Sabarimala Mandala Poojai : பக்தர்கள் கடைபிடிக்க வேண்டிய முறைகள்

Sabarimala Ayyappan Viratham in Tamil : சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு செல்ல மாலை போடும் பக்தர்கள் கடைபிடிக்க வேண்டியவை குறித்து பார்க்கலாம்.
Sabarimala Mandala Poojai 2025 Rituals that devotees who visit Sabarimala Ayyappa temple must observe Read Sabarimala Ayyappan Viratham in Tamil
Sabarimala Mandala Poojai 2025 Rituals that devotees who visit Sabarimala Ayyappa temple must observe Read Sabarimala Ayyappan Viratham in TamilGoogle
2 min read

சபரிமலை ஐயப்பன் கோவில்

Sabarimala Ayyappan Viratham in Tamil : கேரளாவில் அமைந்துள்ள சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு ஆண்டுதோறும் கோடிக்கணக்கான பக்தர்கள் செல்கிறார்கள். குறிப்பாக, கார்த்திகை, மார்கழி மாதங்களில் மட்டும் லட்சணக் கணக்கானோர் மாலை இருந்து, விரதங்களை கடைபிடித்து, இருமுடி கட்டி வந்து ஐயப்பனை தரிசிக்கிறார்கள்.

மண்டல பூஜைகள்

வரும் 17ம் தேதி(Sabarimala Mandala Pooja Date 2025) கார்த்திகை ஒன்றாம் தேதி பிறக்கிறது. அன்றுமுதல் சபரிமலைக்கு செல்லும் பக்தர்கள் மாலை அணிந்து, விரதங்களை கடைபிடிக்க தொடங்குவார்கள். அவ்வாறு சபரிமலைக்கு மாலை அணிவோர் கடைபிடிக்க வேண்டியை என்ன? தவிர்க்க வேண்டியவை குறித்து பார்க்கலாம்.

  • ஐயப்பனுக்கு மாலை அணிபவர்கள் கடுமையான பிரம்மச்சாரியத்தை கடைபிடிக்க வேண்டும். ஐயப்பனுக்கு மாலை அணிவதன் சிறப்பு என்பதே அதில் தான் இருக்கிறது.

  • ஐயப்பனின் படம் அல்லது சிலைக்கு பூக்களை கொண்டு தினமும் பூஜை, நைவேத்யம் செய்ய வேண்டும். அந்த பூஜையில் ஏதாவது ஒரு பழம் இருப்பது அவசியம்.

  • அதிகாலையில் எழுந்து குளித்து விட்டு, சூரிய உதயத்திற்கு முன்பே, சாமியே சரணம் ஐயப்பா என்ற கோஷத்துடன் வழிபாட்டினை மேற்கொள்ள வேண்டும்.

  • தினமும் ஐயப்பனுக்கு நெய் தீபம் ஏற்றி பக்தர்கள் வழிபட வேண்டும்.

  • ஐயப்பன் மட்டுமின்றி, எந்த கடவுளுக்கு மாலை அணிந்தாலும் சைவம் மட்டுமே சாப்பிட வேண்டும். அசைவம் தவிர்ப்பது கூடுதல் பலனை அளிக்கும்.

  • ஒரு வேளை மட்டுமே விரதம் இருப்பவர்கள், அதை முழுமையாக கோவிலுக்கு செல்லும் நாள்வரை கடைபிடிக்க வேண்டும். உடல்நலக்குறைவு இருந்தால், அதற்கேற்ப விரதம் இருக்கலாம்.

  • ஐயப்பனுக்கு மாலை அணிபவர்கள் பொதுவாக கருப்பு உடை அணிவார்கள். சிலர் காவி உடை அணிவதும் உண்டு.

  • பணிகளை முடித்து வீடு திரும்பியதும் மாலையில் மீண்டும் குளித்து விட்டு ஐயப்பனுக்கு விளக்கேற்றி பூஜையை முடித்த பிறகே இரவு உணவு சாப்பிட வேண்டும்.

  • ஐயப்பனுக்கு மாலை அணிந்தவர்கள் பிறரை சாமி என்று அழைப்பது வழக்கம். அதை முழுமையாக கடைபிடிக்க வேண்டும்.

  • கன்னிசாமியாக இருப்பவர்கள் வீட்டில் முறையாக பூஜைகளை நடத்த வேண்டும்.

மாலை அணிந்தோர் செய்யக் கூடாதவை

  • ஐயப்பனுக்கு மாலை அணிபவர்கள் கண்டிப்பாக காலணி அணியக் கூடாது.

  • மாலை அணிந்துள்ள காலத்தில் மது, புகைப்பிடித்தல் போன்ற செயல்களில் ஈடுபடவே கூடாது.

  • அசைவ உணவை முழுமையாக தவிர்க்க வேண்டும்.

  • மாலை அணிந்துள்ள காலத்தில் இறை சிந்தனை தவிர வேறு ஏதேனும் தவறான எண்ணங்கள் இருக்கவே கூடாது.

நவம்பர் 17 - கார்த்திகை மாதம்

நடப்பாண்டு கார்த்திகை மாதம் வரும் 17ம் தேதி பிறக்கிறது. பிரதோஷ நாளாக மட்டுமின்றி சோமாவார திங்கள் கிழமையில் கார்த்திகை மாதம் பிறப்பது விசேஷம். சிவபெருமானுக்கு உகந்த திங்கள்கிழமையில் பிறக்கும் இந்த கார்த்திகை முதல் நாளில் லட்சக்கணக்கானோர் மாலை அணிந்து கொள்வார்கள்.

நல்ல நேரத்தில் மாலை அணிய வேண்டும்

அந்த நாளில் ராகு காலம் மற்றும் எமகண்டம் தவிர எந்த நேரத்தில் வேண்டுமானாலும் மாலை அணிந்து கொள்ளலாம். குருசாமி கையால் வீட்டில் தாயின் கையால்அ ல்லது கோயிலிக்கு சென்று மாலை அணிந்து, ஐயப்ப வழிபாட்டினை தொடங்குவது நல்லது.

41 நாட்கள் விரதம் இருந்து இருமுடி கட்டி, சபரிமலை ஏறி ஐயப்பனை பக்தி சிரத்தையோடு வழிபட்டால், நாம் எண்ணியது நடக்கும். இறையருளும் முழுமையாக கிடைக்கும்.

=======================

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in