திருவண்ணாமலை மகா தீபம் : நேரில் தரிசித்தால் 21 தலைமுறைக்கு முக்தி

Tiruvannamalai Karthigai Maha Deepam 2025 Darshan Benefits in Tamil : திருவண்ணாமலை மகா தீபத்தை தரிசனம் செய்வதால் கிடைக்கும் பலன்களை விரிவாக பார்க்கலாம்.
Tiruvannamalai Karthigai Maha Deepam 2025 Darshan Benefits detailed look at benefits of visiting Thiruvannamalai Maha Deepam 2025 in Tamil
Tiruvannamalai Karthigai Maha Deepam 2025 Darshan Benefits detailed look at benefits of visiting Thiruvannamalai Maha Deepam 2025 in TamilGoogle
1 min read

Tiruvannamalai Annamalaiyar Maha Karthigai Deepam 2025 Darshan Benfits in Tamil : திருவண்ணாமலையில் நடைபெறும் தீபத் திருவிழா மிகச்சிறப்பு வாய்ந்தது. இங்கு ஏற்றப்படும் மகா தீபத்திற்கு கார்த்திகை விளக்கீடு, ஞான தீபம், சிவ ஜோதி, பரஞ்சுடர் என்ற பெயர்களும் உண்டு. அதன் சிறப்புகளை பார்க்கலாம்.

மகா தீபத்தை தரிசனம் செய்வதால் கிடைக்கும் பலன்கள் :

* திருவண்ணாமலையில் ஏற்றப்படும் கார்த்திகை தீபத்தை நேரில் பார்த்தவர்களின் 21 தலைமுறைக்கு முக்தி கிடைக்கும்.

* திருவண்ணாமலையை பார்த்து ‘நமசிவாய’ என்று சொன்னால் அந்த மந்திரத்தை 3 கோடி முறை உச்சரித்த புண்ணியம் கிடைக்கும்.

* மகா தீபம் ஏற்றப்படும்போது மலையின் உள்பகுதியில் ஒரு ஒலியை கேட்டதாக ரமணர், சேஷாத்ரி சுவாமிகள் கூறி இருக்கிறார்கள்.

* கார்த்திகை தீபம் ஏற்றப்பட்ட பிறகு கிரிவலம் வந்தால் ஆன்ம பலம் அதிகரிக்கும்.

* தீபத் திருநாளில் 5 முறை கிரி வலம் வர பாவங்களிலிருந்து விமோசனம் கிடைக்கும்.

* தீபம் ஏற்றப்படும்போது, ‘தீப மங்கல ஜோதி நமோ நம’ என்ற பாடலை பாடவேண்டும்

* கார்த்திகை தீபத்தை தரிசிக்க சித்தர்கள் வருகை தருகிறார்கள் என்பது நம்பிக்கை‌. அப்படி வரும் அவர்கள், தீபம் ஏற்றும் கொப்பரை நெய்யில் சக்தி வாய்ந்த மூலிகை தைலத்தை சேர்த்து விடுவதாக சொல்கிறார்கள். இதனால் தீய சக்திகள் அழியும்.

* கார்த்திகை தீபத்தன்று கிரிவலம் செய்பவர்க்கு 1000 அஸ்வமேத யாகம் செய்த பலன் கிடைக்கும்.

* கார்த்திகை தீப காட்சியை நேரில் தரிசித்தால் குழந்தை பாக்கியம் கிட்டும்.

திருவண்ணாமலை மகா தீப சிறப்புகள்

* மலையுச்சியில் தீபம் ஏற்ற பயன்படுத்தப்படும் கொப்பரையில் 2000 லிட்டர் நெய் பிடிக்கும். தீப ஒளியானது சுற்று வட்டாரத்தில் சுமார் 20 கி.மீ. தொலைவுக்குத் தெரியும்.‌ இது 11 நாட்கள் தொடர்ந்து எரியும்.

* கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு பரணி தீபம், அண்ணாமலையார் தீபம், விஷ்ணு தீபம், நாட்டுக் கார்த்திகை தீபம், தோட்டக் கார்த்திகை தீபம் என 5 வகை தீபங்கள் ஏற்றப்படும்.

* திருவண்ணாமலையில் கார்த்திகை சொக்கப்பனை கொளுத்தும் பழக்கம் இல்லை. .

* அதிகாலை கோயிலில் பரணி நட்சத்திரத்தில் ஏற்றப்படும் பரணி தீபத்தை சொர்ண பைரவர் சன்னிதியில் வைத்து விடுவார்கள். அதை மாலையில் மலை உச்சிக்கு எடுத்துச் சென்று மகாதீபத்தை ஏற்றுவார்கள்.

* மகா தீபம் ஏற்றப்பட்டதும், ‘அண்ணாமலைக்கு அரோகரா’ என்று பக்தர்கள் முழக்கமிடுவார்கள். இதற்கு அர்த்தம், ‘இந்த உடம்பு நான் என்னும் எண்ணத்தை அழித்து மனதில் ஆன்ம ஜோதியை காண்பது’

* சிவபெருமான் கார்த்திகை தீப நாளில் அக்னியில் நடனமாடுவதாக ஐதீகம். இந்த நடனத்தை ‘முக்தி நடனம்’ என்று அழைப்பர்.

================

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in