

₹10 Extra Charge Per Bottle: Chief Minister Vijay Takes Decisive Action! District Managers Now Under Scrutiny Too!
தமிழக டாஸ்மாக் கடைகளில் நீண்டகாலமாக மதுப்பிரியர்களை வாட்டி வதைத்து வந்த "பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதல் வசூல்" விவகாரத்தில், தமிழக வெற்றிக் கழக அரசு தற்போது அதிரடியான முற்றுப்புள்ளியை வைத்துள்ளது.
பின்னணி : மதுப்பிரியர்களின் நீண்டநாள் குமுறல்
கடந்த ஆட்சிக்காலங்களில் டாஸ்மாக் கடைகளில் நிர்ணயிக்கப்பட்ட விலையை விட 10 ரூபாய் கூடுதலாக வசூலிக்கப்படுவதாகத் தொடர்ந்து புகார்கள் எழுந்தன.
பாட்டிலுக்கு 10 ரூபாய்
இது தொடர்பாக எதிர்க்கட்சிகள் கடும் விமர்சனங்களை முன்வைத்தன. குறிப்பாக, தேர்தல் பிரசாரத்தின் போது தவெக தலைவரும் தற்போதைய முதல்வருமான விஜய், "பாட்டிலுக்கு 10 ரூபாய்" எனப் பாட்டுப் பாடி பிரசாரம் செய்திருந்தார்.
டாஸ்மாக் நிர்வாகம் அதிரடி உத்தரவு
இந்நிலையில், அவர் முதல்வராகப் பொறுப்பேற்ற பிறகு இந்த விவகாரத்தில் என்ன நடவடிக்கை எடுப்பார் என்ற எதிர்பார்ப்பு நிலவிய சூழலில், டாஸ்மாக் நிர்வாகம் தற்போது அதிரடி உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளது.
கூடுதல் விலைக்கு தடை
இனி தமிழகத்தில் உள்ள எந்தவொரு டாஸ்மாக் கடையிலும் கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்யக்கூடாது எனத் திட்டவட்டமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீறினால் காத்திருக்கும் நடவடிக்கைகள் விவரம்!
பணியாளர்கள் மீது உடனடி நடவடிக்கை
நிர்ணயிக்கப்பட்ட விலையை விட ஒரு ரூபாய் கூடுதலாக வாங்கினாலும், சம்பந்தப்பட்ட கடைப் பணியாளர்கள் மீது உடனடியாக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
மாவட்ட மேலாளர்களுக்குப் பொறுப்பு
இந்த முறை கடை ஊழியர்களோடு மட்டும் நடவடிக்கை நின்றுவிடாது.
தங்கள் மாவட்டத்தில் கூடுதல் விலை விற்பனையைத் தடுக்கத் தவறும் மாவட்ட மேலாளர்கள் மீதும் கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
கண்காணிப்பு தீவிரம்
அந்தந்த மாவட்ட டாஸ்மாக் மதுபானக் கடைகளை சரியாக கண்காணிக்க வேண்டியது மாவட்ட மேலாளர்களின் நேரடிப் பொறுப்பு என அரசு தெளிவுபடுத்தியுள்ளது.
=====