

அன்பில் மகேஷ் வெளியீடு
10th 12th Exam Date 2025 Tamil Nadu : சென்னையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் இன்று செய்தியாளர்களை சந்தித்து வெளியிட்ட அறிவிப்பில், “2026-ம் ஆண்டு மார்ச் 2-ம் தேதி முதல் மார்ச் 26-ம் தேதி வரை 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு நடைபெறும். பிளஸ் 2 செய்முறை தேர்வுகள் பிப்ரவரி 9 முதல் பிப்ரவரி 14-ம் தேதி வரை நடைபெறும். மே.8-ம் தேதி பிளஸ் 2 பொதுத் தேர்வுக்கான முடிவுகள் வெளியாகும்.
பிளஸ் 1 தேர்வு
மார்ச் 3-ம் தேதி முதல் மார்ச் 27-ம் தேதி வரை பிளஸ் 1 தேர்வுகள் நடைபெறும்(11th Exam Date 2025 in Tamil Nadu). 11-ம் வகுப்பில் தவறிய மாணவர்களுக்கு மார்ச் 3-ம் தேதி முதல் மறுதேர்வு நடைபெறும். 11-ம் வகுப்புக்கான செய்முறைத் தேர்வுகள் பிப்ரவரி 16 முதல் பிப்ரவரி 21 வரை நடைபெறுகிறது.
10 ஆம் வகுப்பு தேர்வு
மார்ச் 11-ம் தேதி முதல் ஏப்ரல் 6-ம் தேதி வரை 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறும்(10th Exam Date 2025 in Tamil Nadu) எனவும் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் மே 20-ம் தேதி வெளியாகிறது. 12-ம் வகுப்பு பொதுத் தேர்வை 8.07 லட்சம் மாணவர்களும், 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை 8.70 லட்சம் மாணவர்களும் எழுத உள்ளனர்.
மேலும் படிக்க : 11th Exam : 11-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து! அரசாணை வெளியீடு!
தேர்வு அட்டவணை வெளியீடு
கணக்குப்பதிவியல் தேர்வுகளுக்கு மாணவர்கள் கால்குலேட்டர் எடுத்துச் செல்லலாம். ஒவ்வொரு தேர்வுக்கும் 3 முதல் 5 நாட்கள் இடைவெளி இருக்கும் வகையில் தேர்வு அட்டவணை வடிவமைக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.