Kandha Shasthi Festival began with Yagasalai Pooja at Subramaniam Swamy Temple in Tiruchendur
Kandha Shasthi Festival began with Yagasalai Pooja at Subramaniam Swamy Temple in Tiruchendur

கந்தசஷ்டி விழா யாகசாலை பூஜையுடன் தொடக்கம் : 27ம் தேதி சூரசம்ஹாரம்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சாமி கோவிலில் கந்தசஷ்டி விழா யாகசாலை பூஜையுடன் தொடங்கியது.
Published on

கந்தசஷ்டி விழா

தூத்துக்குடி மாவட்டம் ​திருச்​செந்​தூரில் உள்ள சுப்​பிரமணிய சுவாமி கோவி​லில் மிகவும் புகழ்பெற்றதாகும், ஆண்டுதோறும் இங்கு முக்கிய விழாக்கள் நடைபெற்றாலும், கந்தசஷ்டி, சூரசம்ஹாரத்திற்கு தனிச்சிறப்பு உண்டு. இதன்படி கந்தசஷ்டி திரு​விழா இன்று தொடங்கியது.

யாகசாலை பூசையுடன் தொடக்கம்

இதையொட்​டி, இன்று அதி​காலை 1 மணிக்கு கோவில் நடை​திறக்கப்பட்டது. சிறப்பு அபிஷேக ஆராதனைக்கு பிறகு சுவாமி ஜெயந்​தி​நாதர் வள்​ளி - தெய்​வானை​யுடன் தங்​கச்​ சப்​பரத்​தில் சண்​முகவி​லாச மண்​டபத்​தில் எழுந்​தருளினார். பின்னர் அங்​கிருந்து திரு​வாவடு​துறை ஆதீன சஷ்டி மண்​டபத்​துக்கு சென்ற சுவாமிக்கும், அம்மனுக்கும் அபிஷேகம், அலங்​காரம் செய்​யப்​பட்ட பின்​னர், தங்க ரதத்​தில் எழுந்தருளி கிரி வீதி​யில் பவனி வந்து கோயில் அடைந்தார். யாகசாலை பூஜைகளுடன் கந்தசஷ்டி விழா முறைப்படி தொடங்கியது.

27ம் தேதி சூரசம்ஹாரம்

விழா​வின் முக்​கிய நிகழ்ச்​சி​யான சூரசம்​ஹாரம் வரும் 27ம் தேதி நடை​பெறுகிறது. அன்று மாலை 4.30 மணிக்கு சுவாமி ஜெயந்​தி​நாதர் சூரசம்​ஹாரத்​துக்காக எழுந்​தருள்​கிறார். பின்​னர் கடற்​கரை​யில் சுவாமி ஜெயந்​தி​நாதர், சூரபத்​மனை வதம் செய்​யும் நிகழ்ச்சி நடை​பெறும். இந்த நிகழ்வில் லட்சக் கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு ஜெயந்திநாதரை வழிபாடு செய்வார்கள். தொடந்து சந்​தோஷ மண்​டபத்தில் சுவாமிக்​கும், அம்​மனுக்​கும் மகா தீபா​ராதனை காட்டப்படும்.

28ம் தேதி திருக்கல்யாணம்

28ம் தேதி அதி​காலை தெய்​வானை அம்​மன் கோயி​லில் இருந்து தபசு காட்​சிக்கு புறப்​படு​கிறார். மாலை 6 மணி​யள​வில் அம்​மனுக்​கு, சுவாமி காட்சி அருளி தோள் மாலை மாற்​றும் வைபவம் நடக்​கிறது. இரவு சுவாமி குமர​விடங்க பெரு​மானுக்​கும், தெய்​வானை அம்​மனுக்​கும் திருக்​கல்​யாணம் நடக்​கிறது.

திருச்செந்தூர் விழாக்கோலம்

கந்தசஷ்டி விழா தொடங்கியதால், திருச்செந்தூர் விழாக்கோலம் பூண்டு இருக்கிறது. கோவில் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. 27ம் தேதி சூரசம்ஹாரத்தை கண்டு வழிபட லட்சக் கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள் என்பதால், அவர்களுக்கான அடிப்படை வசதிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. சிறப்பு ரயில்கள், சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட இருக்கின்றன.

===============

logo
Thamizh Alai
www.thamizhalai.in