உலக கேடட் செஸ் சாம்பியன்ஷிப் பதக்கம் தட்டிச் சென்ற 10 வயது சிறுமி

Sharvaanica Wins Gold At World U10 Girls Cadets Chess: உலக கேடட் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் அரியலூரை சேர்ந்த 10 வயது சிறுமியான ஷர்வானிகா, 9.0 புள்ளிகளை பெற்று சாம்பியன்ஷிப் பட்டத்தை தட்டி சென்றார்.
Sharvaanica Wins Gold At World U10 Girls Cadets Chess Championship 2025
Sharvaanica Wins Gold At World U10 Girls Cadets Chess Championship 2025
1 min read

செஸ் ரசிகர் பட்டாளம் :

Sharvaanica Wins Gold At World U10 Girls Cadets Chess : உலகம் முழுவதும் உள்விளையாட்டான செஸ் விளையாட்டுக்கு ரசிகர் பட்டாளத்தின் எண்ணிக்கை எண்ணிலடங்காதது. இதிலும் தமிழ்நாட்டில் விஸ்வநாத் ஆனந்த், குகேஷ், பிரக்யானந்தா உள்ளிட்ட செஸ் விளையாட்டு வீரர்களுக்கென தனி கூட்டமே உல்லது.

இந்நிலையில், சர்வதேச செஸ் கூட்டமைப்பு சார்பில் உலக கேடட் சாம்பியன்ஷிப் நடத்தப்பட்டது. இதில் 6 பிரிவுகளின் கீழ் நடத்தப்பட்ட போட்டியில் தமிழ்நாட்டை சேர்ந்த ஷர்வானிகா சாம்பியன்ஷிப் பட்டத்தை தட்டி சென்று தமிழகம் மற்றும் இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ளார்.

கஜகஸ்தானில் சர்வதேச செஸ் போட்டி :

சர்வதேச செஸ் கூட்டமைப்பு சார்பில் வளர்ந்து வரும் நட்சத்திரங்களுக்கான உலக 'கேடட்' சாம்பியன்ஷிப் தொடர் கஜகஸ்தானி ன் அல்மாட்டியில் நடந்தது. ஓபன், பெண்கள், 12, 10 வயது உட்பட 6 பிரிவுகளில் போட்டிகள் நடந்தன. 88 நாடுகளில் இருந்து 842 பேர் பங்கேற்றனர்.

தமிழகத்தின் ஷர் வனிகா சாம்பியன்

இதில் 10 வயதுக்குட்பட்ட பெண்கள் பிரிவில் இந்தியாவின் ஷர்வானிகா(Sharvaanica Chess Player), கியானா, திவி உள்ளிட்டோர் பங்கேற்றனர். தமிழகத்தின் அரியலுாரை சேர்ந்த ஷர்வானிகா, முதல் போட்டியில் கஜகஸ்தானின் அடெலினாவிடம் தோல்வியடைந்தார். பின் சுதாரித்துக் கொண்ட ஷர் வானிகா, தொடர்ந்து 9 போட்டியில் வெற்றி பெற்றார். கடைசி போட்டியில் தோற்ற போதும் 9.0 புள்ளி பெற்றார். மங்கோலியாவின் சின்ஜோரிக், சீனாவின் ஜிஜின் தலா 9.0 புள்ளி பெற்றனர். இருப்பினும் 'டை பிரேக்கர்' புள்ளியில் முந்திய ஷர்வானிகா, முதலிடத்தை உறுதி செய்து சாம்பியன் ஆனார்.

சாதனை பெண் ஷர்வானிகா :

கடந்த 2024 ல் அல்பேனியாவில் நடந்த உலக 'கேடட்' தொடரில் ரேபிட் பிரிவில் தங்கம், 'பிளிட்ஸ்' பிரிவில் வெள்ளி வென்றிருந்தார். 10 வயதுகுட்பட்ட ஓபன் பிரிவில் இந்தியாவின் சர்பர்தோ மணி, 8.5 புள்ளி எடுத்து, மூன்றாவது இடம் பிடித்து வெண்கலம் வசப்படுத்தினார்.

மேலும் படிக்க : FIDE Chess World Cup: 2025ல் இந்தியாவில் உலகக் கோப்பை செஸ் போட்டி.

தமிழகம் மற்றும் இந்தியா வாழ்த்து

உலக கேடட் செஸ் போட்டியில் வெற்றி பெற்ற ஷர்வானிகாவிற்கு குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் மாலை அணிவித்து வாழ்த்து தெரிவித்த நிலையில், அவர் தனது வெற்றியை பதிவு செய்து கோப்பையுடன் தமிழ்நாட்டிற்கு வந்து செய்தியாளர்களை சந்தித்த காணொளிகள் சமூக வலைதளங்களில் பரவி, கருத்துகளுடன் வைரலாகி வருகிறது.

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in