12ம் வகுப்பு பொதுதேர்வு
தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு கடந்த மார்ச் 2 ஆம் தேதி முதல் மார்ச் 26 ஆம் தேதி வரை நடைபெற்றது.
இத்தேர்வை மாநிலம் முழுவதும் அமைக்கப்பட்ட 3,412 தேர்வு மையங்களில் 8 லட்சத்து 27,475 மாணவ, மாணவிகள் எழுதினர்.
மாணவிகளே அதிக சதவிகிதம் தேர்ச்சி
தேர்வு எழுதியவர்களில் 95.2% மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்கள் 93.19% பேரும், மாணவிகள் 97% பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த் ஆண்டு அதிக அளவில் மாணவிகளே தேர்ச்சி
முடிவுகள் வெளியிடு : ஈரோடு மாவட்டம் முதலிடம்
மாவட்ட வாரியாக தேர்ச்சி விகிதத்தில் 98.87 சதவிகிதத்துடன் ஈரோடு முதலிடமும், சிவகங்கை 98.05 சதவிகிதத்துடன் இரண்டாமிடத்திலும், கன்னியாகுமரி 97.63 சதவிகிதத்துடன் மூன்றாமிடமும், திருநெல்வேலி 97.54 சதவிகிதத்துடன் நான்காம் இடத்திலும், திருச்சி 97.50 சதவிகிதத்துடன் ஐந்தாம் இடமும் பெற்றுள்ளன.
முடிவுகளை இணையதளம் வாயிலாக தெரிந்து கொள்ளலாம்
12ம் வகுப்பு பொது தேர்வுகான முடிவுகளை tnresults.nic.in, dge.tn.gov.in, results.digilocker.gov.in
ஆகிய இணையதளங்களில் தெரிந்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது
மேலும், வாட்ஸ்அப் எண்ணிலும் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளும் வசதி செய்யப்பட்டுள்ளது.
வாட்ஸ் ஆப் செயலியிலும் தெரிந்துகொள்ளலாம்
வாட்ஸ் ஆப் செயலியில் 7845252525 என்ற எண்ணை உங்கள் தொலைபேசி எண் தொடர்புகளில் சேமித்து வைத்து அந்த எண்ணில் h எனப் பதிவிட்டு பின்னர் வரும் செய்தியில் துறையின் பெயர், தேர்வர்களின் வகுப்பை தெரிவு செய்தால், தொடர்ந்து வரும் பதில் செய்தியில் தேர்வெண்,
பிறந்த தேதியை உள்ளீடு செய்து அனுப்பினால் தேர்வர்களின் தேர்வு முடிவுகள் அதே வாட்ஸ் ஆப் செயலி உரையாடல் மூலம் கண்டறியலாம்.
இந்த ஆண்டு முதல் முறையாக தமிழ்நாடு மின் ஆளுமை முகமை மூலம் வாட்ஸ் ஆப் செயலியில் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
நூறுக்கு நூறுக்கு மதிப்பெண் தேர்ச்சி பட்டியல்
தமிழ் மொழி பாடத்தில் 83 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தொடர்ந்து ஆங்கிலம் -21, இயற்பியல் - 105, வேதியியல் - 632
கணினிப் பயன்பாடுகள் - 2,099, வணிகக் கணிதம் மற்றும் புள்ளியியல் - 463
,விலங்கியல் - 18,கணினி அறிவியல் - 6,945,வணிகவியல் - 683,கணக்குப் பதிவியல் - 1,946
பொருளியல் - 440, வரலாறு - 282
ஏதேனும் ஒரு பாடத்தில் 100 மதிப்பெண்கள் பெற்ற மாணாக்கர்களின் - 16,024
ஏதேனும் ஒரு பாடத்தில் 100 மதிப்பெண்கள் பெற்ற அரசுப் பள்ளிமாணாக்கர்களின் எண்ணிக்கை - 1,865. ஆகிய விகித்தில் உள்ளனர்
தலைவர்கள் வாழ்த்து
12ம் வகுப்பு பொதுதேர்வு முடிவுகள் வெளியாகி இருக்கும் நிலையில் , தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர் , திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்திருக்கும் வாழ்த்து செய்தி குறிப்பில்
அன்பில் மகேஸ் தொடர்புகொண்டு, சென்ற ஆண்டைவிட அதிகமான மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்று பெருமிதத்தோடு கூறியபோது, பெருமகிழ்ச்சி அடைந்தேன்.
மாணவச் செல்வங்கள், வாழ்வில் மேன்மையடைய மேற்படிப்புகளில் மேலும் கவனம் செலுத்திப் படியுங்கள். இத்தேர்வில் இம்முறை தேர்ச்சி பெறத் தவறியவர்கள் மனம் தளர வேண்டாம்; உங்களுக்கான அடுத்தடுத்த வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொண்டு முன்னேறுங்கள்.
கல்வியே வாழ்வின் வெற்றிக்குத் துணை" என்று கூறியுள்ளார்.
எடப்பாடி பழனிசாமி வாழ்த்து
தொடர்ந்து அதிமுக தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ள குறிப்பில் இன்று +2 தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், தேர்ச்சி பெற்ற மாணவச் செல்வங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள்.
உங்கள் கனவுகளை நோக்கிய உயர்கல்விப் பயணத்தை மிகுந்த கவனத்தோடு தேர்ந்தெடுங்கள். தங்கள் பெற்றோர் மற்றும் அனுபவமிக்க ஆசிரியர்களின் ஆலோசனைகளைக் கேட்டுக்கொண்டு, சரியான பாதையைத் தேர்ந்தெடுங்கள்.
அதேபோல், இந்த தேர்வில் தேர்ச்சி அடையத் தவறிய மாணவர்கள் துவண்டுவிட வேண்டாம். வாழ்க்கை எந்த கதவையும் எப்போது வேண்டுமானாலும் திறக்கலாம். அதனால், நன்கு படித்து, துணைத் தேர்வுகள் வாயிலாக தேர்ச்சி அடையுங்கள் என உங்களுக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
==========