2026 Assembly Elections: The Complete List of Seeman's Released Election Manifesto!
2026 Assembly Elections: The Complete List of Seeman's Released Election Manifesto!source : google

”தமிழ்நாட்டிற்கு 5 தலைநகரங்கள் : விவசாயிகளுக்கு பென்ஷன், மதுக்கடைகள் மூடல்” : நாம் தமிழர் தேர்தல் அறிக்கை!

தமிழகத்தில் நாம் தமிழர் கட்சியின் ஆட்சி அமைந்தால் தன்னலமற்ற, அன்பான சர்வாதிகார ஆட்சி நடைபெறும்.
Published on

நாம் தமிழர் கட்சியின் தேர்தல் அறிக்கை

நாம் தமிழர் கட்சியின் தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ள வாக்குறுதிகளின் லிஸ்ட்!

  • தமிழகத்தில் நாம் தமிழர் கட்சியின் ஆட்சி அமைந்தால் தன்னலமற்ற, அன்பான சர்வாதிகார ஆட்சி நடைபெறும்.

  • முதன்மையாக 5 தலைநகரங்கள் உருவாக்கப்படும்

  • மொழி, கலை மற்றும் பண்பாட்டுத் தலைநகராகமாக மதுரையும், தொழில்நுட்பத் தலைநகராக சென்னையும், தொழில் தலைநகராக கோவையும், தமிழர் மெய்யியல் தலைநகராக கன்னியாகுமரியும், நிர்வாகத் துறை தலைநகராக திருச்சியும் உருவாக்கப்படும்.

  • மேலும், தலைமைச் செயலகம் மற்றும் சட்டப்பேரவை திருச்சிக்கு மாற்றியமைக்கப்படும்.

  • தமிழகத்தில் படிக்காதவரே இல்லை என்ற நிலை உருவாக்கப்படும்.

  • ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பயிற்சி முறை கல்வி வழங்கப்படும்.

  • தமிழகத்தில் அனைவருக்கும் அரசு வேலை வழங்கப்படும்.

  • பல கோடி ரூபாயில் பனைத்திட்டம் செயல்படுத்தப்படும்.

  • மத்திய அரசை விட மாநில அரசுகளுக்கு அதிக அதிகாரங்களை வழங்கும் சட்ட மாற்றங்களுக்காக பாடுபடுதல்

  • 60 வயதிற்கு மேற்பட்ட விவசாயிகளுக்கு ஓய்வூதியம் வழங்கப்படும்.

  • ஓராண்டில் மதுக்கடைகள் படிப்படியாக மூடப்படும்.

  • குடிநீர் விற்பனைக்கு தடை

  • 2,300 டிஎம்சி மழைநீர் வீணாக கடலில் கலப்பதைத் தடுக்க திட்டங்கள்

  • மாநில அரசு வசூலிக்கும் வரிகளில், மத்திய அரசுக்கு 25 சதவீதம், மாநில அரசுக்கு 75 சதவீதம் வழங்க வலியுறுத்தப்படும்.

  • தமிழகத்தில் வாக்குப்பதிவை கட்டாயமாக்கும் வகையில், நூறு சதவிகிதம் வாக்களித்தற்கான அரசு சான்றிதழ் இருந்தால் மட்டும் தான் அரசு சலுகைகள் வழங்கப்படும்.

  • மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு பதில், வாக்குச் சீட்டு முறை கொண்டுவரப்படும்.

  • மூன்று சட்டமன்றத் தொகுதிகளுக்கு ஒரு நாடாளுமன்ற தொகுதி கொண்டு வரப்படும்.

  • நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற தேர்தலில் பெண்களுக்காக தனித் தொகுதி.

  • விளையாட்டுத் துறைகளில் சமமான வாய்ப்பு வழங்கப்படும்.

  • மாற்றுத் திறனாளிகளுக்கு தனி அமைச்சகம், மற்றும் உள்ளாட்சியில் ஐந்து சதவிகித இட ஒதுக்கீடு.

logo
Thamizh Alai
www.thamizhalai.in