”விறகுச்சுமை தூக்கிய கையில் தங்கம்” : பளுதூக்குதலில் வரலாறு படைத்த தங்கமங்கை மீராபாய் சானு : தடைகளை தாண்டி சாதனை...!

சிறு வயதில் விறகு மூட்டையை சுமந்த மீராபாய் சானு, காமன்வெல்த்தில் தங்கம் வென்று சாதித்து இருக்கிறார்.
Mirabai Chanu, to carry bundles of firewood in childhood, achieved success by winning gold at Commonwealth Games
Mirabai Chanu, to carry bundles of firewood in childhood, achieved success by winning gold at Commonwealth GamesAI genetated
1 min read

மூன்று முறை தங்கப் பதக்கம்

கிளாஸ்கோ காமன்வெல்த் போட்டியில் இந்திய வீராங்கனை மீராபாய் சானு பளுதூக்குதலில் தங்கம் வென்றார். இதன் மூலம் காமன்வெல்த்தில் ஹாட்ரிக் தங்கம் வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளார்.

பளு தூக்குதலில் அசத்தல்

பெண்களுக்கான 48 கிலோ எடைப் பிரிவு பளுதூக்குதலில் தங்கம் வென்றுள்ளார். க்ளீன் அண்ட் ஜெர்க் பிரிவில் 105 கிலோ எடையை தூக்கி, அவர் இந்த சாதனையை படைத்தார்.

யார் இந்த மீராபாய் சானு?

இந்தியாவின் புகழ்பெற்ற பளுதூக்கும் வீராங்கனையான சைக்ஹோம் மீராபாய் சானு, 1994-ஆம் ஆண்டு மணிப்பூர் மாநிலத்தின் இம்பால் பகுதியில் பிறந்தவர்.

சிறுவயதிலேயே விறகு மூட்டைகளை மிக எளிதாகத் தூக்கிச் சுமந்த இவரின் திறமையைக் கண்ட குடும்பத்தினர், விளையாட்டுத் துறையில் ஊக்குவித்தனர்.

பளுதூக்குதலில் ஆர்வம்

குடும்பத்தினரின் ஆதரவால், பளுதூக்குதலில் ஆர்வம் காட்டிய மீராபாய், தன்னை சிறந்த வீராங்கனையாக தகவமைத்து கொண்டார்.

மாநில அளவில், தேசிய அளவில் பதக்கங்களை குவித்த அவர், சர்வதேச அளவில் கால்பதித்தார்.

சர்வதேச போட்டிகளில் அசத்தல்

2014 காமன்வெல்த் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்று சர்வதேச கவனத்தை ஈர்த்த சானு, 2017 உலகப் பளுதூக்குதல் சாம்பியன்ஷிப்பில் தங்கம் வென்று அசத்தினார்.

ஒலிம்பிக்கில் வெள்ளி

2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் மகளிருக்கான 49 கிலோ எடைப்பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்று வரலாற்றுச் சாதனை படைத்தார்.

விருதுகளை குவித்த மீராபாய்

தொடர்ந்து காமன்வெல்த் போட்டிகளில் 2018, 2022 மற்றும் 2026 என வரிசையாக தங்கப் பதக்கங்களை வென்று ஹாட்ரிக் சாதனை புரிந்துள்ளார்.

கேல் ரத்னா, பத்மஸ்ரீ விருது

இவரின் அபார விளையாட்டு சாதனைகளைப் பாராட்டி இந்திய அரசு இவருக்கு நாட்டின் மிக உயரிய விளையாட்டு விருதான கேல் ரத்னா மற்றும் பத்மஸ்ரீ விருதுகளை வழங்கி கௌரவித்துள்ளது.

தன்னம்பிக்கை மிக்க மீராபாய்

விடாமுயற்சிக்கும் தன்னம்பிக்கைக்கு சிறந்த உதாரணமாகத் திகழும் மீராபாய் சானு, இந்திய விளையாட்டு உலகின் முன்னணி நட்சத்திரமாக திகழ்ந்து, நாட்டிற்கு பெருமை சேர்த்து வருகிறார்.

===============

logo
Thamizh Alai
www.thamizhalai.in