2026 அட்சய திருதியை எப்போது? : அன்றைய தினம் என்ன செய்ய வேண்டும்? : தங்கம் வாங்க நல்ல நேரம்? வழிபடும் முறை!

ஆன்மீக மற்றும் புராதணங்களின்படி வறுமையில் வாடிய குசேலருக்கு கிருஷ்ணர் அழியாத செல்வத்தை அள்ளிக்கொடுத்த நாள்.
What should be done on that day? The Method of Worship!
What should be done on that day? The Method of Worship!source : google
1 min read

2026 ஆம் ஆண்டின் அட்சய திருதியை வரும் 19 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படவுள்ளது.

அட்சய திருதியை என்றால் என்ன?

அட்சயம் என்ற சொல்லுக்கு என்றென்றும் குறையாதது, அழியாதது என்று பொருள்.

  • ஆன்மீக மற்றும் புராதணங்களின்படி வறுமையில் வாடிய குசேலருக்கு கிருஷ்ணர் அழியாத செல்வத்தை அள்ளிக்கொடுத்த நாள்.

  • அதேபோல், பார்வதி தேவி அன்னபூரணியாக அவதரித்து சிவபெருமானுக்கே அன்னமிட்ட நாள்.

  • கங்கை நதி பகீரதனின் கடும் தவத்தால் விண்ணிலிருந்து மண்ணுலகிற்கு வந்த நாள்.

  • வியாசர் மகாபாரத்தை எழுதத் தொடங்கியது, பாண்டவர்களுக்கு வற்றாத உணவை வழங்கும் அட்சய பாத்திரம் கிடைத்ததும் அட்சயதிருதியை நாளில் தான் என கூறப்படுகிறது.

2026 அட்சய திருதியை எப்போது?

  • திருதியை திதி தொடக்கம்: ஏப்ரல்19 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை, காலை 10.49

  • திருதியை திதி நிறைவு: ஏப்ரல் 20 ஆம் தேதி திங்கட்கிழமை, காலை 07.27

  • தங்கம் வாங்க உகந்த நேரம் : ஏப்ரல் 19 காலை 10.49 மணிமுதல்

அட்சய திருதியை அன்று என்ன செய்ய வேண்டும்?

தங்கம், வெள்ளி விலை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்வதால் தங்கம் வெள்ளி வாங்க முடிந்தவர்கள் அன்றைய தினம் வாங்கலாம். அப்படி வாங்க முடியாதவர்கள் கல் உப்பு, மஞ்சள்,அல்லது புதிய ஆடை முதலானவற்றை வாங்கலாம்.

பூமி பூஜை , தொழில் தொடங்க

வீடு கட்ட திட்டமிட்டு இருப்பவர்கள் அன்றைய தினம் பூமிபூஜை செய்யலாம். புதிதாக தொழில் தொடங்க நினைப்பவர்கள் அல்லது சேமிப்பை தொடங்க நினைப்பவர்கள் அன்றைய தினம் தொடங்கலாம்.

தானம் செய்வதன் முக்கியத்துவம்

தங்கம் , வெள்ளி, என எதை வாங்கினாலும் சரி, வாங்கமுடியவில்லை என்றாலும் சரி, அட்சய திருதியை நாளின் சிறப்பே தானம் செய்வதுதான். எனவே உங்களால் முடிந்தவற்றை ஏழை, எளிய மக்களுக்கு வறுமையில் பிடியில் இருப்பவர்களுக்கு தானம் செய்யலாம்.

அழிக்க முடியாத புண்ணியத்தைப் பெற

அன்றைய தினம் நீங்கள் செய்யும் தானம் உங்களுக்கு அழியாத புண்ணியத்தைக் கொடுக்கும் என்பது நம்பிக்கை.

என்னென்ன தானம் செய்யலாம்

தானம் செய்ய நினைப்பவர்கள் குடை,விசிறி,காலணி,பானகம், மோர்,நீர், அன்னதானம் என தங்களால் இயன்றதை உள்ளன்போடு செய்யலாம்.

அட்சய திருதியை: வழிபடும் முறை

அன்றைய தினம் வீட்டிலேயே லட்சுமி தேவியையும், மகாவிஷ்ணுவையும் வழிபடலாம். விடியற்காலை எழுந்து நீராடி , மாக்கோளமிட்டு பூஜையறையில் விஷ்ணு, மகாலட்சுமி படங்களுக்கு மலரிட்டு, நெய் தீபம் ஏற்றி மனதார வழிபட வேண்டும்.

உச்சரிக்க வேண்டிய பாராயணம்

முடிந்தால் லட்சுமி அஷ்டோத்திரம் அல்லது கனகதாரா ஸ்தோத்திரம் முதலானவற்றை பாராயணம் செய்யலாம்.

கற்கண்டு,பழங்கள், வெண்பொங்கல்,பால் பாயசம் நிவேதனமாக படைக்கலாம்.

====

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in