தேனி வழியே சதுரகிரி செல்லும் பக்தரா நீங்கள்? : வனத்துறையின் பாதுகாப்பு வழிமுறைகள் என்னன்னு தெரிஞ்சிக்கோங்க!

தேனி உப்புத்துறை வழியே சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில் ஆடி அமாவாசைத் திருவிழாவிற்கு செல்லும் பக்தர்களுக்கான புதிய கட்டுப்பாடுகள் மற்றும் பாதுகாப்பு வழிகாட்டுதல்கள் வெளியீடு.
Are you a devotee traveling to Sathuragiri via Theni? Make sure you know the Forest Department's safety guidelines!
Are you a devotee traveling to Sathuragiri via Theni? Make sure you know the Forest Department's safety guidelines!google
1 min read

Are you a devotee traveling to Sathuragiri via Theni? Make sure you know the Forest Department's safety guidelines!

விருதுநகர் மாவட்டத்தின் புகழ்பெற்ற சதுரகிரி ஸ்ரீ சுந்தரமகாலிங்கம் கோயிலில் ஆடி அமாவாசைத் திருவிழா இன்று (ஆகஸ்ட் 10) தொடங்கி வரும் 13-ம் தேதி வரை மிக விமரிசையாக நடைபெறுகிறது.

வனத்துறை மற்றும் காவல்துறையின் ஏற்பாடுகள்

இத்திருவிழாவை முன்னிட்டு, தேனி மாவட்டம் உப்புத்துறை கருப்பசாமி கோயில் மலைப்பாதை வழியாகச் செல்லும் பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வனத்துறையும் காவல்துறையும் இணைந்து சிறப்பு ஏற்பாடுகளைச் செய்துள்ளன.

இது தொடர்பாக தேனி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் கே.எஸ்.பிரவீன் கௌதம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்புகள்:

பக்தர்கள் பயணம்: அனுமதி நேரம்

உப்புத்துறை பழைய கருப்பசாமி கோயில் பாதை வழியாக காலை 6:00 மணி முதல் நண்பகல் 12:00 மணி வரை மட்டுமே பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்படுவர். பிற நேரங்களில் பயணிக்க கண்டிப்பான தடை விதிக்கப்பட்டுள்ளது.

பயணக் கட்டுப்பாடுகள்

கர்ப்பிணிகள், சிறிய குழந்தைகள் மற்றும் முதியவர்கள் மலைப்பயணத்தைத் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

சுற்றுச்சூழல் பாதுகாப்பு

பிளாஸ்டிக் பொருட்கள், எளிதில் தீப்பற்றக்கூடியப் பொருட்கள் மற்றும் வனத்தைப் மாசுபடுத்தும் பொருட்களை கொண்டு செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், வனவிலங்குகளுக்கு உணவு வழங்குவதைத் தவிர்க்க வேண்டும்.

அத்தியாவசியப் பொருட்கள்

மலைப்பாதையில் குடிநீர் வசதி குறைவாக இருப்பதால், பக்தர்கள் தேவையான அளவு குடிநீர் மற்றும் டார்ச் லைட் கட்டாயம் கையில் வைத்திருக்க வேண்டும்.

காவல்துறை அறிவித்துள்ள குறிப்பிட்ட பாதைகளில் மட்டுமே பக்தர்கள் செல்ல வேண்டும். பயணத்தின் போது ஏதேனும் அவசர நிலை அல்லது சிரமம் ஏற்பட்டால், அருகில் உள்ள காவலர்களை தொடர்புகொண்டு உடனடியாக உதவி பெறலாம்.

இதையும் படிங்க: 'ஒருமுறையாவது ரேஷன் அரிசியை நாம் சமைத்து சாப்பிட்டிருப்போமா?' - சட்டப்பேரவையில் ஆதவ் அர்ஜூனா கேள்வி!

======

logo
Thamizh Alai
www.thamizhalai.in