தமிழகம் “10.62 லட்சம் கோடி கடன்” : ஒவ்வொரு குடும்பத்திற்கும் எவ்வளவு கடன் சுமை தெரியுமா...?

TN Interim Budget 2026 : தமிழக அரசின் மொத்த கடன் தொகை 10.62 லட்சம் கோடி ரூபாயாக இருக்கும் என் பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்ட நிலையில், ஒவ்வொரு குடும்பத்தின் மீதான கடன் சுமை எவ்வளவு என்று பார்ப்போம்.
10.62 lakh crore debt in the financial year 2026-2027: Do you know how much debt burden each family has in Tamil Nadu?
10.62 lakh crore debt in the financial year 2026-2027: Do you know how much debt burden each family has in Tamil Nadu?source: google
1 min read

TN Interim Budget 2026 : ரூ. 4.66 லட்சம் கடன்: தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்தின் மீதும் இவ்வளவு கடன் சுமையா?

2026-2027 இடைக்கால பட்ஜெட்

தமிழக அரசின் 2026-2027 வரும் நிதி ஆண்டிற்கான இடைக்கால பட்ஜெட்டை நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு சட்ட சபையில் தாக்கல் செய்தார்.

கடன் அதிகரிப்பு

இந்த பட்ஜெட் தாக்கலின் போது, வரும் நிதி ஆண்டின் இறுதியில் தமிழக அரசின் மொத்த கடன் 10.62 லட்சம் கோடியாக இருக்கும் என்று தெரிவித்தார்.

கணக்கு போடும் தமிழக மக்கள்

இதைத்தொடர்ந்து தமிழக மக்கள் ஒவ்வொரு குடும்பத்தின் மீதும் எவ்வளவு கடன் சுமை உள்ளது என கணக்கு போடத் தொடங்கி விட்டனர்.

மேலும் படிக்க: இந்தியாவிலேயே அதிக கடன் வாங்கிய மாநிலங்கள் : தமிழ்நாடு தான் NO.1.!

முதலில் இந்த வருடம் தமிழகத்தின் கடன்சுமை எவ்வளவு தெரியுமா?

கடந்த 2020- 2021 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை இந்திய ரிசர்வ் வங்கியின் தரவுகளின் படி இந்தியாவிலேயே அதிக கடன் சுமை கொண்ட மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் தான் தொடர்ந்து ஆறாவது முறையாக முதலிடத்தில் உள்ளது.

நடப்பு ஆண்டின் கடன் தொகை

நடப்பு நிதியாண்டிற்கான வரவு செலவு திட்ட அறிக்கையின் படி தமிழ்நாட்டிற்கான மொத்த கடன் நிலுவைத் தொகையானது ரூ. 9.30 லட்சம் கோடி முதல் ரூ.9 .56 லட்சம் கோடி வரை என கிட்டத்தட்ட 9.60 லட்சம் கோடி இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், 2025-2026 இந்த நிதியாண்டில் தமிழ்நாடு அரசு தொடர்ந்து கடன் வாங்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

வரும் நிதியாண்டில் அதிகரிக்கும் கடன் தொகை

இந்த நிலையில் தான் வரும் நிதியாண்டிற்கான தமிழக அரசின் மொத்த கடன் தொகை 10.62 லட்சம் கோடி ரூபாயாக இருக்கும் என நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியிருந்தார்.

ஒவ்வொரு குடும்பத்தின் மீதும் 4.66 லட்சம் கடன்

நிதியமைச்சரின் இடைக்கால பட்ஜெட் கூற்றுப்படி ஒவ்வொரு குடும்பத்தின் மீதும் எவ்வளவு கடன் சுமை உள்ளது என கணக்கிட்டால், ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா 4.66 லட்சம் கடன் சுமை உள்ளது.

குடும்ப அட்டைகளின் எண்ணிக்கை

எப்படியெனில் தமிழக அரசு தமிழக மக்களின் ஒவ்வொரு குடும்பத்திற்கும் குடும்ப அட்டைகளை வழங்கி உள்ளது. இதுவரை வழங்கப்பட்டுள்ள குடும்ப அட்டைகளின் எண்ணிக்கை 2.27 கோடி .

அதனால் குடும்ப அட்டைகளின் அடிப்படையில் கணக்கிட்டால் ஒவ்வொரு குடும்பத்தின் பேரிலும் 4.66 லட்சம் கடன் சுமை உள்ளது.

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in