

வைகுண்ட ஏகாதசி பெருவிழா
Tirpati Vaikunta Ekadasi 2025 Darshan Date in Tamil : வைகுண்ட ஏகாதசி என்பது இந்துக்கள் கொண்டாடும் ஒரு புனிதமான நாளாகும். குறிப்பாக மகாவிஷ்ணுவை வழிபடும் வைணவர்கள் இந்த நாளை விமரிசையாக கொண்டாடுவர். இதற்கு காரணம் என்னவென்றால், இந்த நாளில் வைகுண்டத்தின் கதவுகள் திறக்கப்படுவதாக நம்பப்படுகிறது.
மோட்சம் பெறும் நாள்
வைகுண்ட ஏகாதசி நாளில் விரதமிருந்து பெருமாளை வழிபடுவதன் மூலம் சொர்க்கத்தை அடைந்து மோட்சம் பெறலாம் என்பது நம்பிக்கையாகும். மார்கழி மாதத்தில் இந்த விழா கொண்டாடப்படுகிறது. முக்கோடி ஏகாதசி, சொர்க்க வாசல் ஏகாதசி என்றும் இந்த நாள் அழைக்கப்படுகிறது.
பெருமாள் அளித்த வரம்
அசுரனை வென்ற நாளில், தன்னை வழிபடுவோருக்கு வைகுண்ட பதவியை அளிப்பதாக பெருமாள் வரம் அளித்ததால் இந்த நாள் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. வைகுண்ட ஏகாதசியன்று விரதம் இருப்பவர்கள் மோட்சத்தை அடைந்து நேராக வைகுண்டத்திற்குச் செல்வார்கள் என்பது நம்பிக்கை.
சொர்க்கவாசல் திறப்பு
வைகுண்ட ஏகாதசி அன்று பெருமாள் கோவில்களில் சொர்க்க வாசல் திறக்கப்படும். பக்தர்கள் இந்த வாசல் வழியாகச் சென்று பெருமாளை வழிபடுவார்கள். இந்த நாளில் உபவாசம் இருப்பது மிகுந்த பலனைத் தரும். எல்லா ஏகாதசி விரதங்களின் பயனும் இந்த ஒருநாள் விரதத்தால் கிடைக்கும் என விஷ்ணு புராணம் கூறுகிறது. மார்கழி மாதத்தில் வரும் வளர்பிறை ஏகாதசி திதியன்று, வைகுண்ட ஏகாதசி விழா கொண்டாடப்படுகிறது.
ஏகாதசியன்று திறக்கும் சொர்க்கவாசல்
திருமாலின் இருப்பிடமாகக் கருதும் வைகுண்டத்தின் கதவுகள் இன்று திறக்கப்படுவதாக புராணங்கள் கூறுகின்றன. இந்நாளின் முன்னிரவில் உறங்காது இருந்து திருமாலின் புகழ்பாடி கோவிலுக்கு செல்வர். விடியற் காலையில் பெருமாள் கோவில்களில் பொதுவாக வடக்குதிசையில் என்றும் மூடப்பட்டிருந்து இன்று மட்டுமே திறக்கும் "சொர்க்க வாயில்" என்றழைக்கப்படும் வாயில்வழியே சென்று இறைவனை வழிபடுவார்கள்.
திருவரங்கம் கோவில்
உலகப்புகழ் பெற்ற திருச்சி திருவரங்கம் கோவிலில் இந்நாளின் முந்தைய பத்து நாட்களில் "பகல்பத்து" என்றும் பிந்தைய பத்து நாட்களில் "இராப்பத்து" என்றும் சிறப்பாக விழா நடத்தப்படுகிறது. சொர்க்கவாசல் திறப்பு வைபவமும் மிகவும் சிறப்பு வாய்ந்தது.
திருமலையில் சொர்க்கவாசல்
வைகுண்ட ஏகாதசியை ஒட்டி டிசம்பர் 30 முதல் ஜனவரி 8ம் தேதி வரை திருப்பதி ஏழுமலையான்(Tirupati Tirumala Temple Ekadasi 2026 Date in Tamil) கோவிலில் சொர்க்கவாசல் தரிசனம் செய்யலாம் என திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. சொர்க்கவாசல் தரிசனத்துக்கு ஆன்லைன், நேரடி டிக்கெட் விநியோகம் குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகிறது.
====