சிறப்பு பேருந்துகள் இயக்கம்
தமிழ் புத்தாண்டு மற்றும் தொடர்ச்சியான வார இறுதி விடுமுறையை கருத்தில் கொண்டு ,தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு பயணம் செய்யும் பொதுமக்கள் நலனை கருதி கொண்டு கூட்ட நெரிசலை தவிர்க்கவும் ,
தமிழ்நாடு அரசு போக்குவது கழகம் அறிவுறுத்தலின்படி , அரசு விரைவு போகுவரத்துகளை அதிகரித்துள்ளது
சென்னையிலிருந்து கூடுதல் பேருந்துகள் இயக்கம்
வழக்கமாக இயங்கும் பேருந்து சேவைகளுக்கு பதிலாக ,தற்போது அதிகமான பேருந்துகள் இயக்கப்பட உள்ளன .
குறிப்பாக சென்னை மற்றும் பிற முக்கிய நகரங்களில் இருந்து மக்கள் அதிகம் பயணம் செய்யும் இடங்களை கருத்தில் கொண்டு திட்டமிடப்பட்ட இந்த நடவடிக்கை, எடுக்கபட்டுள்ளது
சென்னையிலிருந்து இயக்கப்படும் பேருந்துகள்
அதன்படி சென்னை கிளாம்பாக்கம் முனையத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோவை, சேலம், ஈரோடு, திருப்பூர் போன்ற
முக்கிய நகரங்களுக்கு 575 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவித்துள்ளது . இதே வழித்தடத்தில் சனிக்கிழமையும் கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன
விடுமுறைக்கு பிறகு இயக்கப்படும் பேருந்துகள்
விடுமுறை முடிந்து சென்னை மற்றும் இதர நகரங்களுக்கு திரும்பும் பயணிகளின் வசதிக்காகவும் . ஞாயிற்றுக்கிழமை மற்றும் தமிழ் புத்தாண்டு நாளான
ஏப்ரல் 14 ஆகிய தினங்களில், மாநிலத்தின் பல பகுதிகளில் இருந்து சென்னை மற்றும் பெங்களூரு நோக்கி 735 பேருந்துகள் இயக்கப்படவுள்ளது குறிபிடத்தக்கது