'I LOVE YOU' : காதலை தாண்டி அன்பை உயர்த்தி பிடிக்கும் மந்திரச்சொல்

Valentine's Day 2026 Date in Tamil : காதலர் தினம் 14ம் தேதி கொண்டாடப்படும் நிலையில், 'I LOVE YOU' என்ற சொல், கணவன்-மனைவி, பெற்றோர்-பிள்ளை உறவில் தினமும் அங்கமாகி, அன்பினை விதைத்து வருகிறது.
Valentine's Day is celebrated on the 14th, the words 'I LOVE YOU' have become a daily part of the relationship between husband and wife, parent and child, sowing love.
Valentine's Day is celebrated on the 14th, the words 'I LOVE YOU' have become a daily part of the relationship between husband and wife, parent and child, sowing love. Source : Google
2 min read

அன்பை பரிமாறும் I LOVE YOU

Valentine's Day 2026 Date in Tamil : "ஐ லவ் யூ" ( I LOVE YOU ) ஒரு காலத்தில் இந்த மூன்று வார்த்தைகளை சொல்வதற்கு காதலர்களின் வாசகமாகவே இருந்தது. சந்திப்பின் போதோ, கடதம் மூலமோ, நவீன காலத்தில் செல்போன், வாட்ஸ்அப் மூலம் பகிரப்பட்ட இந்த வார்த்தை இப்போது மிகப்பெரிய மாற்றத்தை சந்தித்து வருகிறது.

நம்பிக்கையின் அடையாளம் I LOVE YOU

இந்த வார்த்தையை கேட்டால் பெற்றோர், உற்றார் உறவினர்கள் முகம் சிவந்து ஆவேசப்படும் காலம் மலையேறி விட்டது. இன்று அது ஒரு நம்பிக்கையின் அடையாளமாக மாறியிருக்கிறது.

இன்று 'ஐ லவ் யூ' என்பது வெறும் காதலர்களுக்கு மட்டுமல்ல, பச்சிளம் குழந்தை கொஞ்சும் பெற்றோரில் தொடங்கி, பள்ளிக்கூடம் கிளம்பும் குழந்தையை அணைத்துத் தாய் சொல்லும் அன்பான மொழி, நீண்ட நாள் கழித்துப் பேசும் தோழி அல்லது தோழனிடம் நெருக்கத்தை நினைவுபடுத்துதல்.

முதுமையில் தவிக்கும் பெற்றோரின் கைகளைப் பிடித்து மகனோ, மகளோ கொடுக்கும் தைரியம் வரை நம்பிக்கையின் அடையாளமாக இந்த வார்த்தை செயல்பட்டு வருகிறது.

கூச்சம் மறைந்து அக்கறை அதிகரிப்பு

அன்பை வெளிப்படுத்துவதில் இருந்த கூச்சங்கள் மறைந்து, "உன்னை எனக்குப் பிடிக்கும், உன் மீது எனக்கு அக்கறை இருக்கிறது" என்பதை உரக்கச் சொல்லும் நாகரிக சொல்லாக இது மாறி இருக்கிறது.

இயந்திரத்தனமாகி விட்ட நவீன உலகில், மனிதர்கள் உடலளவிலும், மனதளவிலும் வேறுபட்டு நிற்கிறார்கள. அவர்களை பிணைக்கும் ஒரு மந்திரச் சொல்லாக இந்த வார்த்தை மெருகேறியுள்ளது.

I LOVE YOU வரலாறு என்ன?

I LOVE YOU என்ற இந்த வார்த்தையை யார்(Lovers Day History in Tamil) முதலில் பேசியது? எதற்காக பயன்படுத்தப்பட்டது? மூன்று வார்த்தைகளுக்கு பின்னால் இருக்கும் வரலாறு என்ன? என்பதையும் கொஞ்சம் பார்க்கலாம்.

'Ic lufie þe' to I LOVE YOU

ஆங்கிலத்தில் பயன்படுத்தப்பட்ட I LOVE YOU என்ற சொல், பழைய ஆங்கிலத்தில் 'Ic lufie þe' என்று அழைக்கப்பட்டது, காலத்தால் மருவி இந்த வடிவத்தை பெற்றது. 18ம் நூற்றாண்டுகளில் காதலை நேரடியாகச் சொல்வது மிகவும் பெரிய விஷயமாகக் கருதப்பட்டது.

பூக்கள் மூலம் காதல்

அப்போது பூக்களின் மொழியைப் பயன்படுத்தி (Flower Language) தங்கள் அன்பைப் பரிமாறிக் கொண்டனர். ஒரு சிவப்பு ரோஜாவைக் கொடுப்பது என்பது "ஐ லவ் யூ" என்று சொல்வதற்குச் சமமாக இருந்தது.

19ம் நூற்றாண்டில் தபால் வசதிகள் பெருகிய பிறகு, காதலர் தின அட்டைகளும் (Valentine Cards) கடிதங்களும் மக்கள் மத்தியில் புகழ்பெற்றன. அப்போதுதான் இந்த மூன்று வார்த்தைகள் முழுவீச்சில் உயிர் பெற்றன.

மனநலன் மேம்படுகிறது

இன்று "ஐ லவ் யூ" என்பது வெறும் காதல் மொழியாக மட்டும் இல்லாமல், ஒருவருடைய மன ஆரோக்கியத்தை மேம்படுத்தும் கருவியாக இருக்கிறது. இன்று 'ILY', 'Love you' எனச் சுருங்கி விட்டாலும், அதன் ஆழமும், அன்பு பரிமாற்றமும் குறையவே இல்லை. சமூக ஊடகங்களில் ஒரு 'ஹார்ட்' எமோஜி இடுவதும் இந்தச் சொல்லின் வெளிப்பாடு தான்.

வார்த்தையின் வலிமை - ஆய்வு

நேசிப்பவர்களிடம் இருந்து இந்த வார்த்தையை கேட்கும்போது, மூளையில் 'ஆக்ஸிடாசின்' போன்ற மகிழ்ச்சியான ஹார்மோன்கள் சுரக்கின்றன. இது இதயத் துடிப்பைச் சீராக்கி மன அழுத்தத்தைக் குறைப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

அனைவருக்கும் அன்பு பரிமாற்றம்

"ஐ லவ் யூ" என்ற சொல்லானது பாலின மற்றும் உறவு எல்லைகளைக் கடந்து விரிந்து நிற்கிறது. தன் வளர்ப்புப் பிராணிகளிடம் கூட மனிதர்கள் இந்த அன்பைப் பகிர்ந்து கொள்கிறார்கள். இது தனிமையைப் போக்கும் ஒரு மருந்தாகச் செயல்படுவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.

தற்கொலையை தடுக்கும் மருந்து

"நான் உனக்காக இருக்கிறேன்" என்ற நம்பிக்கையைத் தரும் இந்த வார்த்தை, தற்கொலை எண்ணங்கள் மற்றும் தனிமையில் இருப்பவர்களுக்கு ஒரு மருந்தாக அமைகிறது.

எனவே, இது காதலர் தினத்தன்று மட்டும் உச்சரிக்கப்படும் வார்த்தை கிடையாது.

மகிழ்ச்சியை பகிர்ந்து, மகிழ்வோம்

பரந்து விரிந்த உலகில், மனிதர்கள் தாங்கள் நேசிக்கும் ஒவ்வொருவருக்கும் இந்த வார்த்தை மூலம் துணை நிற்கலாம்.

அன்பான தாயாக, தந்தையாக, சிறந்த நண்பனாக, நண்பியாக, அளப்பரிய அன்பை வெளிப்படுத்தும் குழந்தையாக, இறைவனிடம் பக்தியை வெளிப்படுத்தும் பக்தனாக இந்த வார்த்தை, வாழ்க்கையை மகிழ்ச்சியாக்கி அனைவரையும் ஒன்று சேர்க்கிறது.

=====

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in