நவராத்திரி விழா 2025 : மூன்று தேவியர் வழிபாடு : வழிமுறைகள் என்ன?

Navaratri 2025 Celebration At Home Procedures in Tamil : நவராத்திரி விழாவை எப்படி கொண்டாடுவது? மூன்று தேவியரை வணங்கும் முறை குறித்து விரிவாக பார்ப்போம்.
Navaratri 2025 Celebration At Home Procedures in Tamil
Navaratri 2025 Celebration At Home Procedures in Tamil
1 min read

நாடு முழுவதும் கொண்டாடப்படும் நவராத்திரி :

Navaratri 2025 Celebration At Home Procedures in Tamil : இந்தியாவில் நாடு முழுவதும் கொண்டாடப்படும் விழாக்களில் ஒன்று தான் நவராத்திரி. ஆனால், ஒவ்வொரு மாநிலத்திற்கும் இந்த வழிபாடு என்பது வேறுபடும். மேற்கு வங்கத்திலும் கடைபிடிக்கும் முறைகள், தென்னிந்தியாவில் இருக்காது. வழிபாட்டு முறைகளில் வேறுபாடு இருந்தாலும், அம்பாளை வணங்குவது மட்டும் பொதுவானது.

செப்.22 முதல் அக் 2 வரை நவராத்திரி :

இந்த ஆண்டு நவராத்திரி கொண்டாட்டங்கள் வரும் 22ம் தேதி தொடங்கி(Navaratri 2025 Date), அக்டோபர் 2ம் தேதியோடு முடிவடைகிறது. நவராத்திரியை கொண்டாட, முதலில் வீட்டைச் சுத்தம் செய்து, விளக்குகள் மற்றும் பூக்களால் அலங்கரிக்க வேண்டும், பின்னர் கொலு வைக்க வேண்டும்.

தேவியரை வழிபடுவது எப்படி? :

முதல் மூன்று நாட்கள் துர்கையையும், அடுத்த மூன்று நாட்கள் லட்சுமியையும்(Lakshmi Devi Poojai in Navaratri), கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதியையும் வணங்க வேண்டும். இந்த ஒன்பது நாட்களும் காலையும், மாலையும் சிறப்பு பூஜைகள், பாடல்கள், நடனங்கள், விருந்துகள் மற்றும் தான தர்மங்கள் செய்து, குடும்பத்துடன் இணைந்து கொண்டாடுவது சிறப்பு.

10வது நாள் விஜயதசமி விழா :

இறுதியாக 10வது நாளான விஜயதசமி என்பது(Vijayadashami 2025), அதர்மத்தின் மீதான தர்மத்தின் வெற்றியை குறிக்கிறது. நவராத்திரியின் போது, வீட்டில் அம்பிகை எழுந்தருள்வதாகக் கருதப்படுவதால், வீட்டைச் சுத்தம் செய்து, விளக்குகள் மற்றும் வண்ணமயமான பூக்களால் அலங்கரிக்க வேண்டும்.

கொலு வைத்து வழிபாடு :

குலதெய்வங்கள் மற்றும் தெய்வங்களின் பொம்மைகளை வரிசையாக அடுக்கி, கொலுவை அமைக்க வேண்டும். இது அவரவர் வசதியை பொருத்து கொலு வைக்கலாம்(Navaratri Golu 2025). துர்கா தேவி, லட்சுமி தேவி, சரஸ்வதி தேவியருக்கு பிடித்தமான உணவு பொருட்களை நெய்வேத்தியமாக படைத்து, குடும்பத்தினருடன் உண்ணலாம்.

மேலும் படிக்க : ஆளுநர் மாளிகையில் நவராத்திரி விழா: பங்கேற்க ஆர்.என்.ரவி அழைப்பு

தான, தர்மங்கள் செய்ய வேண்டும் :

இந்த புனிதமான நாட்களில், ஏழைகளுக்கு தான தர்மங்கள் செய்து, அவர்களின் ஆசியினை பெறலாம். பத்தாம் நாளான விஜயதசமி அன்று, தேவியின் வெற்றியையும், தர்மத்தின் வெற்றியாகவும் போற்றி விழா எடுக்க வேண்டும்.

கொலு வைக்காமலும் கொண்டாடலாம் :

நவராத்திரியை கொலு இல்லாமல் கொண்டாடலாம்(Navaratri Celebration Without Golu). தவறு ஏதும் கிடையாது. வீட்டில் கொலு வைக்காமல், தெய்வ வழிபாடுகளைச் செய்து, விளக்குகளை ஏற்றி, இனிப்புப் பொருட்கள் செய்து, மூன்று தேவியருக்கும் படைத்து, குடும்பத்தினருடன் வழிபாட்டில் ஈடுபடலாம்.

=====

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in