இந்த ஆண்டிற்கான மாசி மகம் எப்போது
Masi Magam 2026 : தமிழ் மாதங்களில் மாசி மாதம் ஆன்மிகச் சிறப்புகள் நிறைந்த புண்ணிய மாதமாக கருதப்படுகிறது. அந்த வகையில் மாசி மாதத்தில் வரும் மகம் நட்சத்திர நாள் ‘மாசி மகம்’ எனப் போற்றப்படுகிறது. இந்த ஆண்டு மாசி மகம், மாசி 18-ஆம் தேதி (02.03.2026) திங்கட்கிழமை வருகிறது
சிறப்புக்களை கூறும் மாசி மகம்
.மாசி மாதம் முழுவதும் சிவபெருமான் வழிபாடு சிறப்பு பெறுகிறது. இந்த மாதத்தில் சிவன் 63 திருவிளையாடல்களை நிகழ்த்தியதாகவும், மகாவிஷ்ணு மற்றும் பிரம்மா ஆகியோரால் அடி, முடி காணமுடியாத ஜோதி ரூபமாக காட்சி தந்ததும் மாசி மாதத்தில் தான் எனப் புராணங்கள் கூறுகின்றன.
புனித நீராடினால் புண்ணியம் தரும் மாசி மகம்
மாசி மகத் தினத்தில் கும்பகோணத்தில் உள்ள மகாமகம் குளம் மிகுந்த புனிதத் தலமாக கருதப்படுகிறது. இக்குளத்தில் கங்கை, யமுனை, சரஸ்வதி, கோதாவரி, காவிரி, சிந்து உள்ளிட்ட புண்ணிய நதிகள் அன்றைய தினத்தில் எழுந்தருவதாக நம்பப்படுகிறது.
மகத்தில் நீராடினா் பாவங்கள் போகும்
இதனால் அன்றைய தினத்தில் இந்த மகாமகம் குளத்தில் நீராடினால் அனைத்து புண்ணிய நதிகளில் நீராடிய பலன் கிடைக்கும் என்றும், பக்கதர்களால் நம்பப்டுகிறது .இதனால் தான் மாசி மகம் ‘கடலாடும் நாள்,தீர்த்தமாடும் நாள் எனவும் அழைக்கப்படுகிறது.
மாசிமகம் கூறும் புராண வரலாறு
பிரம்மஹத்தி தோஷத்தால் துன்புற்ற வருண பகவான் கடலில் கட்டுண்டு கிடந்த நிலையில் உலகில் மழை இல்லாமல் உயிர்கள் வாடியபோது, அவர் சிவபெருமானை நினைத்து வேண்டினார் என்றும் தேவர்களின் முறையீட்டின்படி சிவபெருமான் வருணனை விடுவித்ததாகவும் புராண கதை கூறுகிறது .
அந்த விடுதலை பெற்ற தினமே மாசி மகம் எனக் கருதப்படுகிறது.அன்றிலிருந்து மாசி மகத் தினத்தில் தீர்த்தமாடினால் பாவங்கள் நீங்கும் எனும் நம்பிக்கை பரவலாக உள்ளது.
மாசி மகம் விரத முறைகள்
மாசி மகத்தில் விரதம் இருப்பவர்கள் அதிகாலை எழுந்து புனித தீர்த்தங்களில் நீராடி சிவன் தலங்களுக்கு சென்று வழிபடுவது பொதுவான வழக்க நடவடிக்கையாகும் .
மதியம் ஒருவேளை சாப்பிட்டு, இரவில் பால், பழம் எடுத்துக்கொள்ளலாம். அன்றைய தினம் தேவாரம், திருவாசகம் போன்ற பாடல்களை படும்போது மனம் இறை சிந்தனைக்கு சென்று புண்ணியம் கிடைக்கும் என்றும் நம்பபடுகிறது .
இந்த விரதத்தை கடைப்பிடிப்பவர்களுக்கு குழந்தைப் பாக்கியம், குடும்ப ஒற்றுமை, சகல தோஷ நிவர்த்தி கிடைக்கும் என்பது பக்தர்களின் பிரதானமான நம்பிக்கையாக பார்க்கப்படுகிறது.