புரட்டாசி ’இறை வழிபாடு’ மாதம் : சுப காரியங்கள் முழுமையாக தவிர்ப்பு

Purattasi Month 2025 Dos and Don'ts in Tamil : இறைவனுக்காக அர்ப்பணிக்கப்பட்ட மாதங்களில் புரட்டாசியும் ஒன்று என்பதால், அந்த மாதம் முழுவதும் சுப காரியங்கள் எதுவும் செய்யப்படுவதில்லை.
Purattasi Month 2025 Dos and Don'ts in Tamil
Purattasi Month 2025 Dos and Don'ts in Tamil
1 min read

இறை வழிபாட்டிற்கான புரட்டாசி :

Purattasi Month 2025 Dos and Don'ts in Tamil : மாதங்களில் நான் மார்கழி என்று திருமால் குறிப்பிட்டாலும், பெருமாளுக்கு உரிய மிகச்சிறந்த மாதமாக கருதப்படுவது தான் புரட்டாசி. ’பொன் உருக வெயில் காய்ந்து, மண் உருக மழை பெய்யும் மாதம்’ என்று இதற்கு பெயருண்டு.

சுபகாரியங்கள் இல்லாத புரட்டாசி :

புரட்டாசி மாதத்தில் திருமணம் செய்யலாமா(Marriages in Purattasi Month), வீடு கட்ட ஆரம்பித்தல், கிரகப்பிரவேசம் செய்யலாமா?, வளைகாப்பு நடத்தலாமா? நடத்தக் கூடாதா என்ற அடுக்கடுக்கான கேள்விகள் நமக்கு எழுகின்றன. புரட்டாசியில் முக்கிய சுப காரியங்களை நம் முன்னோர்கள் செய்தது கிடையாது. அதற்கு காரணம் என்ன?

புரட்டாசியில் மஹாளய அமாவாசை:

ஜோதிட சாஸ்திரத்தின் படி சூரியன் கன்னி ராசியில் சஞ்சாரம் செய்யும் மாதம்(Sun Transit in Kanni Rasi), தமிழில் ஆறாவதாக வரக்கூடிய புரட்டாசி. இந்த மாதத்தில் வரும் சனிக்கிழமை விரதம் மற்றும் பெருமாள் வழிபாடு மிகச் சிறப்பானதாக பார்க்கப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் புரட்டாசி மாதத்தில் வரக்கூடிய மகாளயபட்ச கால விரதம், மகாளய அமாவாசை(Mahalaya Amavasya 2025) விரதம் மிகவும் விஷேசமானது.

புரட்டாசி - இறை வழிபாடே சிறந்தது :

முன்னோர்களுக்குத் தர்ப்பணம் கொடுக்க இந்த மாதம் உரியதாகும். நவராத்திரி பண்டிகை(Navaratri 2025) அம்பாளை வேண்டி வழிபடக்கூடிய மிக கோலாகலமாகக் கொண்டாடப்படும் ஒன்றாகும். இப்படி பல இறைவழிபாடு, விஷேசங்கள் வரக்கூடிய மாதம் புரட்டாசி என்பதால் திருமணம் உள்ளிட்ட சுப சடங்குகளை அப்போது செய்வதை முன்னோர்கள் தவிர்த்து விட்டனர். முழுக்க முழுக்க இறை வழிபாட்டிலேயே அவர்கள் கவனம் செலுத்தினர்.

புரட்டாசியில் வளைகாப்பு நடத்தலாம் :

திருமணம் செய்ய சித்திரை, வைகாசி, ஆவணி, தை, பங்குனி ஆகிய மாதங்கள் மிகவும் உகந்தது என ஜோதிட சாஸ்திரங்கள் குறிப்பிடுகின்றன. அதே போல ஆடி, புரட்டாசி, மார்கழி ஆகிய மாதங்களில் திருமணம் போன்ற சுப காரியங்களைச் செய்யக்கூடாது. வைகாசி, கார்த்திகை ஆகிய மாதங்களில் எந்த சுபகாரியங்களையும் செய்யலாம். கர்ப்பிணி பெண்களுக்கு புரட்டாசி ஒற்றைப்படை மாதமாக அமைந்தால் வளைகாப்பை(Valaikappu in Purattasi Month) மட்டும் நடத்தலாம்.

மேலும் படிக்க : புரட்டாசி 2025 : பெருமாள் சேவிப்பு : சனிக்கிழமை வழிபாடு, நன்மைகள்

புரட்டாசியில் கிரகப்பிரவேசம் இருக்காது :

அதேபோன்று, வாஸ்து நாள் குறிப்பிடப்பட்டு இருந்தாலும், புரட்டாசியில் கிரகப்பிரவேசம், வாஸ்து பூஜை செய்யப்படுவதில்லை. வாடகை வீடாக இருந்தாலும் குடிபோக மாட்டார்கள். வீடு கட்டும் பணியே ஏற்கனவே தொடங்கி இருந்தால், இந்த மாதத்தில் பணிகளை மேற்கொள்ள எந்த தடையும் இல்லை.

முன்னோர்கள், அம்பாளுக்கு உகந்த மாதம் புரட்டாசி ஆகும். இந்த மாதம் முன்னோர்களை வழிபட்டு, நவராத்திரி கொண்டாடி இறையருளைப பெறுவோமாக.

======

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in