

How Ritu Maurya Hiked Her Salary From 10 Lakhs to 80 Lakhs Using AI
தகவல் தொழில்நுட்ப துறையில் சம்பள உயர்வு பெற
தகவல் தொழில்நுட்ப துறையில் பணிபுரியும் ஒவ்வொரு ஊழியருக்கும் தங்களது மாதச் சம்பளத்தை அடுத்த உயரத்திற்கு எடுத்து செல்ல வேண்டும் என்பது மிகப்பெரிய லட்சியமாக இருக்கும்.
ஆனால், ஒரே வருடத்தில் தனது வருமானத்தை 10 லட்சம் ரூபாயில் இருந்து 80 லட்சம் ரூபாயாக உயர்த்தி, ஒட்டுமொத்த ஐடி வட்டாரத்தையும் சோசியல் மீடியாவையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளார் ரீது மவுரியா என்ற பெண்.
டாப் ட்ரெண்டிங்கில் ஐடி ஊழியரின் டிப்ஸ்
தொழில்முறை வலைதளமான லிங்க்டினில் (LinkedIn) தற்சமயம் இவருடைய பதிவுதான் டாப் ட்ரெண்டிங்கில் உள்ளது. வேலை தேடுபவர்களுக்கு அவர் சொல்லும் முதல் முக்கியமான பாடம், "வெறும் Resume மட்டும் நன்றாக இருந்தால் யாருக்கும் எளிதில் வேலை கிடைத்துவிடாது. காலத்திற்கு ஏற்ப நமது அணுகுமுறையை மாற்ற வேண்டும்" என்பதுதான்.
அவர் தனது சம்பளத்தை எட்டு மடங்கு உயர்த்துவதற்காகப் பயன்படுத்திய அந்த 5 ஏஐ (AI) அடிப்படையிலான டிப்ஸ் உங்களுக்காக.
1. இலக்கு வைக்கும் நிறுவனத்தைத் தேர்ந்தெடுப்பது
முதலில் நீங்கள் வேலை செய்ய விரும்பும் ஒரு நல்ல நிறுவனத்தைத் தேர்வு செய்ய வேண்டும். லிங்க்டின் தளத்திற்கு சென்று, அந்த நிறுவனத்தில் உங்கள் திறமைக்கு ஏற்ற ஒரு குறிப்பிட்ட ஜாப் டிஸ்கிரிப்ஷனை எடுக்க வேண்டும்.
அந்த வேலைவாய்ப்பு தற்போது காலியாக இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை, ஆனால் அது அந்த நிறுவனத்தில் இருக்கும் ஒரு உண்மையான பதவியாக இருக்க வேண்டும். இதன் மூலம் நாம் எந்த நிறுவனத்திற்குள் நுழைய வேண்டும் என்ற தெளிவு பிறக்கும்.
2. ChatGPT மூலம் தனித்துவமான ஐடியா
நீங்கள் தேர்ந்தெடுத்த அந்த ஜாப் டிஸ்கிரிப்ஷனை அப்படியே நகல் செய்து, சாட் ஜிபிடி தளத்தில் பதிவிட வேண்டும். பின்னர், "இந்த வேலைக்குத் தேவையான ஒரு புதுமையான ப்ராஜெக்ட் ஐடியாவையும், அதை உருவாக்குவதற்கான 'பிராம்ப்ட்டையும்' எனக்குக் கொடு" என்று கேட்க வேண்டும்.
சாட் ஜிபிடி உடனே அந்த நிறுவனத்தின் தேவைக்கு ஏற்ற ஒரு பிரமாதமான ஐடியாவையும், அதை செயல்படுத்துவதற்கான வழியையும் வடிவமைத்துக் கொடுத்துவிடும். இது மற்ற விண்ணப்பதாரர்களை விட உங்களை தனித்துக் காட்டும்.
3. Emergent.sh தளத்தில் கோடிங் இல்லாமல் உருவாக்குவது
சாட் ஜிபிடி கொடுத்த அந்த பிராம்ப்ட்டை அப்படியே எடுத்துக்கொண்டு, Emergent.sh என்ற செயற்கை நுண்ணறிவு தளத்தில் உள்ளீடு செய்ய வேண்டும்.
அங்குள்ள அதிநவீன ஏஐ ஏஜென்டுகள் அந்த ப்ராஜெக்ட்டுக்கான திட்டமிடல், வடிவமைப்பு முதல் கோடிங் எழுதுவது வரை அத்தனையையும் சில நிமிடங்களில் செய்து முடித்துவிடும். இதற்கு உங்களுக்குக் கோடிங் அறிவு ஆழமாகத் தெரிந்திருக்க வேண்டும் என்ற அவசியமில்லை.
4. ப்ராஜெக்ட்டை மெருகேற்றி நேர்காணலுக்கு தயாராவது
ஏஐ கருவிகள் முதன்முறை கொடுக்கும் முடிவு 100 சதவீதம் துல்லியமாக இருக்காது. எனவே, அதில் உங்களுக்குத் தேவையான மாற்றங்களைக் குறிப்பிட்டு, அந்த டூல்களிடமே மீண்டும் மீண்டும் 3 முதல் 5 சுற்றுகள் திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும்.
இதன் மூலம் ஒரு தரமான, நிறுவனங்கள் எதிர்பார்க்கும் ப்ராஜெக்ட் தயாராகிவிடும். இத்துடன், நேர்காணலுக்குத் தேவையான தொழில்நுட்பக் கேள்விகளுக்கும் உங்களை முழுமையாகத் தயார்படுத்திக் கொள்ள வேண்டும்.
5. லிங்க்டினில் வீடியோ போஸ்ட் மற்றும் ஹையரிங் மேனேஜர் மெசேஜ்
ப்ராஜெக்ட் தயாரானதும், அந்த நிறுவனத்தின் மேலாளருக்கு , "உங்கள் நிறுவனத்தில் இருக்கும் இந்த குறிப்பிட்ட சிக்கலைக் கவனித்தேன்; அதை சரி செய்ய இந்த ப்ராஜெக்ட்டை நான் வடிவமைத்துள்ளேன்" என்று ஒரு நேரடி மெசேஜ் அனுப்ப வேண்டும்.
அத்துடன், அந்த ப்ராஜெக்ட் எவ்வாறு செயல்படுகிறது என்பதை 2 நிமிட வீடியோவாக எடுத்து லிங்க்டினில் பதிவிட்டு, உங்களது ப்ரொஃபைலில் 'பின்' செய்து வைக்க வேண்டும்.
இந்த வீடியோவை அந்த குறிப்பிட்ட நிறுவனம் மட்டுமின்றி, அவர்களின் போட்டி நிறுவனங்களும் பார்க்கும் வாய்ப்பு உள்ளதால், ஒரே வருடத்தில் நமது தேவையை உணர்ந்து 80 லட்சம் வரை சம்பளத்தை உயர்த்த முடியும் என ரீது மவுரியா விளக்குகிறார்.
====