மண்டல பூஜை : தரிசனம், தங்கும் அறைகள் : ஆன்லைன் முன்பதிவு தொடக்கம்

சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜைக்கான தரிசனம், தங்கும் அறைகளுக்கான ஆன்லைன் முன்பதிவு தொடங்கி இருக்கிறது.
Online bookings for darshan, accommodation for Mandala Puja at Sabarimala begun
Online bookings for darshan, accommodation for Mandala Puja at Sabarimala begun
1 min read

சபரிமலை கோவில்

Sabarimala All Set for 'Mandala Pooja, Temples opens on 16th December : உலகப் புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவில், கேரள மாநிலத்தில் அமைந்து இருக்கிறது. இங்கு நடைபெறும் முக்கிய விழாக்கள் மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கு பூஜையாகும். அதன்படி இந்த ஆண்டுக்கான மண்டல பூஜை வரும் 17ம் தேதி தொடங்குகிறது.

மண்டல பூஜைகள்

ஒருநாள் முன்னதாக 16ம் தேதி மாலை நடை திறக்கப்படுகிறது. 41 நாட்கள் தொடர் தரிசனத்திற்கு பிறகு, டிசம்பர் 27ம் தேதி மண்டல பூஜை நடைபெறுகிறது. மண்டல பூஜை காலத்தில் ஐயப்பனை பக்தர்கள் தரிசிக்க ஆன்லைன் முன்பதிவு சில தினங்களுக்கு முன்பு தொடங்கியது. ஆன்லைன் மூலம் 70 ஆயிரம் பக்தர்களுக்கும், உடனடி முன்பதிவு மூலம் 20 ஆயிரம் பக்தர்களுக்கும் என ஒரு நாளைக்கு மொத்தம் 90 ஆயிரம் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள்.

தரிசனம், தங்கும் அறை - ஆன்லைன் முன்பதிவு

மண்டல பூஜைக்கான ஏற்பாடுகள், பக்தர்களுக்கு தேவையான வசதிகளை செய்து தரும் பணிகள் சபரிமலை, பம்பையில் முழு வீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில் பூஜைகள் மற்றும் தங்கும் அறைகளுக்கான ஆன்லைன் முன்பதிவு இன்று (5ம் தேதி) தொடங்கியது. பூஜைகளுக்கும், அறைகளுக்கும் www.onlinetdb.com என்ற இணையதளத்தில் பக்தர்கள் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

பக்தர்கள் தங்க கூடாரங்கள்

பக்தர்கள் வருகை அதிக அளவில் இருக்கும் நேரத்தில், அவர்கள் தரிசனம் செய்ய இரண்டு நாட்கள் கூட ஆகும். எனவே, அவர்கள் தங்க பம்பையில் கூடாரங்கள் அமைக்கப்பட்டு இருக்கின்றன. 10 ஆயிரம் பக்தர்கள் இங்கு தங்கி, அவர்களுக்கு ஒதுக்கப்படும் நேரத்தில் ஐயப்பனை தரிசிக்கலாம். மண்டல பூஜைகள் தொடங்குவதை ஒட்டி, சபரிமலை விழாக்கோலம் பூண்டு இருக்கிறது.

===========

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in