

காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் பகுதியில், டாஸ்மாக் கடைகளில் வசூலான சுமார் ரூ.1.5 கோடி பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வசூல் பணத்தை கொண்டு சென்ற வாகனத்தை நோட்டமிட்ட மர்ம கும்பல், ஓட்டுநரின் கவனத்தைத் திசைதிருப்பி இந்தக் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.
இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக ஒரகடம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, கொள்ளையர்களைப் பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
சம்பவம் நடந்த பகுதிகள் மற்றும் கார் கைவிடப்பட்ட இடங்களில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும், இந்த கொள்ளை திட்டமிட்டு அரங்கேற்றப்பட்டதா என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது.
கொள்ளைச் சம்பவம் நடைபெற்ற பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.
கொள்ளையர்கள் பயன்படுத்திய வாகனம், அவர்கள் வந்த வழி உள்ளிட்ட விவரங்களை கண்டறிய விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும், கொள்ளையடிக்கப்பட்ட பணம் எங்கு கொண்டு செல்லப்பட்டது என்பது குறித்தும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
டாஸ்மாக் வசூல் பணம் கொண்டு செல்லப்படுவது குறித்து முன்கூட்டியே தகவல் தெரிந்த நபர்கள் இந்த சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது.
இவ்வளவு பெரிய தொகை கொள்ளையடிக்கப்பட்டுள்ளதால், சம்பவத்தில் தொடர்புடைய மர்ம நபர்களைபிடிக்க போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த கொள்ளைச் சம்பவம் தொடர்பாக, ஒரகடம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் குற்றப பின்னணி கொண்ட நபர்களிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஏற்கெனவே இதுபோன்ற குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் யாரேனும் இந்த கொள்ளையில் தொடர்புடையவர்களா என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது.
5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ள நிலையில், கொள்ளையில் ஈடுபட்ட மர்ம நபர்களைகைது செய்ய போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.
====================