17 ஆண்டுகளுக்குப் பிறகு மதுரை மீனாட்சி அம்மன் கோவில் குடமுழுக்கு விழா : நாளை விமரிசையாக நடைபெறுகிறது!

17 ஆண்டுகளுக்குப் பிறகு மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நாளை மஹா குடமுழுக்கு விழா நடைபெறுகிறது. விழா நிகழ்வுகள் மற்றும் பூஜை நேரங்கள் பற்றிய முழு விவரங்கள்!
madurai meenakshi amman
madurai meenakshi ammansource:thamizhalai,ai generated
1 min read

உலகப் புகழ்பெற்ற மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் கடந்த 2009-ஆம் ஆண்டு ஏப்ரல் 8-ஆம் தேதி குடமுழுக்கு விழா நடைபெற்ற நிலையில், தற்போது 17 ஆண்டுகளுக்குப் பிறகு நாளை (செப்டம்பர் 17) மஹா குடமுழுக்கு விழா மிக விமர்சையாக நடைபெறவுள்ளது.

12 கால யாகசாலை பூஜைகள்

இப்பெருவிழாவிற்காக கடந்த செப்டம்பர் 11-ஆம் தேதி முதல் யாகசாலை பூஜைகள் தொடங்கின. நேற்றைய தினம் 8 மற்றும் 9-ஆம் கால யாகசாலை பூஜைகள் சிறப்பாக நடைபெற்று முடிந்தன. குடமுழுக்கு நாளான நாளை வரை மொத்தம் 12 கால யாகசாலை பூஜைகள் நடைபெற உள்ளன.

பரிவார மூர்த்திகளுக்குக் குடமுழுக்கு

இன்று (செப்டம்பர் 16) அதிகாலை 5 மணி முதல் கோவிலில் உள்ள பரிவார மூர்த்திகளுக்குக் குடமுழுக்கு நன்னீராட்டு நடைபெற்றது. சித்தி விநாயகர், கூடல் குமாரர், வன்னி மரத்தடி விநாயகர், தட்சிணாமூர்த்தி, துர்க்கை, மகாலட்சுமி,

நவக்கிரகங்கள், பத்திரகாளி, அக்னி வீரபத்திரர் மற்றும் 63 நாயன்மார்கள் ஆகிய சுவாமி சிலைகளுக்கு யாகசாலையில் வைத்துப் பூஜிக்கப்பட்ட புனித நீரால் அபிஷேகம் செய்யப்பட்டு, மஹா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

சுவாமி எழுந்தருளல்

இக்குடமுழுக்கு நன்னீராட்டு விழாவில் பங்கேற்பதற்காகத் திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி மதுரைக்கு எழுந்தருளியுள்ளார்.

நாளைய முக்கிய நிகழ்வுகள்

நாளை (செப்டம்பர் 17) நடைபெறும் முக்கிய நிகழ்வுகளின் கால அட்டவணை:

அதிகாலை 3:35 மணி: மங்கள இசை முழக்கம்.

அதிகாலை 4:00 மணி: விக்னேஸ்வர பூஜை, புண்யாஹவாசனம், பன்னிரெண்டாம் கால யாக வேள்வி மற்றும் புனித நீர் கலசங்கள் புறப்பாடு.

காலை 7:40 மணி: மீனாட்சி - சுந்தரேஸ்வரர் தங்க விமானங்கள் மற்றும் ராஜகோபுரங்களுக்குச் சிவாச்சாரியார்கள் புனித நீர் ஊற்றிச் சமகால மஹா குடமுழுக்கு.

காலை 7:55 மணி: மூலவர் மீனாட்சி அம்மனுக்கு மஹா குடமுழுக்கு.

காலை 8:10 மணி: மூலவர் சுந்தரேஸ்வரர் சுவாமிக்கு மஹா குடமுழுக்கு, தொடர்ந்து மஹா தீபாராதனை வழிபாடு மற்றும் திருநீறு, திருவமுது பிரசாதங்கள் வழங்குதல்.

அறங்காவலர் குழு தலைவர் குற்றச்சாட்டு

இதனிடையே, அருள்மிகு மீனாட்சி அம்மன் கோவில் குடமுழுக்கு விழா ஏற்பாடுகளில் அரசியல் தலையீடுகள் அதிகமாக இருப்பதாகக் கோவில் அறங்காவலர் குழுத் தலைவர் பரபரப்பு குற்றச்சாட்டையும் முன்வைத்துள்ளார்.

======

logo
Thamizh Alai
www.thamizhalai.in