

கார்த்திகை தீபத் திருவிழா
Thiruparankundram Hill Karthigai Deepam 2025 : சிவபெருமான், முருகப் பெருமான் கோவில்களில் கார்த்தி தீபத் திருவிழா சிறப்பாக கொண்டாடப்படும். அந்த வகையில், முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான திருப்பரங்குன்றம் மலையில் சுப்பிரமணியசுவாமி கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா இன்று வெகு சிறப்பாக நடைபெற்றது.
தீப மண்டபத்தில் தீபம்
இங்கு மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்பது பக்தர்களின் நீண்ட நாள் கோரிக்கை. ஆனால், மலையில் உள்ள உச்சிப் பிள்ளையார் கோயில் தீப மண்டபத்தில் தான் 1920 ம் ஆண்டு முதல் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டு வருகிறது.
தீபத்தூண் தீபம் - வழக்கு
தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என வலியுறுத்தி, இந்து முன்னணி அமைப்பும் நீண்ட நாட்களாக வலியுறுத்தி வந்தது. இதற்காக பல்வேறு போராட்டங்களை இந்த அமைப்பு முன்னெடுத்தது.
இந்த நிலையில், மதுரை மாவட்டம், எழுமலை ராம ரவிக்குமார் என்பவர், மதுரை உயர்நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனுவில், 'திருப்பரங்குன்றம் மலை உச்சியிலுள்ள தீபத்துாணில் கார்த்திகை தீபம் ஏற்ற அனுமதிக்க வேண்டும். அதற்கு பாதுகாப்பு அளிக்க உத்தரவிட வேண்டும்' என வேண்டுகோள் விடுத்தார்.
நீதிமன்றம் ஒப்புதல்
இதனை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், 'திருப்பரங்குன்றம் மலை உச்சியிலுள்ள தீபத்துாணிலும் கார்த்திகை தீபம் ஏற்றலாம்' என கடந்த வாரம் உத்தரவிட்டு இருந்தார்.
தமிழக அரசு எதிர்ப்பு
இதனை எதிர்த்து, தமிழக அரசு சார்பில் திருப்பரங்குன்றம் கோயில் செயல் அலுவலர் மதுரை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார். இதற்கு பல்வேறு தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
தீபத்தூணில் தீபம் ஏற்றம்
இதனையடுத்து, தனி நீதிபதி உத்தரவு பிறப்பித்து இருந்தாலும், பிள்ளையார் கோவிலில் உள்ள தூணில் தான் தீபம் ஏற்றப்பட்டது. பக்தர்கள் யாரும் மலைக்கு செல்ல அனுமதிக்கபடாததால், அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஒரு கட்டத்தில் இது வன்முறைக்கு வித்திட்டது.
120 ஆண்டு கனவு நிறைவேறியது
1920ம் ஆண்டிற்கு பிறகு அதாவது 120 ஆண்டுகளுக்கு பிறகு திருப்பரங்குன்றம் தீபத்தூணில், கார்த்திகை தீபம் ஏற்றப்படும் என்று எதிர்பார்த்து காத்திருந்த பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
====