கொசுக்களை அழிக்க கூகுளின் புதிய தொழில்நுட்பம் : Launch ஆகும் 3.2 கோடி ஆண் கொசுக்கள்!

கொசுக்களால் பரவும் நோய்களைத் தடுக்க அமெரிக்காவில் 3.2 கோடி ஆண் கொசுக்களை வெளியிட கூகுள் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
Google's New Technology to Eradicate Mosquitoes: 32 Million Male Mosquitoes Set to Be Released!
Google's New Technology to Eradicate Mosquitoes: 32 Million Male Mosquitoes Set to Be Released!source: ai generated
1 min read

Google's New Technology to Eradicate Mosquitoes: 32 Million Male Mosquitoes Set to Be Released!

கூகுளின் புதிய உயிரியல் தொழில்நுட்ப

உலகளவில் கொசுக்களால் பரவும் டெங்கு, ஷிகா போன்ற ஆபத்தான நோய்களைக் கட்டுப்படுத்த, கூகுள் நிறுவனம் ஒரு புதிய உயிரியல் தொழில்நுட்ப உத்தியைக் கையில் எடுத்துள்ளது.

கூகுளின் 'வெரிலி'

இதன்படி, அமெரிக்காவின் கலிபோர்னியா மற்றும் புளோரிடா உள்ளிட்ட முக்கியப் பகுதிகளில் சுமார் 3.2 கோடி கொசுக்களைப் பொதுவெளியில் விடுவதற்கு கூகுளின் தாய் நிறுவனமான ஆல்பபெட்டின் கீழ் இயங்கும் 'வெரிலி' (Verily) என்ற நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

பிரத்யேக ஆண் கொசுக்கள் வளர்ப்பு

இந்தத் திட்டத்திற்காக ஆய்வகங்களில் 'வோல்பாக்கியா' என்ற இயற்கையான பாக்டீரியா தொற்றுடைய ஆண் கொசுக்கள் பிரத்யேகமாக வளர்க்கப்படுகின்றன.

ஆராய்ச்சியாளர்கள் விளக்கம்

இந்த ஆண் கொசுக்கள் காட்டில் உள்ள பெண் கொசுக்களுடன் இணையும் போது, அவை இடும் முட்டைகள் பொரிக்கும் தன்மையை இழந்துவிடுகின்றன.

இதனால், இயற்கையான முறையிலேயே அடுத்தடுத்த தலைமுறை கொசுக்களின் உற்பத்தி முற்றிலும் தடுக்கப்பட்டு, அவற்றின் எண்ணிக்கை கணிசமாகக் குறையும் என ஆராய்ச்சியாளர்கள் விளக்குகின்றனர்.

மக்களுக்கு ஆபத்து ஏற்படுமா?

பொதுவெளியில் கோடிக்கணக்கான கொசுக்கள் விடப்படுவதால் மக்களுக்கு ஆபத்து ஏற்படுமா என்ற அச்சம் தேவையில்லை. ஏனெனில், மனிதர்களைக் கடித்து ரத்தத்தை உறிஞ்சுவதும், நோய்களைப் பரப்புவதும் பெண் கொசுக்கள் மட்டுமே ஆகும்.

எந்தவித பாதிப்பும் ஏற்படாது

இந்தத் திட்டத்தில் வெளியிடப்படும் ஆண் கொசுக்கள் மனிதர்களைக் கடிக்காது என்பதால் இதனால் பொதுமக்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது.

கூகுளின் செயற்கை நுண்ணறிவு

கோடிக்கணக்கான கொசுக்களில் இருந்து ஆண் கொசுக்களை மட்டும் துல்லியமாகப் பிரித்தெடுக்க கூகுள் நிறுவனம் தனது மேம்பட்ட செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது குறிப்பிடத்தக்கது.

======

logo
Thamizh Alai
www.thamizhalai.in