

விநாயகர் சதுர்த்தி 2026
முழுமுதற் கடவுளும், தடைகளை நீக்கி வாழ்வில் சகல வெற்றிகளையும் அள்ளித் தருபவருமான விநாயகப் பெருமான் அவதரித்த விநாயகர் சதுர்த்தி பண்டிகை நாடு முழுவதும் மிகக் கோலாகலமாகக் கொண்டாடப்பட உள்ளது.
ஆவணி மாதத்தில் வரும் வளர்பிறை சதுர்த்தி திதியில் கொண்டாடப்படும் இத்திருநாளில், சரியான நேரத்தையும் முறையான வழிபாட்டு முறைகளையும் பின்பற்றி வழிபடுவது குடும்பத்தில் ஐஸ்வர்யத்தையும் மகிழ்ச்சியையும் பெருக்கும்.
சிலை தேர்வு மற்றும் பூஜை செய்ய உகந்த நல்ல நேரங்கள்
விநாயகர் சதுர்த்தி வழிபாட்டிற்காக புதிய விநாயகர் சிலை வாங்குவதற்கு செப்டம்பர் 13 அன்று பகல் 3:10 மணி முதல் மாலை 4:20 மணி வரையிலும், செப்டம்பர் 14 அன்று காலை 9:10 மணி முதல் 10:20 மணி வரையிலும் உகந்த நேரமாகும்.
எந்த சிலைகளை தேர்வு செய்ய வேண்டும்
கடையிலிருந்து சிலை வாங்கும் போது அமர்ந்த நிலையில் உள்ள விநாயகர், இடம்புரித் துதிக்கை, கையில் பிரசாதம் மற்றும் அருகில் மூஷிக வாகனம் அமைந்த சிவப்பு, மஞ்சள் அல்லது ஆரஞ்சு நிற சிலைகளையே தேர்வு செய்ய வேண்டும்.
மஞ்சள் விநாயகர் சிலை
வீட்டிலேயே சுலபமாகச் சிலை செய்ய விரும்புவோர், மஞ்சள் மற்றும் தண்ணீர் சேர்த்துப் பிசைந்து அழகிய மஞ்சள் விநாயகர் உருவத்தையும் செய்யலாம்.
பூஜை செய்ய உகந்த நேரம்
வீடுகளில் பூஜை செய்து படைக்கத் திங்கட்கிழமை காலை 6 முதல் 7 மணி வரையிலும், மதியம் 12 முதல் 1 மணி மற்றும் 1 முதல் 2 மணி வரையிலும் உகந்த நேரங்களாகக் குறிக்கப்பட்டுள்ளன.
இதையும் படிங்க : லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்ட நள்ளூர் கந்தசுவாமி கோவில் திருவிழா! : யாழ்ப்பாணம் முழுவதும் பக்தி வெள்ளம்...
=======