
சதுரங்க போட்டிகள் :
India To Host FIDE Chess World Cup 2025 : முளையை கூர்மைப்படுத்தும் போட்டியாக செஸ் கருதப்படுகிறது. சதுரங்கம் என்ற பெயரில் நம் நாட்டில் காலம்காலமாக இந்த போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதிகாசங்களில் ஒன்றான மகாபாரதத்தில் போருக்கான அடிப்படை காரணங்களில் கௌரவர்கள், பாண்டவர்களும் சதுரங்கம் விளையாடியதே, வினையாக முடிந்தது.
மகளிர் செஸ் போட்டி :
ஜார்ஜியாவில், பெண்களுக்கான உலக கோப்பை செஸ் தொடர் நடக்கிறது(Women Chess World Cup 2025). இந்தியாவின் வைஷாலி, ஹரிகா, ஹம்பி உள்பட 46 நாடுகளை சேர்ந்த வீராங்கனைகள் பங்கேற்று சிறப்பாக விளையாடி வருகின்றனர். இதில் ஹம்பி காலிறுதியில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறி இருக்கிறார். சர்வதேச செஸ் போட்டியில் இந்திய வீராங்கனை ஒருவர் அரையிறுதிக்கு முன்னேறுவது இதுவே முதன்முறை.
2025ல் இந்தியாவில் சர்வதேச செஸ் போட்டி :
இந்நிலையில், 2025ம் ஆண்டு ஆடவர் செஸ் உலகக்கோப்பை போட்டி இந்தியாவில் நடைபெறும் என்று சர்வதேச சதுரங்க கூட்டமைப்பு (பிடே) அறிவித்து உள்ளது. அக்டோபர் 30ம் தேதி முதல் நவம்பர் 27ம் தேதி வரை செஸ் போட்டிகள்(FIDE Chess World Cup 2025 Date) நடைபெற உள்ளன. 206 வீரர்கள் நாக் அவுட் முறையில் போட்டியிடுவார்கள். செஸ் போட்டி நடைபெறும் நகரம் உரிய நேரத்தில் அறிவிக்கப்படும்.
மேலும் படிக்க : ஃப்ரீஸ்டைல் கிராண்ட் ஸ்லாம் செஸ் : அர்ஜுன் எரிகைசி சாதனை
இந்தியர்களுக்கு செஸ் மீது அதிக ஆர்வம் :
இது குறித்து பிடே தலைமை நிர்வாக அதிகாரி எமில் ஸ்டோவ்ஸ்கி கூறுகையில், ”செஸ் போட்டிகள் மீது ஆர்வமும், அதிக ஆதரவும் கொண்ட நாடான இந்தியாவில் 2025ம் ஆண்டு செஸ் உலகக் கோப்பை போட்டி(India Host FIDE Chess World Cup 2025) நடக்க இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது” என்றார். 2022ம் ஆண்டு சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் 150 நாடுகளை சேர்ந்த வீரர்கள் பங்கேற்ற சர்வதேச ஒலிம்பியாட் போட்டிகள் நடந்தது குறிப்பிடத்தக்கது.
====