Thaipusam 2026: தைப்பூசம் என்றால் என்ன? : வரலாறு முதல் விரதம் வரை!

Thaipusam 2026 Viratham Start Date & History in Tamil : முருகனுக்கு உகந்த நாளாக கருதப்படும் தைப்பூசம் மற்றும் விரத முறைகள் குறித்து, விரிவான தொகுப்பாக பார்க்கலாம்.
What is Thaipusam? here is Thai Poosam 2026 Meaning Viratham Start Date and End Date Full History in Tamil
What is Thaipusam? here is Thai Poosam 2026 Meaning Viratham Start Date and End Date Full History in TamilSource : Google
1 min read

தைப்பூச வரலாறு

Thaipusam 2026 Viratham Start Date & History in Tamil : சூரபத்மன் முதலான அசுரர்களை அழித்து, உலகில் தர்மத்தை நிலைநாட்டுவதற்காக அன்னை பார்வதி தேவி, சிவபெருமானின் அம்சமாக அவதரித்த முருகப்பெருமானுக்கு ஞானவேலை வழங்கிய திருநாளே தைப்பூசம் ஆகும்.

முருகனுக்கு சிறப்பான நாள்

‘தை’ மாதத்தில், 27 நட்சத்திரங்களில் எட்டாவதாகிய பூசம் நட்சத்திரம் முழுநிலவுடன் சேர்ந்து வரும் இந்த புனித நாள், முருகப்பெருமானின் மிக சிறப்பு வாய்ந்த தினமாக போற்றப்படுகிறது.

தீய சக்தி அழிந்து, ஆன்மிக ஒளி பரவும்

அசுர சக்திகளை வென்று நன்மையை நிலைநாட்டிய நாளாக இது கருதப்படுவதால், தைப்பூசம் தீய சக்திகளை அழித்து, உலகில் நல்லிணக்கத்தையும் ஆன்மிக ஒளியையும் பரப்பிய தினமாக பக்தர்களால் நினைவுகூரப்படுகிறது.

தைப்பூச நாளின் புனிதம்

அன்னை பார்வதி தேவி சிவபெருமானின் அம்சமான முருகப்பெருமானுக்கு ஞானவேலை வழங்கிய இந்த நாள், முருகனின் ஞானமும் வீரமும் ஒன்றாக வெளிப்பட்ட தினமாக விளங்குகிறது.

எனவே இந்நாள் முழுவதும் முருகனை வழிபடுவதால் தோஷங்கள் நீங்கி, வாழ்க்கையில் நன்மை பெருகும் என பக்தர்கள் நம்புகின்றனர்.

ஆன்மிக எழுச்சி நாள்

தைப்பூசம் முருக பக்தர்களுக்கு வெறும் திருநாளாக அல்லாமல், ஆன்மிக எழுச்சியை அளிக்கும் ஒரு புனித அனுபவமாகவே கருதப்படுகிறது.

இதனால், இந்நாளையே பெரும்பான்மையாக பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை தொடரவும், முடிக்கவும் இறை நம்பிக்கையுடன் இந்நாளை தேர்வு செய்து, முருகப்பெருமானை வழிபடுகின்றனர்.

தைப்பூச விரதமுறைகள்

தைப்பூசத்திற்கு அனைத்து பக்தர்களும் கட்டாயமாக 48 நாட்கள் விரதம் இருக்க வேண்டும் என்பது கிடையாது. தைப்பூச நாளான அன்றைய ஒரு தினம் மட்டும் விரதம் இருந்து முருகனை வழிபட்டாலே போதுமானது.

ஆனால் மாலை அணிந்து விரதம் இருக்கும் முருக பக்தர்கள் 60 நாட்கள் அல்லது 48 நாட்கள் வரை விரதம் இருப்பது வழக்கமாக உள்ளது. அதேபோல், குறிப்பிட்ட வேண்டுதல் ஒன்றை மனதில் கொண்டு சிலர் 48 நாட்கள் விரதம் இருப்பதும் காணப்படுகிறது.

ஒருநாள் விரதமே போதும்

இதனை தவிர, குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் போன்ற பொது பக்தர்கள் ஒரு நாள் விரதம் இருந்தாலே முருகப்பெருமானின் பூரண அருள் கிடைக்கும் என நம்பப்படுகிறது.

விரதத்தை தூய்மையில் கடைபிடியுங்கள்

தைப்பூசத்தன்று விரதமிருந்து முருகனை வழிபடுதல், காவடி எடுத்து தரிசனம் செய்வது, பழனி போன்ற முக்கிய முருகன் தலங்களுக்கு யாத்திரை செல்வது ஆகியவை வழிபாட்டு முறைகளில் முக்கிய பங்கு வகிக்கின்றன.

ஆன்மிக உணர்வு வளரும்

இவ்வழிபாடுகள் பக்தர்களின் மனதில் தன்னம்பிக்கை, பொறுமை மற்றும் ஆன்மிக உணர்வை வளர்க்கின்றன. எனவே, முடிந்த வரை விரதத்தை நாட்களில் அளவிடாமல், தொடர்ந்து ஆன்மீகத்தில், இறை தூய்மையிலும் களையாமல், திடம் கொண்டு விரதம் இருந்து முருகனை வழிபடுங்கள் என்பதே, ஆன்மீகவாதிகள் முதல் ஆன்மீக சொற்பழிவார்கள் தொடர்ந்து வலியுறுத்தும் ஒன்றாகும்.

================

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in