பட்டாசு வெடிக்கும் முன் இதை பண்ணுங்க! வெறும் 11 ரூபாயில் 25,000 ரூபாய் காப்பீடு வழங்கும் போன்பே : முழு விவரங்கள்!

தீபாவளி பட்டாசு விபத்து: வெறும் 11 ரூபாயில் ரூ.25,000 காப்பீடு வழங்கும் போன்பே!
PhonePe Firecrackers Insurance Scheme Details
PhonePe Firecrackers Insurance Scheme Detailssource:ai generated
1 min read

PhonePe Firecrackers Insurance Scheme Details

போன்பே மற்றும் ஆதித்யா பிர்லா கூட்டணி

இந்தியாவில் வரும் நவம்பர் 8-ஆம் தேதி தீபாவளி பண்டிகை விமரிசையாகக் கொண்டாடப்பட உள்ளது. தீபாவளி பண்டிகையின் போது பட்டாசுகளை கவனமுடன் வெடிக்க விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டாலும், சில சமயங்களில் ஏற்படும் விபத்துகளால் குடும்பங்களுக்கு நிதி நெருக்கடி உண்டாகிறது.

இத்தகைய நிதி நெருக்கடியிலிருந்து வாடிக்கையாளர்களைப் பாதுகாப்பதற்காக, போன்பே (PhonePe) நிறுவனம் ஆதித்யா பிர்லா நிறுவனத்துடன் இணைந்து 'Firecracker Insurance' என்ற பிரத்யேக காப்பீட்டுத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இத்திட்டத்தில் பதிவு செய்வதன் மூலம் வெறும் 11 ரூபாயில் ரூ.25,000 வரை காப்பீட்டுச் சலுகை பெற முடியும்.

2 வகையான பிரீமியம் திட்டங்கள்

வாடிக்கையாளர்களின் வசதிக்கேற்ப 11 நாட்கள் மற்றும் 30 நாட்கள் செயல்படக்கூடிய 2 வகையான காப்பீட்டுப் பிரீமியம் திட்டங்களை போன்பே வழங்குகிறது:

11 நாட்கள் திட்டம்

வெறும் 11 ரூபாய் கட்டணத்தில் 11 நாட்களுக்கு செல்லுபடியாகும் வகையில் இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இது நவம்பர் 5 முதல் நவம்பர் 15-ஆம் தேதி வரை செயலில் இருக்கும்.

30 நாட்கள் திட்டம்

வெறும் 21 ரூபாய் கட்டணத்தில் 30 நாட்களுக்கு செல்லுபடியாகும் வகையில் இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இது அக்டோபர் 15 முதல் நவம்பர் 14-ஆம் தேதி வரை செயலில் இருக்கும்.

காப்பீட்டின் பலன்கள் மற்றும் இழப்பீடு விவரங்கள்

இரண்டு வகையான காப்பீட்டுத் திட்டங்களுக்கும் ஒரே மாதிரியான பலன்களே கிடைக்கின்றன. இத்திட்டத்தின் மூலம் பாலிசிதாரர், அவரது மனைவி மற்றும் 2 குழந்தைகளுக்கு காப்பீட்டுப் பாதுகாப்பு கிடைக்கிறது.

  1. பட்டாசு விபத்து ஏற்பட்டு 24 மணி நேரத்திற்கும் மேலாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றால், ரூ.25,000 வரை காப்பீடு வழங்கப்படும்.

  2. பட்டாசு விபத்து ஏற்பட்டு 24 மணி நேரத்திற்கு குறைவாக மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொண்டாலும் ரூ.25,000 வரை காப்பீடு பெற முடியும்.

  3. எதிர்பாராத விதமாக பட்டாசு விபத்தில் பாலிசிதாரர் உயிரிழந்தால், அவரின் குடும்பத்திற்கு ரூ.25,000 காப்பீட்டுத் தொகை வழங்கப்படும் (இப்பலன் பாலிசிதாரருக்கு மட்டுமே பொருந்தும்).

காப்பீடு எடுப்பது எப்படி?

  1. போன்பே (PhonePe) செயலியைத் திறந்து அதில் உள்ள 'Insurance' பகுதிக்கு செல்ல வேண்டும்.

  2. அதில் 'Firecrackers Insurance' என்ற விருப்பத்தைக் கிளிக் செய்ய வேண்டும்.

  3. பாலிசிதாரரின் பெயர், வயது மற்றும் மின்னஞ்சல் முகவரியை உள்ளிட வேண்டும்.

  4. தொடர்ந்து மனைவி மற்றும் குழந்தைகளின் பெயர்களை உள்ளிட வேண்டும்.

  5. நீங்கள் தேர்ந்தெடுக்கும் திட்டத்திற்கு ஏற்ப ரூ.11 அல்லது ரூ.21 பிரீமியத்தை செலுத்தி காப்பீட்டை பெற்றுக் கொள்ளலாம்.

தொடர்ந்து 3-வது ஆண்டாக போன்பே நிறுவனம் இந்த பட்டாசு விபத்து காப்பீட்டுத் திட்டத்தைக் கொண்டு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

==========

logo
Thamizh Alai
www.thamizhalai.in