

தைப்பூச விழா
Thai Poosam 2026 Viratham Date and Time in Tamil : தைப்பூசம் என்பது தை மாதத்தில் பூச நட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரக்கூடிய நன்னாள். இந்த நாளில்தான், அன்னை பார்வதி தனது தவப்புதல்வனான முருகனுக்கு வேல் வழங்கியதாக கூறப்படுகிறது.
முருகனுக்கு உகந்தநாள்
தமிழ் கடவுளாக பக்தர்களால் வணங்கப்படுபவர் முருகப் பெருமான். முருகனுக்கு மிகவும் உகந்த நாட்களில் ஒன்று தைப்பூசம். ஒன்றாகும். தை மாதம் என்றால் பொங்கல் திருநாள் எவ்வளவு சிறப்போ அதுபோல தைப்பூசமும் சிறப்பானது.
கோலாகலமாக கொண்டாடப்படும் தைப்பூசம்
ஒவ்வொரு ஆண்டும் தைப்பூசத்தை பக்தர்கள் கோலாகலமாக கொண்டாடி வருவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். நடப்பு ஆண்டுக்கான தைப்பூசம் பிப்ரவரி 1ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதற்காக முருக பக்தர்கள் தயாராகி வருகின்றனர். தைப்பூசமானது ஆண்டுதோறும் 10 நாட்கள் திருவிழாவாக கொண்டாடப்படுவது வழக்கம்.
தைப்பூசம் - 10 நாட்கள் விரதம்
அதன்படி தைப்பூச திருவிழாவுக்கான விரதம் தொடங்கி இருக்கிறது. 10 நாட்கள் பக்தர்கள் விரதம் இருந்து முருகனை வழிபட்டால் நினைத்தது நடக்கும் என்பது நம்பிக்கை.
தைப்பூச வழிபாடு
அந்த 10 நாட்கள் விரதம் இன்று முதல் தொடங்குகிறது. இன்று முதல் 10 நாட்கள் வரை விரதம் இருந்து முருகனை வழிபட்டால் நினைத்தது நடக்கும் என்பது ஐதீகம். பிப்ரவரி 1ம் தேதி தைப்பூசத்தன்று அதிகாலையில் எழுந்து குளித்து விட்டு, திருநீறு, ருத்ராட்சம் அணிந்து சிவபெருமானை வழிபட வேண்டும்.
விரதம் இருக்க வேண்டும்
தேவாரம், திருவாசகம் போன்றவற்றைப் பாராயணம் செய்யலாம். உணவு உண்ணாமல் 3 வேளைகளிலும் பால், பழம் சாப்பிடலாம். மாலையில் கோவிலுக்குச் சென்று சிவ பூஜையில் பங்கேற்று சிவனை தரிசித்து விரதத்தை நிறைவு செய்யலாம்.
தைப்பூச தினத்தன்று சிவாலயங்களில் வழிபாடு செய்தால் கணவன், மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும். சிவன், பார்வதி, முருகனை தரிசித்து தைப்பூச விரதத்தை நிறைவு செய்து இறையருளை பெறலாம்.
விரத முறைகள்:
48 நாள் விரதம்: மார்கழி மாதம் தொடங்கி தைப்பூசம் வரை, தினமும் அதிகாலையில் எழுந்து நீராடி, திருநீறு அணிந்து, முருகனை வணங்குதல்.
உணவுக் கட்டுப்பாடு : ஒரு வேளை மட்டும் பழங்கள், பால், எளிமையான சைவ உணவை உண்ணுதல்; அசைவம், மது, புகையிலையைத் தவிர்த்தல்.
வழிபாடு: தேவாரம், திருவாசகம் பாராயணம் செய்தல், கந்தசஷ்டி கவசம் படித்தல், காலை மற்றும் மாலை வேளைகளில் விளக்கேற்றி வழிபடுதல்.
காவடி, பால்குடம்: தைப்பூசத்தன்று முருகனுக்குக் காவடி, பால்குடம் எடுப்பது, பாதயாத்திரை செல்வது சிறப்பு.
படைத்தல்: சர்க்கரைப் பொங்கல், கருப்புக் கொண்டைக் கடலை சுண்டல், செவ்வரளி மலர் மாலைகளை படைத்து வழிபடலாம்.
தைப்பூச விரத பலன்கள்
செல்வம் பெருகும்.
கணவன்-மனைவி இடையே பாசம், ஒற்றுமை அதிகரிக்கும்.
கிரகதோஷங்கள் நீங்கி, சுப யோகங்கள் உண்டாகும்.
=====