1 ரூபாயில் சென்னை முழுக்க பயணம் செய்யலாம்! ‘சென்னை ஒன்’ செயலியின் அதிரடி ஆஃபர் - புக் செய்வது எப்படி தெரியுமா?

சென்னை ஒன் செயலி மூலம் வெறும் 1 ரூபாயில் பேருந்து, மெட்ரோ மற்றும் லோக்கல் ரயில்களில் பயணிக்கும் ஆஃபரை CUMTA அறிமுகப்படுத்தியுள்ளது.
₹1 Ticket: A sensational offer from the ‘Chennai One’ app – do you know how to book it?
₹1 Ticket: A sensational offer from the ‘Chennai One’ app – do you know how to book it?soure:Ai generated
1 min read

₹1 Ticket: A sensational offer from the ‘Chennai One’ app – do you know how to book it?

ரூ.1- ல் சென்னை முழுக்க பயணம்

சென்னையில் தினசரி பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்தும் பொதுமக்களுக்கு ஒரு மிகச்சிறந்த நற்செய்தியை சென்னை ஒன் தற்போது வெளியிட்டுள்ளது.

வெறும் 1 ரூபாய் கட்டணத்தில் சென்னை மாநகரம் முழுவதும் தடையின்றிப் பயணிக்கும் புதிய அதிரடித் திட்டத்தை சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து ஆணையம் அறிமுகப்படுத்தியுள்ளது.

'ஒரு ரூபாய் டிக்கெட்' திட்டம்

சென்னையில் உள்ள பல்வேறு பொதுப் போக்குவரத்துச் சேவைகளை ஒரே தளத்தின் கீழ் கொண்டு வரும் நோக்கில் உருவாக்கப்பட்டு இயங்கிவருவது தான் நம்ம 'சென்னை ஒன்' செயலி .

இந்த செயலியை பொதுமக்கள் பயன்படுத்தி வந்தாலும் இன்னும் அதீத பொதுமக்களை சென்றடைய வேண்டும் என்ற நோக்கில், 'ஒரு ரூபாய் டிக்கெட்' என்ற சிறப்பு சலுகை தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம், பயணிகள் இச்செயலியைப் பயன்படுத்தி டிக்கெட் முன்பதிவு செய்யும் போது, ஒரே ஒரு முறை மட்டும் வெறும் 1 ரூபாய் கட்டணத்தில் பின்வரும் சேவைகளைப் பயன்படுத்திப் பயணிக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

  1. மாநகரப் பேருந்துகள்

  2. சென்னை மெட்ரோ இரயில்கள்

  3. புறநகர் மின்சார இரயில்கள்

1 ரூபாய் டிக்கெட்டை புக் செய்வது எப்படி?

பொதுமக்கள் இந்த அதிரடிச் சலுகையை மிக எளிதாகப் பயன்படுத்திக் கொள்ள செயலியில் சில எளிய வழிமுறைகள் கொடுக்கப்பட்டுள்ளன:

  • முதலில் உங்கள் மொபைலில் 'Chennai One' செயலியைத் திறந்து கொள்ள வேண்டும்.

  • நீங்கள் செல்ல வேண்டிய இடத்தைத் தேர்ந்தெடுத்து (Route & Destination) டிக்கெட் புக் செய்யும் பகுதிக்கு செல்ல வேண்டும்.

  • அடுத்து, கட்டணம் செலுத்தும் பக்கத்திற்குப் (Payment Page) போனவுடன், அங்கு வழங்கப்பட்டுள்ள 'Rs 1 Ticket Offer' என்ற ஆப்ஷனைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

  • இறுதியாக, CUMTA அமைப்பின் பிரத்யேக யுபிஐ (UPI) வசதியைப் பயன்படுத்தி ஒரே ஒரு ரூபாயை மட்டும் செலுத்தி உங்களுக்கான பயண டிக்கெட்டை உடனடியாகப் புக் செய்து கொள்ளலாம்.

ஒரே யுபிஐ...அடுத்த 6 டிக்கெட்டுகளுக்கு 20% தள்ளுபடி

இந்தத் திட்டத்தில் கூடுதல் சிறப்பாக , பயணிகள் தங்களது முதல் பயணத்திற்கான 1 ரூபாய் ஆஃபரைப் பயன்படுத்திய பிறகு, அதே யுபிஐ (UPI) ஐடியைப் பயன்படுத்தி புக் செய்யக்கூடிய அடுத்த 6 பயண டிக்கெட்டுகளுக்கு 20% வரை சிறப்புக் கட்டணத் தள்ளுபடியும் வழங்கப்படுகிறது.

=====

logo
Thamizh Alai
www.thamizhalai.in