கந்தசஷ்டி விழா, ”சூரசம்ஹாரம் நடக்காத திருத்தணி” : 5ம் படை வீட்டில் ’புஷ்பாஞ்சலி’ : காரணம் என்ன? முழுத் தகவலுடன்.!

கந்தசஷ்டி விழாவின் போது சூரசம்ஹாரம் நடக்காத அறுபடை முருகன் கோவில் ஒன்றும் உள்ளது.
Murugan Arupadai Veedu, 'Soorasamharam' does not take place in Tiruttani during Kanda Sashti
Murugan Arupadai Veedu, 'Soorasamharam' does not take place in Tiruttani during Kanda Sashtisource:thamizhalai,ai generated
2 min read

முருகன் கோவில்களில் கந்தசஷ்டி

Kandha Sashti Vizha 2026 : குன்றுதோறும் கோவில் கொண்டிருக்கும் முருகப் பெருமானின் அனைத்து கோவில்களிலும் கந்தசஷ்டி விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

ஒரு படை வீட்டில் மட்டும் சூரசம்ஹாரம் கிடையாது

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளிலும் கந்த சஷ்டி திருவிழா கொண்டாடப்படுகிறது. ஆனால், அறுபடை வீடுகளில் ஐந்து கோவில்களில் சூரசம்ஹாரம் நடைபெறும் நிலையில், ஒரு கோவிலில் மட்டும் சூரசம்ஹாரம் நடைபெறுவதில்லை. அதற்கான காரணம் என்ன என்பது பற்றி பார்ப்போம்.

அறுபடை வீடுகளில் கந்தசஷ்டி

அறுபடை வீடுகள் ஒவ்வொன்றுக்கும் திருத்தலத்திற்கும் தனித்துவமான வரலாறும், ஆன்மிகச் சிறப்பும் உண்டு. ஆண்டுதோறும் ஐப்பசி மாதத்தில் நடைபெறும் கந்த சஷ்டி திருவிழா, வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.

நவம்பர் மாதம் பத்தாம் தேதி செவ்வாய்க்கிழமை, 2026 கந்தசஷ்டி திருவிழாவின் முதல் நாள் பிரம்மாண்டமாக துவங்கியது. சூரசம்ஹாரம் நடைபெறும் திருச்செந்தூர் செந்தில் ஆண்டவர் கோவிலில் அதாவது அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீட்டில் யாகசாலையுடன் பூஜை நடைபெற்றது.

விரதம் இருக்கும் முருக பக்தர்கள்

லட்சக்கணக்கான பக்தர்கள் கந்த சஷ்டி விரதம் இருந்து வருகிறார்கள். சூரசமஹாரத்தை தரிசிப்பதற்காக ஆறு லட்சம் பக்தர்களாவது திருச்செந்தூருக்கு நேரில் வருகை தருவார்கள் என்று தெரிகிறது.

தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலான கோவில்களில் சூரசம்ஹாரம் மற்றும் கந்த சஷ்டி திருவிழா நடைபெற்றால் கூட ஒரு சில கோவில்களில் குறிப்பாக அறுபடை வீடுகளில் திருத்தணி கோவிலில் சூரசம்ஹாரம் கிடையாது.

ஐந்தாம் படை வீடு - திருத்தணி

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் ஐந்தாம் படை வீடாகத் திகழ்வது திருத்தணி சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில். மற்ற படை வீடுகளைப் போலவே இங்கும் கந்த சஷ்டி திருவிழா சிறப்பாக நடைபெறுகிறது.

ஆனால், இந்தத் திருத்தலத்தில் மட்டும் கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் நடைபெறுவதில்லை.

வரம் தரும், கேட்டதை கொடுக்கும் தெய்வம் என்று முருகப்பெருமான் அனுகிரத மூர்த்தியாக இருந்தால் கூட, செவ்வாய் கிரகத்திற்கு அதிபதி என்பதால் அதீதமான ஆற்றல் கோபம் வீரம் ஆகியவையும் உள்ளடங்கியிருக்கும்.

முருகன் சினம் தணிந்த இடம் திருத்தணி

திருச்செந்தூர் கடற்கரையில் சூரபத்மனை வதம் செய்த பிறகும் முருகப்பெருமானின் கோபம் தணியவில்லை. இதையடுத்து தனது சினத்தைத் தணித்து அமைதி பெறுவதற்காக முருகப்பெருமான் வந்து அமர்ந்த திருத்தலமே திருத்தணி என்று தல வரலாறு கூறுகிறது.

திருத்தணி என்பதன் பழமையான பெயர் திருத்தணிகை. திருத்தணிகை என்றால் முருகப்பெருமானின் கோபம் தணிந்த இடம் என்று பொருள். சூரபத்மனுடன் போர் முடிந்த பிறகு முருகப்பெருமான் தனது கோபத்தைத் தணித்துக் கொண்டு சாந்தம் அடைந்த திருத்தலம் என்பதால் இங்கு சூரசம்ஹாரம் நடைபெறுவதில்லை என்பது ஐதீகம்.

திருத்தணி முருகப்பெருமான் வள்ளி, தெய்வானை சமேதராக அருள்பாலிக்கிறார். மேலும், இந்தத் திருத்தலத்தில்தான் முருகப்பெருமான் வள்ளியைத் திருமணம் செய்து கொண்டதாகவும் தல வரலாறு குறிப்பிடுகிறது.

திருத்தணியில் புஷ்பாஞ்சலி சேவை

அப்படி என்றால் சூரசம்ஹாரம் நாளில் திருத்தணியில் புஷ்பாஞ்சலி சேவை நடைபெறும். முருகப்பெருமானுக்குப் பல்வேறு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு, அபிஷேக ஆராதனைகளும் நடைபெறுகின்றன. இவ்வாறு சூரசம்ஹாரத்திற்குப் பதிலாக புஷ்பாஞ்சலி சேவை நடைபெறுவது திருத்தணி திருக்கோவிலின் தனிச்சிறப்பாகும்.

============