நஞ்சுக்கொடியில் பிளாஸ்டிக்: பதற வைக்கும் ஆய்வு! தவிர்ப்பது எப்படி?

Microplastic particles in the mother's placenta:நஞ்சுக்கொடியில் உள்ள மைக்ரோ பிளாஸ்டிக் துகள்களால் கருவில் உள்ள குழந்தைகள் பாதிப்படையலாம்.
Microplastic particles in the mother's placenta.
Microplastic particles in the mother's placenta.source:google
2 min read

பிளாஸ்ட்டிக் ஆபத்து

தாயின் நஞ்சுக்கொடியில் கூட மைக்ரோ பிளாஸ்டிக் துகள்கள் இருப்பதாக வெளியான தனியார் மருத்துவக் கல்லூரியின் ஆய்வறிக்கை பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதைத்தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்றம் தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக்கொண்ட நிலையில், தாயின் நஞ்சுக்கொடியைக் பிளாஸ்டிக் மாசுபடுத்துகிறது என்றால் , கட்டாயமாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தீவிரமாக ஆராய வேண்டும் என்று கூறியுள்ளது.

குடிநீர் பாட்டில்களில் நுண் நெகிழிகள்

மேலும் மத்திய , மாநில அரசுகளை எதிர் மனுதாரர்களாகவும் சேர்த்துள்ளனர்.

இதைத்தொடர்ந்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மத்திய சுகாதார அமைச்சகமானது பாலித்தீன் உறைகளில் அடைத்து விற்கப்படும் சர்க்கரை, உப்பு, குடிநீர் பாட்டில் முதலானவற்றில் ’நுண் நெகிழிகள்’ எனப்படும் மைக்ரோ பிளாஸ்டிக் துகள்கள் கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

எச்சரிக்கை வாசகங்கள் பொறிக்க வேண்டும்

இதனால் எதிர்கால குழந்தைகளுக்கு ஏற்படப்போகும் பாதிப்புகள் குறித்து கவலையடைந்த நீதிபதிகள், இது தொடர்பாக எச்சரிக்கை வாசகங்களை பொறிப்பதற்கு அறிவுறுத்த வேண்டும் என்ற மத்திய அரசுக்கு கடந்த வாரம் உத்தரவிட்டனர்.

தாயின் நஞ்சுக்கொடியில் பிளாஸ்டிக்

இந்த உத்தரவிற்கு பின்னர்தான் தாயின் நஞ்சுக்கொடியில் பிளாஸ்டிக் துகள்கள் இருப்பதாக தனியார் மருத்துவமனை ஆய்வறிக்கை வெளியிட்ட நிலையில், சென்னை உயர்நீதிமன்றம் தானாக முன்வந்து வழக்கு விராணனையை மேற்கொண்டது.

இதைத்தொடர்ந்து மைக்ரோ பிளாஸ்டிக்கின் தீமைகள் குறித்து ஆய்வு செய்வதற்காக சென்னை ஐஐடியின் உதவியை நாடியுள்ளதாக தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் கூறியுள்ளது.

தனியார் மருத்துவமனை ஆய்வு

கோவை பி.எஸ்.ஜி மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் நடத்திய ஆய்வில், தாயின் நஞ்சுக்கொடியில் மைக்ரோ பிளாஸ்டிக் இருப்பதாக தெரிவித்துள்ளது.

கடந்த ஆறு மாதங்களுக்கு மேலாக இந்த ஆய்வானது நடந்து வருவதாகவும் குழந்தை பெற்ற தாய்மார்களின் சம்மததோடு அவர்களின் நஞ்சுக்கொடியில் இருந்து இரத்த மாதிரிகளை எடுத்து சோதனை செய்தபோது இந்த அதிர்ச்சிகர முடிவு வந்ததாக மருத்துவர் சுதா ராமலிங்கம் தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

குழந்தைகளுக்கு கேடு

இந்த மைக்ரோ பிளாஸ்டிக் குழந்தைகளுக்கு பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தும் என்றும் அவர் கூறியுள்ளார்.

சிறு வயது முதலே உடல் பருமனுடன் வளரும் குழந்தைகள் பலரும் சர்க்கரை நோய், புற்றுநோய் என பல்வேறு வகையான நோய்களால் பாதிக்கப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

கருவில் உள்ள குழந்தைகள் பாதிப்பு

நஞ்சுக்கொடியில் உள்ள மைக்ரோ பிளாஸ்டிக் துகள்களால் கருவில் உள்ள குழந்தைகள் பாதிப்படையலாம். ஏனென்றால் சீனா, அமெரிக்கா போன்ற நாடுகளில் நடத்தியுள்ள ஆய்வுகளில் கருவில் இருக்கும் போதே சில நோய்களுக்கான அறிகுறிகள் கருவிலேயே தெரிந்துவிடுவதாக கூறப்பட்டுள்ளது.

மருத்துவ ரீதியாக இது ‘டோஹாட்’ என அழைக்கப்படுகிறது என்றும் அவர் கூறியுள்ளார்.

400 கர்ப்பிணிகளிடம் மாதிரி சேகரிப்பு

இதைத்தொடர்ந்து தான் கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக 400 கர்ப்பிணிகளின் சம்பதம் பெற்று அவர்களின் நஞ்சுக்கொடியில் இருந்து மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வு நடத்தபட்டது.

இந்த ஆய்வறிக்கை ஊடகங்களில் வெளிவந்த நிலையில், சென்னை உயர்நீதி மன்றம் இந்த ஆய்வறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என்றதால் , தற்போது சமர்ப்பிப்பதாகவும் கூறியுள்ளார்.

மருத்துவர்கள் தகவல்

இந்த ஆய்வறிக்கையைத் தொடர்ந்து , திருவள்ளூர் மருத்துவக் கல்லூரி மருத்துவரும் பேராசிரியருமான பெருமாள் முருகன், தாயின் நஞ்சுக்கொடியில் உள்ள இந்த பிளாஸ்டிக் துகள்கள் நஞ்சுக்கொடியை கடந்து கருவை அடைவதாக கூறியுள்ளார்.

மேலும் இதனால் கர்ப்பிணிகளுக்கு கர்ப்பகால நீரிழிவு போன்ற நீண்டகால வளர்சிதை மாற்றங்கள் ஏற்படுவதாக கூறியுள்ளார்.

மனித உடலுக்குள் பிளாஸ்டிக் கழிவை தவிர்க்க

தண்ணீர் குழுவைகள் , குளிர்பான பாட்டிகள் முதலான பிளாஸ்டிக் பயன்பாட்டை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும்.

கடைகளில் உணவு பொருட்கள் பார்சல் வாங்கும் போது, சாம்பார், சட்னி முதலான குழப்பு வகைகளை பார்சலில் பாலீத்தீன் கவர்களில் வாங்குவதை தவிர்க்க வேண்டும்.

ஒருமுறை பயன்படுத்தும் குடிநீர் பாட்டில்கள், டீ, காஃபி - கப் முதலானவற்றை பயன்படுத்தக்கூடாது.

சமைக்கும் போதும் பாக்கெட்டுகளில் அடைத்து, பதப்படுத்தி வைக்கப்பட்டுள்ள உணவு பண்டங்களைத் தவிர்க்க வேண்டும்.

சுய கட்டுப்பாடு

எதிர்கால சந்ததியினரை பல்வேறு வித நோய்களிலிருந்து காப்பாற்ற நாம் செய்ய வேண்டியதெல்லாம் சுய கட்டுப்பாடு தான். ஒருபோதும் பிளாஸ்டிக்கை பாயன்படுத்தக் கூடாது,

பிளாஸ்டிக்கை முற்றிலும் தவிர்க்க...

முற்றிலும் பிளாஸ்டிக், பிளாஸ்டிக்கால் ஆன பொருட்களை வாங்காமல் இருக்க வேண்டும் என்ற சுய கட்டுப்பாடு ஒவ்வொருவருக்கும் இருந்தால் தான் இந்த மோசமான போக்கை முற்றிலும் மாற்றியமைக்க முடியும்.

======

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in