh Alai
www.thamizhalai.in