இதுதான் மகா சிவராத்திரி 2026 - இத தெரிஞ்சுகிட்டு கண் முழிங்க!

Shivaratri 2026 : மகா சிவராத்திரி எப்போது வருகிறது, இந்த நாளில் என்ன செய்ய வேண்டும், மதாந்திர சிவராத்திரி என சிவராத்திரியின் சிறப்பம்சத்தையும், வழித்தோன்றல் புராணக்கதையும் பற்றி விரிவாக பார்க்கலாம்.
Maha Shivaratri 2026 A Night of Awakening Shivaratri 2026 Date and Time Significance Rituals in Tamil
Maha Shivaratri 2026 A Night of Awakening Shivaratri 2026 Date and Time Significance Rituals in TamilSource : Isha
1 min read

மகா சிவராத்திரி வழிபாடு

Maha Shivaratri 2026 Date and Time in Tamil : சிவபெருமானுக்கு உரிய விசேஷங்கள், விரத நாட்கள், பண்டிகைகள் ஏராளம் உண்டு. குறிப்பாக மாசி மாதமே சிவனை வழிபடும் மாதமாக கருதப்படுகிறது. ஒவ்வொரு மாதமும், அமாவாசைக்கு முந்தைய நாள், தேய்பிறை சதுர்த்தசி திதி, மாத சிவராத்திரியாக கொண்டாடப்படும். இதில், மாசி மாதம் வரும் அமாவாசைக்கு முந்தைய நாள் தான், மகா சிவராத்திரியாக கொண்டாடப்படுகிறது.

இதில் குறிப்பாக, சிவராத்திரி என்று சொன்னாலே, அன்று இரவு தூக்கம் இல்லை என்ற அர்த்தத்தைக் குறிக்கும். 'என்ன இன்னிக்கு சிவராத்திரியா' என்று தூங்காத இரவுகளை பயன்படுத்தும் பொதுவான வாக்கியமாகும், அப்படி என்றால், மகா சிவராத்திரி என்பது என்ன அதன் வரலாறு மற்றும் அன்று முளிப்பதனால் கிடைக்கும் நன்மைகள் என்று பலருக்குள் பல கேள்விகள் மற்றும் பதில், இதன் உண்மை கதையை தெளிவாக பார்க்கலாம்.

மகா சிவராத்திரி கொண்டாட காரணம்

பாற்கடலில் இருந்து அமிர்தத்தை எடுக்கும் முயற்சியில், அதில் இருந்து வெளியான கொடிய ஆலகால விஷம் உலகத்தில் உள்ள எல்லா உயிரினங்களை அழிக்கும் ஆற்றலைக் கொண்டிருந்தது. உலகத்தை ரட்சிக்க, , சிவபெருமான் அந்த விஷத்தை பருகிய இரவு தான் மகா சிவராத்திரியாகக் கொண்டாடக் காரணமாகும், என்று இன்றுவரை புராணங்கள் வாயிலாகவும், நம் மரபினர்கள் வழியாகவும் நாம் படித்து கேட்டு, அறிந்த ஒன்று.

ஈசன் நீலகண்டனாக மாறிய நாள்

சிவபெருமான் விஷத்தைக் குடித்தாலும், பார்வதி தேவி, அவரது உடலுக்குள் விஷம் பரவாத வகையில் தொண்டையை அழுத்திப் பிடித்துக் கொண்டார். விஷம் சிவனின் தொண்டைப்பகுதியில் தங்கி, நீல நிறமாக மாறியது. இதனால், நீலகண்டன் என்ற பெயரில் வணங்கப்படுகிறார். விஷம் உடலில் இறங்காமல் இருக்க, அந்த இரவில் சிவபெருமான் உறங்காமல் இருந்தார், சிவனே உறங்காமல் இருந்த நாள் தான் மகா சிவராத்திரியாகும் என்று நம்மில் பெரும்பாளானோர் அறிந்தது.

சிவன் மற்றும் பார்வதி திருமணம் நடந்த நாள்

இதில் குறிப்பாக, புராணங்களின் படி, சிவபெருமான் மற்றும் பார்வதி தேவியின் திருமணம் நடந்த நாள் தான் மகா சிவராத்திரி என்று கூறப்படுகிறது. ஈசனின் பல திருவிளையாடல்கள் நடந்தது மகா சிவராத்திரி நாளில் தான் என்றும் நமக்கு, நம் முன்னோர்கள் மூலமாக செவிவழி வந்தடைகிறது. எனவேதான், சிவராத்திரியன்று நாம் முழிக்க வேண்டும், தூங்கக்கூடாது என்பது காலங்கள் கடந்து இன்ற ஒரு ஐதீகமாக இருக்கிறது. எனவே, அடுத்த சிவராத்திரியை வெறும் கண்களை திறந்து கடமைக்கு கடந்து செல்லாமல், அதில் வரலாறையும், புராண கதைகளையும் அறிந்து, இருப்பவர்களுக்கு கடத்தி செல்லுங்கள், இதுதான் மகா சிவராத்திரி என்று.

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in