சபரிமலையின் எருமேலி வரை ரயில் பாதை : பக்தர்களுக்கு நற்செய்தி!

Sabarimala Temple Angamaly to Erumely Railway Line : சபரிமலையின் அங்கமாலி முதல் எருமேலி வரை, ரயில் பாதை அமைக்க திட்டமிடப்பட்டதை தொடர்ந்து, தற்போது கேரள அரசு அதற்கு நிதி ஒதுக்கியுள்ளது.
Good News Kerala government plans to build railway line from Angamaly to Erumely for Sabarimala Ayyappa Temple visits Funds allocated
Good News Kerala government plans to build railway line from Angamaly to Erumely for Sabarimala Ayyappa Temple visits Funds allocatedSource : Sabarimala Ayyappa Temple
1 min read

சபரிமலை ரயில்பாதைக்கு ஒதுக்கப்பட்ட நிதி

Sabarimala Temple Angamaly to Erumely Railway Line : சபரிமலை ரயில்வே திட்டத்துக்கு ஆயிரத்து 900 கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்து கேரள அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

111 கி.மீ. புதிய ரயில் பாதை

சபரிமலை செல்லும் பக்தர்களின் வசதிக்காக அங்கமாலி முதல் எருமேலி வரை 111 கிலோ மீட்டர் தூரத்துக்கு ரயில் பாதை அமைக்க திட்டமிடப்பட்டது. 1997 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்ட இந்த திட்டம், நிதி நெருக்கடி மற்றும் நில கையகப்படுத்துவதில் இருந்த சிக்கல்களால் முடங்கியது.

இந்த நிலையில் 2021 ஆம் ஆண்டு சபரிமலை ரயில்வே திட்டத்தை செயல்படுத்துமாறு மத்திய அரசை வலியுறுத்திய கேரள அரசு, 50 விழுக்காடு செலவை ஏற்றுக் கொள்வதாக அறிவித்தது.

ரூ.3,800 கோடி ஒதுக்கீடு

இதனிடையே திட்டத்துக்கான செலவு மூவாயிரத்து 800 கோடி ரூபாயாக அதிகரித்து, செலவு குறித்த பொருளாதார செலவு பட்டியலும் தெரியவந்தது.

900 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு

இந்த சூழலில், திட்டத்துக்கான பாதித் தொகையான ஆயிரத்து 900 கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்து கேரள அரசு தற்போது அரசாணை வெளியிட்டுள்ளது.

எருமேலி வரை 14 ரயில் நிலையங்கள்

கேரள உள்கட்டமைப்பு முதலீட்டு நிதி வாரியத்தின் நிதி உதவியுடன் திட்டம் செயல்படுத்தப்படும் என கேரள அரசு கூறியுள்ளது. அங்கமாலி முதல் எருமேலி வரையிலான ரயில் திட்டத்தில் மொத்தம் 14 ரயில் நிலையங்கள் இடம்பெற உள்ளன என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

கேரள கோவில் நிர்வாகம் தரப்பில், தொடர்ந்து கேரள அரசுக்கு பல்வேறு கோரிக்கைகள் விடுக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது இந்த அறிவிப்பு கோவில் நிர்வாகத்திற்கும் வரும் பக்தர்களுக்கு ஒரு மகிழ்ச்சிகற செய்தியாக வெளிவந்துள்ளது.

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in