காவிரியில் 15 ஆயிரம் கனஅடி நீர் திறப்பு : கர்நாடக அரசு நடவடிக்கை..! : 17ல் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு

சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு விசாரணைக்கு வரவுள்ள நிலையில், கபினி மற்றும் கே.ஆர்.எஸ். அணைகளில் இருந்து தமிழகத்திற்கு 15 ஆயிரம் கனஅடி நீரை கர்நாடகா திறந்துவிட்டுள்ளது.
15,000 cusecs of water released into the Cauvery: Karnataka government takes action!
15,000 cusecs of water released into the Cauvery: Karnataka government takes action!source: google
1 min read

With the case set to come up for hearing in the Supreme Court, Karnataka has released 15,000 cubic feet of water per second to Tamil Nadu from the Kabini and KRS dams.

காவிரியிலிருந்து தண்ணீர் திறப்பு

சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு விசாரணைக்கு வரவுள்ள நிலையில், கபினி மற்றும் கே.ஆர்.எஸ். அணைகளில் இருந்து தமிழகத்திற்கு 15 ஆயிரம் கனஅடி நீரை கர்நாடகா திறந்துவிட்டுள்ளது.

கர்நாடக அரசு கபினி மற்றும் கே.ஆர்.எஸ். அணைகளில் இருந்து காவிரியில் தண்ணீரைத் திறந்துவிட்டுள்ளது. கபினியிலிருந்து வினாடிக்கு 12 ஆயிரம் கனஅடியும், கே.ஆர்.எஸ். அணையில் இருந்து 3 ஆயிரம் கனஅடியும் திறக்கப்படுவதால், தமிழகத்திற்கு மொத்தம் 15 ஆயிரம் கனஅடி நீர் வரவுள்ளது.

நிலுவையில் உள்ள நீர் அளவு

ஜூன் முதல் ஆகஸ்ட் 9 வரை பிளிகுண்டுலு அளவீட்டின்படி தமிழகத்திற்குப் பெற வேண்டிய 53.721 டி.எம்.சி. நீருக்கு பதிலாக 10.386 டி.எம்.சி. நீர் மட்டுமே வந்து சேர்ந்துள்ளது. காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் உத்தரவைக் கர்நாடகா முறையாக அமல்படுத்தவில்லை.

ஒழுங்காற்றுக் குழுவின் பரிந்துரை

தமிழகத்தின் கோரிக்கையை அடுத்துக் கூடி காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு, 15 நாட்களுக்கு வினாடிக்கு 12 ஆயிரம் கனஅடி நீரை (15.552 டி.எம்.சி.) மட்டுமே திறக்கக் கர்நாடகாவிற்குப் பரிந்துரைத்தது.

சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனு

இந்த அளவு விவசாயத் தேவைகளுக்குப் போதாது எனக் கூறி, நிலுவை நீர் மற்றும் வழக்கமான நீர் சேர்த்து கர்நாடகாவிடமிருந்து 37 டி.எம்.சி. நீரைப் பெற உத்தரவிடக் கோரி மூத்த வழக்கறிஞர்கள் சி.எஸ். வைத்திநாதன், ஜி.உமாபதி, வழக்கறிஞர் பி.கருணாகரன் ஆகியோர் சுப்ரீம் கோர்ட்டில் மனுத் தாக்கல் செய்தனர்.

உச்ச நீதிமன்ற விசாரணையின் பின்னணி

தமிழக அரசு தாக்கல் செய்த வழக்கு நாளை மறுநாள் சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வர உள்ள நிலையில், கர்நாடக அரசு காவிரியில் தண்ணீரைத் திறந்துவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

=====

logo
Thamizh Alai
www.thamizhalai.in