

திருப்பதி ஏழுமலையான் கோவில்
Tirumala Tirupati Devasthanams (TTD) achieved historic laddu sales milestones, peaking at an all-time high of 1,26,81,805 laddus in June 2026 : ஆந்திராவில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவில் உலகப் பிரசித்தி பெற்றது. திருப்பதி என்றாலே அனைவருக்கும் நினைவுக்கு வருவது பெருமாளும், அவரது பிரசாதமாக லட்டுவும் தான்.
சுவைமிக்க திருப்பதி லட்டு
300 ஆண்டுகளுக்கு மேலாக திருப்பதியில் பக்தர்களுக்கு லட்டு பிரசாதமாக வழங்கப்பட்டு வருகிறது. இதை தயாரிக்கும் முறையும் பாரம்பரிய முறைப்படி செயல்படுத்தப்பட்டு வருவதால், திருப்பதி லட்டுவின் சுவை அலாதியாக இருக்கும்.
புனிதமான பிரசாதமாக லட்டு
ஏழுமலையான் கோவிலில் சுவாமி தரிசனத்திற்கு பிறகு பக்தர்கள் லட்டு பிரசாத கவுன்டரை நோக்கி படையெடுப்பது வழக்கம். சுவைக்காக மட்டுமல்லாமல் அது புனிதமான ஒரு திருத்தலத்தில் இருந்து வந்தது என்பதால் அதற்கான தனித்துவம் காலம் காலமாக உள்ளது.
ஏப்ரலில் லட்டு விற்பனை
இந்நிலையில்லட்டு பிரசாதம் கடந்த ஏப்ரல் மாதம் 1,11,96,170 என்ற எண்ணிக்கையில் விற்பனையாகி சாதனை படைத்தது. அதன் பின்னர், கடந்த மே மாதத்தில் இந்த எண்ணிக்கை 1,21,35,528 ஆக வரலாறு படைத்தது.
ஜூன் ் விற்பனையில் புதிய சாதனை
இப்போது புதிய சாதனையாக கடந்த ஜூன் மாதத்தில் 1,26,81,805 லட்டு பிரசாதம் விற்பனையாகியுள்ளது. கடந்த ஜூன் மாதத்தில் பக்தர்களின் வருகை மிக அதிகமாக இருந்ததால் இந்த சாதனை நிகழ்ந்துள்ளதாக தேவஸ்தான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
2026 ஜூன் 1,26 கோடி லட்டுகள்
2024 ஜூன் மாதத்தில் 1,02,64,364 லட்டு பிரசாதம் விற்பனையானது. 2025 ஜூனில் 1,19,21,355 லட்டுகள் விற்பனையானது. தற்போது 2026 ஜூன் மாதத்தில் 1,26,81,805 லட்டுகள் விற்பனையாகி புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது.
கடந்த 2025, ஜூன் மாத விற்பனையை விட 7,59,452 லட்சம் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
=====================