நவ. 23 : சத்ய சாயி பாபா நூற்றாண்டு விழா: பக்தர்களின் ’ஆன்மிக குரு’

Bhagawan Sri Sathya Sai Baba 100th Birth Anniversary 2025 : பகவான் ஸ்ரீ சத்ய சாயி பாபா நூற்றாண்டு விழா அவரது பிறந்த நாளான இன்று புட்டபர்த்தியில், மக்கள் சேவைகளோடு சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
Bhagawan Sri Sathya Sai Baba 100th birth anniversary, is being Centenary celebrations in Puttaparthi today with public services
Bhagawan Sri Sathya Sai Baba 100th birth anniversary, is being Centenary celebrations in Puttaparthi today with public servicesGoogle
2 min read

மனித குலத்திற்கு வழிகாட்டி

Bhagawan Sri Sathya Sai Baba 100th Birth Anniversary 2025 : இந்தியாவின் தலைசிறந்த ஆன்மிக குருக்களில் ஒருவராக கருதப்படுபவர் பகவான் ஸ்ரீ சத்ய சாயி பாபா. தெய்வீக அவதாரமாக கருதப்படும் சத்ய சாயி பாபா, மனிதகுலத்திற்கு ஆற்றிய சேவைகள், அன்பு மற்றும் கருணையை உணர்த்தும் அறிவுரைகள் மூலம் இன்றும் லட்சக்கணக்கானோர் மனங்களில் வாழ்ந்து, அவர்களுக்கு வழிகாட்டியாக இருக்கிறார்.

பகவான் ஸ்ரீ சத்ய சாயி பாபாவின் 100வது பிறந்தநாள் இன்று (நவம்பர் 23, 2025) கொண்டாடப்படுகிறது. இதற்கான விழாக்கள் ஒருவாரம் முன்பே தொடங்கி விட்டன. உலகெங்கிலும் உள்ள அவரது லட்சக் கணக்கான அன்பு, சேவை மற்றும் ஆன்மீக வழிகாட்டுதலை நினைவு கூர்கின்றனர். வழிகாட்டி, பாதுகாவலர், அன்பின் சக்தியை வெளிப்படுத்தியவர் சாயி பாபா. .

சத்ய சாயி பாபா யார்?

அன்பு, உண்மை, தர்மம், சாந்தி, அகிம்சையை உள்ளடக்கிய வாழ்க்கை மற்றும் போதனைகள், 130க்கும் மேற்பட்ட நாடுகளில் மக்களை ஈர்த்தன. இதன் காரணமாகவே அவர் உலகம் முழுவதும் ஆன்மிக குருவாகப் போற்றப்பட்டு, நினைவு கூறப்படுகிறார். தன்னலமற்ற சேவை, அனைத்து மதங்களின் ஒற்றுமை, மனிதனுக்குள் தெய்வீகம் என்பதே சாயி பாபவின் தாரக மந்திரம்.

சாயி பாபாவின் சேவைகள்

சாயி அமைப்புகள், பள்ளிகள், மருத்துவமனைகள் மற்றும் மனிதாபிமானத் திட்டங்கள் உலகளாவிய வலையமைப்பின் மூலம் இன்றும் தொடர்ந்து தொய்வின்றி நடைபெற்று கொண்டிருக்கிறது. அவரது பணிகளை பக்தர்கள் தொடர்ந்து முன்னெடுத்து, சாயி பாபாவின் பெருமைகளை பரப்பி வருகின்றனர்.

புட்டபர்த்தியில் அவதரித்தார்

1926ம் ஆண்டு நவம்பர் 23ம் தேதி ஆந்திர மாநிலம் புட்டபர்த்தி என்ற சிறிய கிராமத்தில் பிறந்த அவர், 14 வயதில் தெய்வீக பணியைத் தொடங்கினார். அனைத்து மதங்களின் ஒற்றுமையை வலியுறுத்திய அவர், வாழ்க்கையில் அவசியம் கடைபிடிக்க வேண்டிய நியமங்களை போதித்தார்.

அவரது எளிய ஆனால் ஆழமான போதனைகள்

"அனைவரிடமும் அன்பு செலுத்துங்கள், அனைவருக்கும் சேவை செய்யுங்கள்"

"எப்போதும் உதவுங்கள், ஒரு போதும் காயப்படுத்தாதீர்கள்"

பல மில்லியன் மக்கள் பயனடைய, இலவச மருத்துவமனைகள், இலவச கல்வி நிறுவனங்கள் மற்றும் பிரமாண்டமான குடிநீர் திட்டங்கள் போன்ற தொண்டு நடவடிக்கைகள் மூலம் சாயி பாபா ஏழை, எளிய மக்களின் உள்ளத்தில் இடம் பிடித்தார் சாயி பாபா.

பக்தர்களை வழி நடத்தும் போதனைகள்

அவரது தெய்வீக போதனைகள், பல்லாயிரக் கணக்கானோரை தொட்டு, ஊக்கப்படுத்தி, வழி நடத்திக் கொண்டிருக்கிறது. அவரது மகாசமாதிக்கு பிறகும், புட்டபர்த்திக்கு வரும் பக்தர்கள் கூட்டம் குறையவில்லை. சீடர்களின் மூலம் அவரது சமூக பணிகள் தொடர்ந்து சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தொய்வின்றி செயல்படும் அறக்கட்டளைகள்

ஸ்ரீ சத்ய சாய் மத்திய அறக்கட்டளை மற்றும் ஸ்ரீ சத்ய சாய் சேவா நிறுவனங்கள்(Sri Sathya Sai Babu Centenary Celebrations 2025) ஆகியவை பகவான் ஸ்ரீ சத்ய சாய் பாபா அவர்களால் தொடங்கப்பட்ட பணியைத் தொடர்ந்து நடத்துகின்றன. மேலும் அவரது தன்னலமற்ற அன்பும், உலகளாவிய ஆன்மீகப் போதனைகளும் மில்லியன் கணக்கானவர்களை சமூக சேவைப் பாதையில் ஊக்கப்படுத்தியுள்ளன.

சத்ய சாயி பாபா நூற்றாண்டு விழா

பகவான் ஸ்ரீ சத்ய சாயி பாபாவின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, ரூ.100 நினைவு நாணயத்தை பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டு, நூற்றாண்டு விழாவை தொடங்கி வைத்தார். சிறப்பு அஞ்சல் தலையும் வெளியிடப்பட்டது.

பிரசாந்தி நிலையத்தில் வழிபாடு

பல்வேறு துறைகளை சேர்ந்த பிரபலங்கள் பலரும், சத்ய சாயி பாபாவின் மகாசமாதி அமைந்துள்ள பிரசாந்தி நிலையத்திற்கு வந்து, பகவான் ஸ்ரீ சத்ய சாயி பாபாவின் அருளாசியை பெற்றுச் செல்கிறார்கள். அவரது போதனைகள், மனித குலத்திற்கு ஆற்றிய சேவைகளை நினைவு கூர்ந்து வருகின்றனர்.

இன்று தனது நூற்றாண்டு பிறந்தநாளை கொண்டாடும் பகவான் சாயி பாபா, எத்தனை நூற்றாண்டுகள் கடந்தாலும், மகா சமாதியில் இருந்தவாறே மக்கள் சேவையை தொடர்வார். அவரது ஆன்மிக சிந்தனைகள், போதனைகள் பக்தர்களை என்றும் நல்வழியில் நடத்தும்.

ஸ்ரீ சத்ய சாயி பாபாவின் அருள்மொழிகள் :

கடவுள் அனைத்து பெயர்களிலும் மற்றும் அனைத்து வடிவங்களிலும் உள்ளது.

உண்மையான சந்தோஷம் உங்களிடமே உள்ளது.

நாளைய ஆசிரியர்கள் இன்றைய மாணவர்கள்.

சிறிய மனங்கள் குறுகிய சாலைகளை தேர்ந்தெடுக்கின்றன.

உங்கள் மனப் பார்வையை விரிவு படுத்தி உதவி, இரக்கம் மற்றும் சேவையின் பரந்த பாதையில் செல்லுங்கள்.

வீட்டில் நல்லிணக்கம் இருந்தால் நாட்டில் ஒழுங்கு இருக்கும். நாட்டில் ஒழுங்கு ஏற்பட்டால் உலகில் அமைதி நிலவும்.

மனிதனுக்கு சேவை செய்வதே கடவுளுக்கு சேவை செய்ய ஒரே வழி.

எளிமையாகவும் நேர்மையாகவும் இருங்கள்.

யாருக்கும் எதிராக நச்சு வார்த்தைகளைப் பயன்படுத்தாதீர்கள். ஏனென்றால் வார்த்தைகள் அம்புகளை விட மிகவும் ஆபத்தானவை.

அன்பு என்றால் தன்னை சேவையாக வெளிப்படுத்த வேண்டும்.

=====

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in