

மகா சிவராத்திரி 2026 தேதி :
Maha Shivaratri 2026 Worship Date and Time in Tamil : நாம் தெரிந்தும் தெரியாமலும் செய்த பாவங்களை போக்கவல்ல புண்ணிய நாள் என்றால் அது மகா சிவராத்திரி தான். சிவன் அருள் இருந்தால் போதும் வாழ்வில் வரும் எத்தகைய துன்பங்களையும் தாண்டி விடலாம் என்பது சிவ பக்தர்களின் நம்பிக்கை.
சோதித்தாலும், சொர்க்கமாக்கும் சிவன்
ஏனென்றால் சிவ பெருமான் எத்தகைய துன்பங்களை தந்தாலும் அவை நம்மை சோதிக்கத்தான் என்றும் அந்த சோதனைகளைக் கடந்துவிட்டால் நம் வாழ்வையே அவர் சொர்க்கமாக மாற்றி விடுவார் என்பதும் நம்பிக்கை.
மகா சிவராத்திரி
சிவபெருமானுக்கும் பார்வதி தேவிக்கும் தெய்வீக திருமணம் நடைபெற்ற தினம் தான் மகா சிவராத்திரி என்று நம்பப்படுகிறது. அன்றைய நாளில் விரதமிருந்து கண்விழித்து அந்த ஈசனையே நினைத்திருந்தால் பாவ மோட்சங்கள் விலகும் என்பது ஐதீகம்.
சிவனை நினைத்தால் வாழ்வில் வளம்
இதனால் இந்த நாளை சிவ பக்தர்கள் எப்போதும் தவறவிடுவதே இல்லை. ஈசனை மனமுறுகி நினைத்து , விரதமிருந்து அவனை மனதார உணர்ந்துகொள்கிறார்கள். இதனால் வாழ்வில் நலமும், வளமும் , மன நிறைவும் பெருகுவதாக பக்தர்கள் கூறுகின்றனர்.
மகா சிவராத்திரி 2026 தேதி :
2026 ஆம் ஆண்டிற்கான மகாசிவராத்திரி எந்த நாளில் வருகிறது என்று பல பக்தர்கள் குழப்பத்தில் உள்ளனர். பிப்ரவரி 15 அல்லது பிப்ரவரி 16 எந்த தேதியில்(Maha Shivaratri 2026 date and time in Tamil) விரமிருந்து வழிபட வேண்டும் என்று புரியாத வண்ணம் உள்ளனர்.
பிப்ரவரி 15 - மகா சிவராத்திரி :
பிப்ரவரி 15 அல்லது 16 எந்த தேதியில் வணங்க வேண்டும் என்றால், 2026 மகாசிவராத்திரி பிப்.15 ஞாயிற்றுக் கிழமை தான் சரியான நாள்.
ஏனென்றால் பிப்.15 தேதி மாலை சுதர்த்தசி தொடங்கி அடுத்தநாள் காலை 6:30 மணிக்கு முன்பாக சதுர்த்தசி நிறைவடைகிறது. பிப்.15 அன்று மாலை சுமார் 5:50 மணியளவில் தொடங்கி அடுத்த நாள் காலை 6:42 மணிக்குள் விரதத்தை நிறைவு செய்வது சிறப்பு.
மாலை வரை கண்விழிக்க வேண்டும்
காலையிலேயே விரதம் முடிந்தால் அன்றுமாலை வரை பொறுமையாக காத்திருந்து 6 மணிக்குமேல் தூங்க நினைப்பவர்கள் தூங்கலாம்.
மகாசிவராத்திரி வழிபாடு
சிவபெருமானுக்கு இந்த பிரசாதம் தான் படைக்க வேண்டும் இந்த மலரைத்தான் வைக்க வேண்டும் என்றில்லை மனதார உங்களிடம் என்ன இருக்கின்றதோ அதை உள்ளன்போடு படைத்தாலே போதும். முடிந்தவர்கள் பால், தேன், தயிர், நெய் முதலானவற்றைக் கொண்டு சிவனுக்கு அபிஷேகம் செய்யலாம்.
மகாசிவராத்தியின் போது உச்சரிக்க வேண்டிய மந்திரம்
மகா சிவராத்திரி அன்று முடிந்தவர்கள் சிவபுராணம் படிக்கலாம். சிவன் தொடர்பான இதிகாச கதைகள் கேட்கலாம் . தங்களது குழந்தைகளுக்கும் சொல்லலாம்.
ஓம் த்ரியம்பகம் யஜாமஹே ஸுகந்திம் புஷ்டிவர்தனம், உர்வாருகமிவ பந்தனான் ம்ருத்யோர் முக்ஷீய மாம்ருதாத் எனும் மஹா மிருத்யுஞ்சய மந்திரத்தையும்,
ஓம் தத்புருஷாய வித்மஹே மஹாதேவாய தீமஹி, தன்னோ ருத்ரஹ் ப்ரசோதயாத் எனும் சிவ காயத்ரி மந்திரத்தையும் உச்சரிக்கலாம்.
’ஓம் நமசிவாய’
இரண்டுமே எனக்கு கடினமானவை என்னால் முடியவில்லையே என்று வருந்துபவர்கள் ’ஓம் நமசிவாய’ எனும் மூல மந்திரத்தைச் சொன்னாலே போதும் அந்த சிவனின் அருள் பரிபூரணமாக கிடைக்கும்...வாழ்வும் வளவும் சிறந்து உங்கள் இல்லங்களில் மகிழ்ச்சி நிலைக்கும்.
எனவே, வரும் 15ம் தேதி மகாசிவராத்திரி அன்று விரதம் இருந்து, கண்விழித்து, சிவபெருமானை நினைத்து வழிபட்டு, அவரது பரிபூரண அருளை பெறுவோமாக.
=====