10th exam result :வெளியானது பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள்
தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று (மே 20) வெளியானது. தேர்வு எழுதிய மாணவர்களில் 94.31 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர் என பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது. மேலும் தேர்வு முடிவுகளை பள்ளிக் கல்வி அமைச்சர் ராஜ்மோகன் வெளியிட்டார்.
8.82 லட்சம் தேர்வை எதிர்கொண்டனர்
தமிழக பள்ளிக் கல்வி பாடத் திட்டத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு (மார்ச் 2026) கடந்த மார்ச் 11-ம் தேதி தொடங்கி கடந்த ஏப்.6-ம் தேதி நிறைவடைந்தது. இந்த தேர்வை சுமார் 8.82 லட்சம் மாணவர்கள் எதிகொண்டனர் .
தொடர்ந்து விடைத்தாள் திருத்த பணிகள் தொடங்கி நிறைவடைந்தது. இந்நிலையில், இன்று சென்னை - அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் தேர்வு முடிவுகளை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் வெளியிட்டார்.
94.31 சதவீதம் பேர் தேர்ச்சி
நடந்து முடிந்த பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகி இருக்கும் நிலையில் ,மொத்தம் 8.82 லட்சம் மாணவர்கள் இந்த தேர்வை எழுதியதாக அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்தார். இதில் 94.31 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர் என அவர் தெரிவித்தார்.
மாணவிகளே அதிக அளவில் தேர்ச்சி
வழக்கம்போலவே இந்த முறையும் தேர்ச்சி விகிதத்தில் மாணவர்களை காட்டிலும் மாணவிகளே அதிக மதிப்பெண் பெற்று அசத்தி உள்ளனர் . தேர்ச்சி பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை 92.15 சதவீதம், மாணவிகளின் எண்ணிக்கை 96.47 சதவீதம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் மாணவர்களை விட 4.32 சதவீதம் அதிகமாக மாணவிகள் தேர்ச்சி பெற்றிருக்கின்றனர்.
அரசுப்பள்ளி : 91.66 தேர்ச்சி விகிதம்
பத்தாம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவ மாணவிகளில் அரசு பள்ளிகளின் ஒட்டுமொத்த தேர்ச்சி விகிதம் 91.66 சதவீதம் என பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது.
================