

A Grand Celebration in Madurai: Meenakshi and Sundareswarar's Divine Wedding Shimmers Amidst Floral Decorations!
மீனாட்சி - சுந்தரேசுவரர் திருக்கல்யாணம்!
தூங்கா நகரமான மதுரையில் உலகப் புகழ்பெற்ற சித்திரை திருவிழா கடந்த 19-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது.
மீனாட்சி - சுந்தரேஷ்வரர் வீதி உலா
விழாவில் ஒவ்வொரு நாளும் சுவாமியும் மீனாட்சி அம்மனும் வெவ்வேறு வாகனங்களில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர்.
மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகம், திக் விஜயம்
கடந்த இரு தினங்களுக்கு முன்பு மீனாட்சி அம்மனுக்குப் பட்டாபிஷேகமும், நேற்று திக்விஜயமும் கோலாகலமாக நடந்தேறியது.
இதன் தொடர்ச்சியாக, விழாவின் உச்சகட்ட நிகழ்வான மீனாட்சி - சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் இன்று காலை பக்தி பரவசத்துடன் நடைபெற்றது.
ரூ. 30 லட்சத்தில் மலர் மேடை
மீனாட்சி அம்மன் சுந்தரேஷ்வரர் திருக்கல்யாண வைபவத்திற்காகக் கோவில் நிர்வாகம் சார்பில் பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
10 டன் எடையுள்ள மலர்கள்
குறிப்பாக, வடக்கு மற்றும் மேற்கு ஆடி வீதிகள் சந்திக்கும் இடத்தில் சுமார் 10 டன் எடையுள்ள வண்ண மலர்களைக் கொண்டு திருமண மேடை அலங்கரிக்கப்பட்டிருந்தது.
வெளிநாடுகளில் இருந்து வரவழைக்கப்பட்ட மலர்கள்
இந்த அலங்காரத்திற்காக கொடைக்கானல் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வரவழைக்கப்பட்ட ஆர்கிட், கார்னேசன், ஜெர்புரா போன்ற அரிய வகை மலர்கள் பயன்படுத்தப்பட்டன.
கண்களை கவர்ந்த மலர்மேடை
சுமார் ரூ. 30 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட இந்த மேடை, காண்போரின் கண்களைக் கவரும் வகையில் ஜொலித்தது.
பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
திருமண நிகழ்வைக் காண வரும் பல்லாயிரக்கணக்கான பக்தர்களின் வசதிக்காக மேற்கு மற்றும் வடக்கு ஆடி வீதிகளில் சுமார் 1,400 அடி நீளத்திற்குப் பிரம்மாண்ட பந்தல்கள் அமைக்கப்பட்டிருந்தன.
மணக்கோலத்தில் மீனாட்சி சுந்தரேஷ்வரர்
இன்று காலை 8.35 மணி முதல் 8.59 மணிக்குள் நடைபெற்ற இந்தத் திருமண வைபவத்தில், மீனாட்சி அம்மனும் சுந்தரேசுவரரும் மணக்கோலத்தில் காட்சியளித்தனர்.
நாளை மாசி வீதி தேரோட்டம்
இந்த மங்கல நிகழ்வைத் தொடர்ந்து, விழாவின் மற்றொரு முக்கிய நிகழ்வான மாசி வீதி தேரோட்டம் நாளை (ஏப்ரல் 29) நடைபெற உள்ளது. இதற்காக மதுரை மாநகரமே தற்போது விழாக்கோலம் பூண்டுள்ளது.
=====