Zero Balance,Insurance Policy: IPPB வங்கியின் அதிரடி திட்டங்கள் !

IPPB வங்கியின் அதிரடி சலுகைகளால் மக்கள் ஜீரோ பேலன்ஸ் கணக்கைத் தொடங்க ஆர்வமாக உள்ளனர்.
Zero Balance,Insurance Policy
Zero Balance,Insurance Policysource:google
2 min read

இந்திய போஸ்ட் பேமண்ட் வங்கி

இந்திய போஸ்ட் பேமண்ட் வங்கி (IPPB) அதாவது இந்திய அஞ்சல் கட்டண வங்கியை பிரதமர் மோடி கடந்த 2018ஆம் ஆண்டு செப்டம்பர் 1ஆம் தேதி தொடங்கி வைத்தார்.

அன்று முதல் இன்றுவரை IPPB சேவையை பல வாடிக்கையாளர்கள் பெற்று வருகின்றனர்.

ஆனால் இதன் சிறப்பம்சங்கள் குறித்து அறியாதவர்கள் தற்போது IPPB சேவையை பெற விருப்பம் கொண்டு வருகின்றனர்.

வைப்புத்தொகை அதிகரிப்பு

இதற்கு காரணம் பெரும்பாலான வங்கிகள் தங்கள் இருப்புத்த்தொகையை உயர்த்தியுள்ளதே இதற்கு காரணம்.

முன்பெல்லாம் இருப்புத்தொகை மிகவும் குறைவாகவே இருக்கும். ரூ.250 முதல் ரூ.500 என இருந்த நிலையில் இப்போதெல்லாம் ரூ. 5,000 முதல் ரூ. 10,000 என அதிகரித்துள்ளது.

புதிய கணக்கை தொடங்குவதில் சிக்கல்

கணக்கை புதிதாக தொடங்க வேண்டும் என்றாலும் இந்த தொகையை டெபாசிட் செய்ய வேண்டிய நிலை உள்ளது.

சாதாரண எளிய மக்களுக்கு இந்த தொகையானது சாத்தியமே கிடையாது. அதனால் தான் டெபாசிட் இல்லாமல் ஜீரோ பேலன்ஸ் சேபிப்பு கணக்கை தொடங்க மக்கள் IPPB சேவையை நோக்கி நகர்கின்றனர்.

IPPB சிறப்பம்சங்கள்

IPPB, HDFC வங்கியுடன் இணைந்து கிராமபுறங்களில் கடன் மற்றும் நிதி சேவை

குழந்தைகளுக்கான சேமிப்பு திட்டங்கள், முதியவர்களுக்கான பென்சன் திட்டங்கள், பொதுமக்கள் முதலீடு செய்யும் வண்ணம் வகைப்படுத்தல்

IPPB பொதுமக்களுக்கு மிகக் குறைவான கட்டணத்தில் அதாவது ரூ. 899 கட்டணத்தில் ரூ. 15 லட்சத்திற்கான மருத்துவ காப்பீடு, ரூ.799 கட்டணத்தில் ரூ. 15 லட்சத்தில் விபத்து காப்பீடு

வங்கி கணக்குகளைப் போலவே IPPB கணக்கையும் உங்கள் யுபிஐ செயலியுடன் இணைத்து பயன்பெற முடியும்.

IPPB கணக்கை தொடங்க ஜீரோ பேலன்ஸ் போதுமானது. எந்தவித டெபாசிட் தொகையும் செலுத்த வேண்டும் என்ற தேவை இல்லை.

IPPB கணக்கை தொடங்குவது எப்படி?

இந்தியன் போஸ்ட் பேமெண்ட் வங்கியில் ஜீரோ பேலன்ஸ் கணக்கைத் தொடங்க ஆதார் கார்டு மற்றும் ஒரு புகைப்படம் இருந்தாலே போதும். எளிமையாக கணக்கை தொடங்கி விடலாம்.

ஆன்லைனில் கணக்கைத் தொடங்க

கூகுல் ப்ளே ஸ்டோர் அல்லது ஆப்பிள் ப்ளே ஸ்டோரிலிருந்து IPPB Mobile App-ஐப் பதிவிறக்கவும்.

'Open Account' -ஐ க்ளிக் செய்து, ஆதார் எண் மற்றும் பான் கார்டு எண் விவரங்களைப் பதிவிட வேண்டும்.

முகவரி, தனிப்பட்ட விவரங்கள், நாமினி முதலான தகவல்களை பதிவிட வேண்டும்.

டிஜிட்டல் KYC விண்ணப்பங்களை சரியாக பூர்த்தி செய்தவுடன் உங்கள் IPPB கணக்கு தொடங்கப்பட்டுவிடும்.

ஆஃப்லைனில் கணக்கைத் தொடங்க

உங்கள் வீட்டிற்கு அருகில் உள்ள அஞ்சல் நிலையத்திற்கு சென்று IPPB கணக்கிற்கான விண்ணப்ப படிவத்தைப் பெற்று பூர்த்தி செய்து, அதனுடன் ஆதார், பான் கார்ட் நகல் சேர்த்து படிவத்தை சமர்ப்பிக்க வேண்டும்.

பின்னர் விரல்ரேகை மூலம் விவரங்கள் சரிபார்க்கப்பட்டு கணக்கு தொடங்கப்படும்.

Doorstep முறையில் கணக்கைத் தொடங்க

உங்கள் வீட்டிற்கே தபால்காரரை அழைத்து கணக்கைத் தொடங்க முடியும். அதற்கு 155299 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

இந்த கணக்கை தொடங்க முக்கியமான ஒன்று ஆதாருடன் உங்கள் மொபைல் இணைக்கப்பட்டிருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

IPPB பயனாளர்கள்

IPPB கணக்கின் மூலம் 2018 முதல் தற்போது வரை 1 லட்சத்து 55 ஆயிரம் மக்கள் பயன்பெற்றுள்ளனர்.

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in