ஏழுமலையான் சேவையில் காஞ்சிபுரம் பட்டு வஸ்திரங்கள் : தமிழக "கோ-ஆப்டெக்ஸ் மூலம் கொள்முதல்” : TTD கூட்டத்தில் முடிவு....

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தேவைப்படும் பட்டு வஸ்திரங்களை, தமிழக கோ-ஆப்டெஸ்க் நிறுவனத்திடம் இருந்து வாங்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
decision made to purchase the silk garments required for Tirupati Ezhumalaiyan Temple from Co-optex
decision made to purchase the silk garments required for Tirupati Ezhumalaiyan Temple from Co-optexgoogle
1 min read

திருப்பதி ஏழுமலையான் கோவில்

உலகப் புகழ்பெற்ற திருப்பதி- திருமலை ஏழுமலையான் கோவிலில், பெருமாள் சேவை மற்றும் முக்கிய பிரமுகர்கள், சிறப்பு வழிபாடுகளில் பங்கேற்கும் பக்தர்களுக்கு பட்டு வஸ்திரங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

பட்டு வஸ்திரங்கள் கொள்முதல்

ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சியின் போது, பட்டு வஸ்திரங்களுக்கு பதிலாக போலி வஸ்திரங்கள் கொள்முதல் செய்யப்பட்டு, பக்தர்களுக்கு வழங்கப்பட்டதாக புகார்கள் எழுந்தன.

அறங்காவலர் குழுக் கூட்டம்

இந்தநிலையில், அறங்காவலர் குழுக் கூட்டம் திருமலையில் நடைபெற்றது. 86 அம்​சங்​கள் குறித்து இதில் விவா​திக்​கப்​பட்​டது.

திரு​மலை​யில் தண்​ணீர் வீணாவதை தடுக்​க கோகர்பம் அணை​யில் இருந்து ஃபில்​டர் பாயின்ட் வரை 2 கி.மீ தூரத்​துக்கு ரூ.6 கோடி செல​வில் பைப் லைன்

கோ-ஆப்டெஸ்க் மூலம் பட்டு வஸ்திரங்கள்

ஆப்கோ மற்​றும் தமிழக கோ ஆப்​டெக்ஸ் நிறுவனம் மூலம் பட்டு வஸ்​திரங்​கள், போர்​வை​கள் ஆகியவற்றை ரூ.44.20 கோடிக்கு வாங்க முடிவு செய்​யப்​பட்​டுள்​ளது.

காஞ்சிபுரம் பட்டு வஸ்திரங்கள்

கோ-ஆப்டெக்ஸ், காஞ்சிபுரம் மற்றும் பிற ஊர்களின் தரமான பட்டு வஸ்திரங்களுக்கு பெயர் பெற்றது.

பட்டு வஸ்திரங்கள்: ஏழுமலையானுக்கு சிறப்பு விசேஷங்களின் போது சாத்துவதற்கான உயர்தர பட்டு வஸ்திரங்கள் கோ-ஆப்டெக்ஸ் மூலம் கொள்முதல் செய்யப்பட உள்ளன.

ஏழுமலையானுக்கு நிலம் காணிக்கை

கோவை பேரூர் தாலுகா செட்​டி​பாளை​யம் பகு​தி​யில் ஜி-ஸ்​கொயர் நிறு​வனத்​தார் திருப்​பதி தேவஸ்​தானத்​துக்கு 19.43 ஏக்​கர் நிலத்தை பத்​திரப் பதிவு செய்து கொடுத்​துள்​ளனர்.

இதனை தேவஸ்​தான அசையா சொத்​து​கள் பதிவேட்​டில் சேர்க்க அறங்​காவலர் குழுக் கூட்​டத்​தில் முடிவு செய்யப்​பட்​டுள்​ளது.

மும்​பை​யில் பத்​மாவதி தாயார் கோயில் கட்ட தேவை​யான நிதி​யை அளிக்க அறங்​காவலர் குழு உறுப்​பினர் சவுரப் போரா முன்​வந்​துள்​ளார்.

நிரந்தர யாகசாலை

திருப்​பதி அலிபிரி​யில் ரூ.4.75 கோடி செல​வில் நிரந்தர யாக சாலை அமைக்​கப்​படும். திரு​மலை​யில் உள்ள சாலைகள், சர்​க்கிள்​களுக்கு சுவாமி பெயர்​கள் சூட்​டப்​படும் என்றும் அறங்காவலர் குழு கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.

=================

logo
Thamizh Alai
www.thamizhalai.in