

மகா சிவராத்திரி விழா
Maha Sivarathiri 2026 Fasting Date and Auspicious Time in Tamil : ஒவ்வொரு ஆண்டும் மாசிமாத கிருஹ்ணபட்ச சதுர்த்தசியன்று, அமாவாசைக்கு முதல் நாள் மகா சிவராத்திரி விரதம் கடைபிடிக்கப்படுகிறது.
மகா சிவராத்திரி என்றாலே அன்று இரவு முழுவதும் உறங்காமல் இருக்க வேண்டும் என்பது மட்டும் பலருக்கும் தெரியும்.
சிவராத்தியின் மகிமை
ஆனால் மகா சிவராத்திரியிண் விரத வகைகள் எத்தனை, அவற்றின் பலன் என்ன என்பது பற்றி முழுமையாக தெரியுமா? தெரிந்து கொள்ளலாம் வாருங்கள்...!
மகா சிவராத்திரி விரத வகைகள்
முதலில் மகா சிவராத்திரி விரத முறையானது ஐந்து வகையாக பிரிக்கப்படுகிறது. தினசரி விரதமிருக்க நித்திய சிவராத்திரி, ஒவ்வொரு மாதமும் விரமிருக்க மாத சிவராத்திரி, இரண்டு வாரத்திற்கு ஒருமுறை விரதமிருக்க பட்ச சிவராத்திரி திங்கள் மற்றும் திருவாதிரை நட்சத்திர நாட்களில் விரதமிருக்க யோக சிவராத்திரி, மாசி மாத தேய்பிறை சதுர்த்தசியில் விரதமிருக்க மகா சிவராத்திரி.
விரதம் இருக்கும் முறை
ஐந்து வகை சிவராத்திரிகளிலும் விரதமிருக்க 3 வகையான விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது. முதலாவது நிர்ஜலா விரதம். இந்த விரதத்தின் போது 24 மணி நேரமும் தண்ணீர் கூட அருந்தாமல் கடுமையான விரதம் கடைபிடிப்பது.
இரண்டாவது பலாஹர் விரதம். இந்த விரதம் இருக்கும் போது பால் பழம், முதலான எளிமையான உணவுகளை எடுத்துக் கொள்ளலாம். ஆனால் உப்பு, தானியங்களை மட்டும் தவிர்த்து விட வேண்டும்.
மூன்ராவது பகுதி விரதம். அதாவது பகல் முழுவதும் உணவு உண்ணாமல் சிவ வழிபாட்டிற்கு பிறகு ஒரு வேளை மட்டும் சாப்பிடுவது.
விரத மகிமைகள்
மகா சிவராத்தி விரதத்தை முழுமனதோடு,இறை அன்போடு அனுஷ்டித்தால் பாவ விமோசனம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
தெரிந்தும் தெரியாமலும் செய்த பாவங்கள் அகன்று உள்ளம் தூய்மை பெறும் என்பது நம்பிக்கை.
ஆத்ம சுத்தம்
மகா சிவராத்திரி அன்று இறவனையன்றி வேறொன்றையும் சிந்தையில் நினையாது உண்ணா நோன்பிருக்கும் போது உடலும் மனமும் ஒருநிலைப்படுகிறது.
உணவு தவிர்த்து நீராகாரங்களை எடுத்துக்கொள்ளும் போது உடலானது (Detoxity) சுத்தப்படுகிறது.
சிவனருளை முழுமையாக பெற
மற்ற சிவராத்திரிகளில் வழிபட முடியவில்லை என்றாலும் மகா சிவராத்தியன்று முழுமனதோடு சிவனை மட்டுமே நினைத்து சிவாலயங்களுக்கு சென்று வழிபட்டு நான்கு கால பூஜைகளையும் நிறைவு செய்து, நிறைவாக சிவலிங்கத்திற்கு அபிஷேகம் மற்றும் பூஜை செய்தால் சிவனருளும், முக்தியும் , முழு பயனும் கிடைப்பது உறுதி என்பது நம்பிக்கை .