”திருமலை​யில் பிரம்மோற்சவம்” : இந்த ஆண்டு இரண்டு பிரம்மோற்சவங்கள் : 15ம் தேதி கொடியேற்றம், 19ல் கருடசேவை...!

திருமலை ஏழுமலையான் கோவிலில் இந்த ஆண்டு இரண்டு பிரம்மோற்சவங்கள் நடைபெற இருக்கும் நிலையில், வரும் 15ம் தேதி கொடியேற்றம் நடைபெறுகிறது.
two Brahmotsavams scheduled to take place at the Tirumala Lord Venkateswara temple this year
two Brahmotsavams scheduled to take place at the Tirumala Lord Venkateswara temple this yeargoogle
1 min read

திருப்பதி பிரம்மோற்சவம்

உலகப் புகழ்பெற்ற திருப்பதி-திருமலை ஏழுமலையான் கோவிலில் நடைபெறும் விழாக்களில் முக்கியமானது பிரம்மோற்சவம். 10 நாட்கள் நடைபெறும் விழாவில் லட்சக் கணக்கானோர் பங்கேற்க, காலையும், மாலையும் பல்வேறு வாகனங்களில் மலையப்ப சுவாமி எழுந்தருளி அருள்பாலிப்பார்.

8ம் தேதி ஆழ்வார் திருமஞ்சனம்

இந்த ஆண்டு இரண்டு பிரம்மோற்சவங்கள் நடைபெற இருக்கின்றன. முதல் பிரம்மோற்சவத்திற்காக வரும் 8ம் தேதி கோயில் ஆழ்​வார் திரு​மஞ்சன நிகழ்ச்சி நடக்கிறது. வரும் 14-ம் தேதி அங்​கு​ரார்பன நிகழ்ச்சி நடை​பெறும்.

15ம் தேதி கொடியேற்றம்

இதனை தொடர்ந்து 15-ம் தேதி முதல் 23-ம் தேதி வரை தொடர்ந்து காலை 8 - 10 மணி, இரவு 7-9 வரை வாகன சேவை​கள் நடைபெறும்.

19ம் தேதி கருடசேவை

19-ம் தேதி கருட வாகன சேவை மட்​டும் அன்று மாலை 6.30 மணிக்கு தொடங்​கு​கிறது. 22-ம் தேதி தேர்த் திரு​விழா​வும், 23-ம் தேதி சக்கர ஸ்நான நிகழ்ச்சியுடன் வரு​டாந்​திர பிரம்​மோற்சவ விழா நிறை​வும் பெறுகிறது.

15ம் தேதி மாலை ஆந்​திர அரசு தரப்​பில் சுவாமிக்கு பட்டு வஸ்​திரத்தை முதல்​வர் சந்​திர​பாபு நாயுடு காணிக்​கை​யாக வழங்க உள்​ளார்.

அக்டோபரில் நவராத்திரி பிரம்மோற்சவம்

இதையடுத்​து, அக்​.12ம் தேதி முதல் 20ம் தேதி வரை நவராத்​திரி பிரம்​மோற்சவ விழா​வும் நடத்​தப்பட உள்​ளது.

விழாக்கோலம் பூணும் திரு​மலை

பிரம்​மோற்சவ விழா நெருங்​கு​வதை முன்​னிட்​டு, பல இடங்​களில் தோரணங்​கள், அலங்​கார வளைவு​கள் பொருத்​தப்​பட்டு வரு​கிறது. மாட வீதி​களில் ஜெர்​மன் ஷெட்​கள் அமைக்​கும் பணி நடை​பெற்று வரு​கிறது.

ஏழு​மலை​யான் கோயில் முகப்பு கோபுரத்​தில் மராமத்து பணி​களும், வெள்ளை அடிக்​கும்​ பணி​களும்​ நடை​பெற்று வருகிறது.

==========

logo
Thamizh Alai
www.thamizhalai.in