டாஸ்மாக் ஊழியர்களுக்கு 25% ஊதிய உயர்வு : எம்​ஆர்பி விலையைவிட கூடுதலாக வசூலித்தால்? : அமைச்சர் விக்னேஷ் வார்னிங்...!

டாஸ்​மாக் ஊழியர்​களுக்​கும், அவர்​கள் குடும்​பத்​தினருக்​கும் இஎஸ்ஐ மருத்​துவ வசதி வழங்​கப்​படும் என்று அமைச்சர் தெரிவித்திருக்கிறார்
25% salary hike for TASMAC employees; action to be taken if amounts exceeding MRP are charged: Minister Vignesh.
25% salary hike for TASMAC employees; action to be taken if amounts exceeding MRP are charged: Minister Vignesh.google
1 min read

டாஸ்மாக் ஊழியர்களுக்கு 25 சதவீதம் ஊதிய உயர்வு

டாஸ்​மாக் ஊழியர்​களுக்கு 25 சதவீதம் ஊதிய உயர்வு வழங்​கப்​படு​வ​தாக​வும், இனி கூடு​தல் விலைக்கு விற்​பனை செய்யப்​பட்​டால் கடும் நடவடிக்கை எடுக்​கப்​படும் எனவும் அமைச்​சர் விக்​னேஷ் தெரி​வித்துள்ளார்

செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர்

டாஸ்​மாக் துறை​யில் பல்​வேறு மாற்​றங்​கள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் , எம்​ஆர்பி விலை​யை​விட கூடு​தலாக ரூ.10 வசூலித்தாக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்திருக்கிறார்

திருத்தப்பட்ட ஊதிய உயர்வு

அதன்​படி உதவி விற்​பனை​யாளர்​களுக்கு தற்​போதைய ரூ.14,340-ல் இருந்து ரூ.17,925 ஆகவும், விற்​பனை​யாளர்​களுக்கு ரூ.15,530-ல் இருந்து ரூ.19,413 ஆகவும், மேற்​பார்​வை​யாளர்​களுக்கு ரூ.17,850-ல் இருந்து ரூ.22,313 ஆகவும் ஊதி​யம் உயர்த்​தப்​படு​கிறது.

அரசுக்கு ரூ.110.74 கோடி செலவு

இதன்​மூலம் அரசுக்கு ரூ.110.74 கோடி கூடு​தல் செல​வாகும். டாஸ்​மாக் ஊழியர்​களின் மொத்த ஆண்டு ஊதி​யச் செலவு ரூ.553.72 கோடி​யாக உயர்​கிறது. இனி டாஸ்​மாக் ஊழியர்​களுக்​கும், அவர்​கள் குடும்​பத்​தினருக்​கும் இஎஸ்ஐ மருத்​துவ வசதி வழங்​கப்​படும் என்று அமைச்சர் உறுதியளித்துள்ளார்

ஆகஸ்ட் முதல் அமலுக்கு வரும்

மேலும் ஊதிய உயர்​வுக்​காக மது​பான விலை உயர்த்​தப்​ப​டாது இந்த திருத்தப்பட்ட . ஊதிய உயர்வு ஆகஸ்ட் மாதம் முதல் அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது

கூடுதல் விலைக்கு விற்றால் நடவடிக்கை

அரசு நிர்ணயித்த விலைக்கே மது​பானங்​கள் விற்​கப்பட வேண்​டும்.முன்​ன​தாக கூடு​தல் தொகை வசூலித்​தவர்​களுக்கு அபராதம் விதிக்​கப்​பட்​டது

தற்​போது இடைநீக்​கம் செய்​யப்​படு​கிறது. அதே குற்​றத்தை மீண்​டும் செய்​தால் பணிநீக்​கம் வரை நடவடிக்கை எடுக்​கப்​படும். எனினும், ஊதிய உயர்​வுக்​காக மது​பான விலை உயர்த்​தப்​ப​டாது என்று அமைச்சர் விக்னேஷ் தெரிவித்தார்

===================

logo
Thamizh Alai
www.thamizhalai.in