காதலர் தினம் எதிரொலி : ரோஜா பூக்களின் விலை அதிகரிப்பு!

Valentine's Day 2026: இன்று காதலர் தினம் என்பதால் ரோஜா பூக்களின் விலை இரண்டிலிருந்து மூன்று மடங்கு உயர்ந்துள்ளது.
Valentine's Day: The price of roses has increased two to three times.
Valentine's Day: The price of roses has increased two to three times.source: google
1 min read

காதலர் தினம்:

இன்று காதலர் தினம் என்பதால் ரோஜா பூக்களின் விலை அதிகரித்து காணப்படுகிறது. காதல் பரிசுகளின் பட்டியலில் காதலர்களிடையே முதல் இடத்தைப் பிடிப்பது ரோஜாக்கள் தான்.

ரோஜா விலை உயர்வு

அதனால் எப்போதும் இரண்டு மடங்கு உயரும் என்றால் இந்த முறை இரண்டிலிருந்து மூன்று மடங்கு உயர்ந்துள்ளது.

ரோஜாக்களின் வரத்து குறைவாக இருப்பதால் சிவப்பு ரோஜாக்கள் என்று அழைக்கப்படும் ஒசூர் மற்றும் பெங்களூர் ரோஜாக்களின் வரத்தும் அதிகரித்துள்ளது.

2 முதல் 3 மடங்கு உயர்வு

சாதாரணமாக 15 ரூபாய் முதல் 30 ரூபாய் வரை விற்பனையாகும் ரோஜாக்கள் இன்று ரூ. 100 முதல் ரூ. 120, ரூ. 150 வரை விற்பனையாகிறது.

ஒரு ரோஜாப்பூவின் தொகை தான் இப்படி இரண்டு , மூன்று மடங்காக விற்கப்படுகிறது.

ரோஜா விற்பனை சூடுபிடிக்கிறது

காதலர் தினத்தை முன்னிட்டு கோயம்பேடு மலர்ச்சந்தை முதலான இடங்களில் கடந்த சில தினங்களுக்கு முன்பிலிருந்தே ரோஜா விற்பனை சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.

அடுத்த வாரமும் முகூர்த்த நாட்கள் வருவதால் விலை சற்று உயர்ந்த வண்ணமே இருக்கும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

ஒத்த ரோஜா ரூ.100?

தனியாக ஒரு ரோஜாவே ரூ. 100- ஐ தொட்டுள்ளது. அப்படியென்றால் கட்டு ரோஜ எவ்வளவு தெரியுமா? ரூ. 500 முதல் ரூ 900 வரை விறைபனையாகிறது. இதில் 10 முதல் 20 வண்ண வண்ண ரோஜாக்கள் இடம்பெறும்.

வண்ணங்களுக்கு ஏற்ற விலை

ரோஜாக்களின் வண்ணங்களுக்கு ஏற்றவாறு விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மஞ்சள், பிங்க், ஆரஞ்சு வண்ணங்களில் உள்ள ரோஜா கொத்துகள் ரூ. 400 வரை விற்கப்படுகிறது.

சென்னையில் ஒரு ரோஜாவின் விலை ரூ. 75 ஆகவும், அந்தந்த பகுதிகளுக்கு ஏற்றவாறும் விற்பனையாகிறது.

இன்று புதிதாக சந்தைக்கு வந்த ரோஜாக்கள் விலை அதிகமாகவும், ஏற்கெனவே வியாபாரிகள் வாங்கி வைத்துள்ள ரோஜாக்கள் சற்று குறைவாகவும் விற்கப்படுகிறது.

ரோஜா விலை என்னவாக இருந்தால் என்ன, காதலை சொன்னவர்களும் , சொல்லப்போகிறவர்களும் ரோஜாக்களை வாங்கிக்கொண்டுதான் இருக்கின்றனர்.

மலர் விவசாயிகள், வணிகர்கள் மகிழ்ச்சி

மலர்ச் சந்தைகளில் ரோஜாக்களின் விற்பனை அதிகரித்துள்ளதால் வியாபாரிகள் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.

அதேபோல், வழக்கத்தை விட ரோஜாக்கள் அதிக விலைக்குப் போயுள்ளதால் மலர் விவசாயிகளும் மகிழ்ச்சியில் உள்ளனர்.

சந்தையில் இன்றைய நாளில் ரோஜா பூக்கள் மட்டுமின்றி, சாக்லேட், பரிசுப் பொருட்களின் விற்பனையும் சூடுபிடித்துள்ளது.

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in